பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்
தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில
கிடைத்துள்ளன.
தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்
கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,
மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்
காலம் : 12- ஆம் நூற்றாண்டு
இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்
செய்தி:
மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு
எடுத்த முழம் கல் ஒன்று
கல்வெட்டு:
இது தெற்கில் நிலை மறவரில் பெற்றான் சொக்கன் செய்வித்த
கல் முழம் ஒன்று
திருநெல்வேலி மாவட்டமான திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் கல்வெட்டில்,
மன்னன் : கோனிரின்மை கொண்டான் பாண்டியர்
காலம் : 13- ஆம் நூற்றாண்டு
இடம் : நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டம்
செய்தி:
திருநந்தவனத்திற்காக நிவந்தனமாக விடப்பட்ட நிலம் பற்றிய செய்தி.
இதை அமைத்தவர் ஆண்டார் மறவர் நெறிகட்டினார்.
கல்வெட்டு:
திரிபுவன சக்கரவர்திகள் கோனிரின்மைகொண்டான் ...கீழ் வெம்ப
நாட்டு... சுந்தரபாண்டியன் நந்தவனம் செய்யும் ஆண்டார்
மறவர் நெறிகட்டினார் உள்ளிட்ட...
நன்றி:
தென் இந்திய கல்வெட்டுகள்