
தமிழ் மண்ணில் இது போன்ற செயல் சோழர், பாண்டியர்க்கு இடையில் நடந்த போர்களில் நடந்து உள்ளது.

சோழன் பாண்டிய நாட்டில் மீது போர் தொடுத்து பாண்டியன் மகனின் மூக்கையும், அவனுக்கு உதவி செய்த படைத்தலைவர்கள் மூக்கையும் அறுத்த செய்தியை சில கல்வெட்டுகள் சொல்கிறது.(1).

ஆனால் உச்சகட்டமாக ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என கண்ணில் படும் அனைவரின் மூக்கை அறுத்த கொடூரமும் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது.

இதைபற்றி சேலம் மாவட்டம் ஆறகளூர் கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் சில கல்வெட்டுகளை கண்டறிந்து "ஜன்னல்" இதழில் வெளியிட்டுள்ளார்.
திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசு வலுவிளக்க தொடங்கியது.திருமலை நாயக்கரின் ஆரம்ப காலத்தில்(1625) மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல் வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நயக்கரும் வீழ்த்தினர்.(2) பின் விஜய நகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மதுரை, தஞ்சை செஞ்சி ஆகிய நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும் விஜயநகர அரசன் மற்றும் மைசூர் அரசன் ஆகியோர் படைக்கும் போர் நடக்கிறது. நாயக்கர் கூட்டணி பீஜப்பூர் சுலதான் உதவியுடன் விஜய நகர் அரசை வீழ்த்தி சுதந்திர நாடாக மாற்றம் பெருகிறது.

இதில் மைசூர் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்படுகிறது. விஜய நகர அரசர் மைசூர் அரசனிடம் தஞ்சம் அடைகிறார்(3) .
1656 ஆம் ஆண்டு இரண்டு முறை வீழ்த்தபட்டதுக்கு பழிக்குப்பழிவாங்கவும் முயற்ச்சியிலும்,விஜய நகர் அரசை மீண்டும் தோற்றுவிக்கும் முயற்ச்சியிலும் திருமலை நாயக்கர் ராஜியத்தின் மீது மைசூர் அரசர் கந்தரூவ நரசராஜா போர் தொடுக்கிறார்.(4)
மைசூர் அரசனின் தளபதி கொம்பையா திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான சத்திய மங்கலத்தை கைபற்றுகிறான்(இன்றய சேலம் மாவட்டம்). சத்தியமங்கலத்துக்குள் நுழைந்த கன்னட வடுகப்படை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தாக்கியது.
தாக்கப்பட்டவர் மூக்குகள் மேலுதடுடன் சேர்த்து அறுக்கப்பட்டு சாக்கில் போடப்பட்டு அரசரின் பார்வைக்கு அனுப்பட்டது.
இதையடுத்து தொடர்ச்சியாக பல ஊர்களை தாக்கி திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை.(5) திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத திருமலை நாயக்கர் காட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்கிறார்.(6)


நிலமை கைமீறியதை உணர்ந்த திருமலை நாயக்கர் நேரடியாக அல்லாமல் தன் மனைவி மூலம் தன் நாட்டிற்க்கு ஏற்பட்டிருக்கும் அவளத்தை சேதுபதி ரகுநாத தேவருக்கு எடுத்து சொல்லி உதவுமாறு கோரிக்கை வைக்கிறார். (7)

திருமலை நாயக்கரின் தொடக்க காலத்தில் தன் முன்னோருடம் போர் நடந்த போதிலும்,ஒரு சுமூகமான நிலமை இரு நாட்டிற்க்கும் இல்லாத போதிலும் மதுரை சீமையின் பொது மக்கள் தாக்கப்படப்போகும் அபாயத்தையும்,
விஜய நகர அரசோ மைசூர் அரசோ மதுரையில் நிலைபெற்றால் அவர்களுடன் பெரும் போர் நடந்த வேண்டி இருக்கும் என்பதை சேதுபதி ரகுநாத தேவர் நண்கு உணர்ந்து இருந்தார்.எல்லாம் முடிந்துவிட்டது மதுரை இனி அவளவு தான் என்ற நிலையில் மறவர்களிடம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கிறது. (8)
சிறிதும் தாமதிக்காமல் ஒரே நாளில் இருபத்து ஐயாயிரம்(25000) மறவர்களை திரட்டிக்கொண்டு மதுரையை அடைந்தார் சேதுபதி ரகுநாத தேவர்.
மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் மறவர்கள் நின்றார்கள்.(வெறும் ஆறு மணிநேரத்தில் இருபத்தி ஐந்து ஆயிரம்(25000) மறவர்களுடன் சேதுபதி மதுரையை அடைந்ததாக சொல்லப்படுகிறது) (9) சேதுபதி ரகுநாத தேவர், நாலுகோட்டை சீமையின் தலைவர் மதியாரழக தேவர், (சிவகங்கை சீமையை உருவாக்கிய சசிவர்ண தேவரின் முன்னோர்), படமாத்தூர் சீமை தலைவர் பொய்யாரழகத்தேவர்(மதியாரழகரின் தம்பி,கௌரி வல்லபதேவரின் முன்னோர்) மதுரை கிழக்கு பகுதியான வண்டியூரில் முகாமிட்டு இருந்தனர்.(10)

சேதுபதியின் படையில் இருபத்தைந்து ஆயிரம்(25000) மதுரை படையில் சேர்ந்த முப்பத்தைந்து ஆயிரம்(35000) என மொத்தம் அறுபது ஆயிரம் (60000) எண்ணிக்கையிலான படைக்கு தலைமை தாங்கிய சேதுபதி கன்னட படையின் மதுரை முற்றுகையை தகர்த்தார்.
மைசூர் வடுகப்படை திண்டுக்கல் நோக்கி விரட்டி அடிக்கப்படுகிறது.(11) சேதுபதியின் படைக்கு முன் தன்னை பலவீனமாக உணர்ந்த மைசூர் தளபதி கூடுதல் படை வேண்டும் என மைசூருக்கு தகவல் அனுப்புகிறான்.
அதே நேரம் மதுரை படையில் இருந்த ஒரு பிராமண தளபதிக்கு கையூட்டு(லஞ்சம்) கொடுக்கிறான்.
கையூட்டு பெற்ற பிராமண தளபதி சண்டை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தான்.(மதுரை படை சரணடைகிறது என அறிவித்ததாக சில ஆவணங்கள் சொல்கிறது).
இது மறவர்களை மிகவும் ஆத்திரம் அடையச்செய்தது.(12) பொறுமை இழந்த மறவர்கள் துரோகம் இழைந்த அந்த பிராமண தளபதியை நிலவறையில் அடைத்துவிட்டு மைசூர் வடுகப்படையை மேல் பாய்ந்து அதனை துண்டு துண்டாகவெட்டி வீழ்த்த ஆரமித்தனர்.(13)
மைசூர் படை திண்டுக்கல் கோட்டையில் தஞ்சம் அடைந்தது, சிறிது நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த 20,000 பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது.(14) சேதுபதியின் தலைமையிலான படைகளும் மைசூர் படைகளும் நேருக்கு நேராக மோதுகிறது. வெறி கொண்ட தாக்குதலில் இரண்டு பக்கமும் பனிரெண்டாயிரம்(12000) நபர்கள் கொல்லப்பட்டனர். (15)
இறந்தவர்கள் உடல்கள் அதே இடத்தில் பல நாட்கள் இருந்து சிதைந்து போனதால் அந்த இடமே கருவாட்டு பொட்டல் என அழைக்கப்பட்டது.(16). இன்றும் திண்டுக்கல்லில் அதே கருவாட்டுபொட்டல் காணப்படுகின்றது. கருவாட்டுபொட்டல் திண்டுகல்லில் காணப்படும் மந்தை போன்ற இடமாகும்.
சேதுபதி படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மைசூர் வடுகர் படை சிதறி ஓடியது. மைசூர் வரை அவர்களை துரத்திச்சென்ற மறவர்கள் அவர்கள் மூக்கை அறுத்தனர். மைசூர் வடுகர் படை எடுப்பு முறியடிக்கப்பட்டு மதுரை காப்பாற்றப்பட்டது.(17)

ஒருவேளை சேதுபதி உதவாமல் இருந்தால் மதுரை சீமையில் இருந்த பல ஆயிரம் பொது மக்களின் மூக்குகள் அறுக்கப்பட்டு இருக்கும்.மன்னரே காட்டுக்குள் ஓடி ஒழிந்த நிலையில் மதுரை வீழ்த்தப்பட்டு இருக்கும். பின் செஞ்சி மற்றும் தஞ்சை நாயக்கர் எளிதாக வீழ்த்தப்பட்டு இருப்பர் அதன் விளைவாக மீண்டும் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டிருக்கும்.



பல்வேறு விதமான பேராபத்தில் இருந்து மதுரையை காத்தது மறவர்களே. (மைசூர் படைகள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம், மறவர்கள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம்,





சேதுபதி மைசூர் படையை விரட்டி அடித்த பாதையின் வரைபடம் இணைக்கப்பட்டு உள்ளது) (மூக்கறுப்பு போர் குறித்து ஜன்னல் மாத இதழில் வந்த செய்தி படங்கள் இணைப்பில்) அடிக்குறிப்புகள்:
மூக்கருப்பு போர் கல்வெட்டுகள் : கல்வெட்டு ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன்.
1-Inscription In The Pudukkottai State
2,3,4-History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
5,6-Jesuit Records
7-The Madura Country: A Manual-James Henry Nelson


