வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்r வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான் வானவிச்சாதிர நாடாழ்வான் போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர். சேரர் நாடு என்று அழைக்கபடும் கேரளாவில் ஓனம் நன்னாளில் சேர அரசன் மாவலி என்ற மகாபலி மக்களை கான வருவதாக நம்பிக்கை. அதன் திருவிழாவே திருவோணம். பிற்கால வாணர்கள் பலர் தங்களை வேட்வதிரையர்,குறும்பகோலர்,மறவர்,மலையமான்,சுருதிமான்,வன்னியன்,முத்தரையர் என்ற பல பெயரில் அழைக்கபட்டனர். வாணர் என்ற அரசர்கள் ஒரே சாதியர் அல்லர்.ஒரு காலத்தில் சோழரையும்,கங்கரையும்,பாண்டியரையும் வாணர் வீழ்தினர் என சிலர் கூறுவர். தென்காசி பாண்டியன் இறந்தவுடன் மாவலிக்கு பாண்டிய பட்டம் கட்டினர் என்றும் கயத்தாறு வெட்டும் பெருமாள் "வெட்டு மாவலி" வம்சத்தினர் என்பது ஒரு சிலரின் கருத்து. ஒரு காலத்தில் கங்க மன்னனுக்கு கட்டுபட்டு வாழ்ந்த வாணர் தங்களை "மகாபலிகுல சத்திரியர்" என கூறுவதாக கங்க மன்ன செப்பேடு கூறுகிறது.
சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை
செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.
கல்வெட்டு:
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து
சேவகன் .........