எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிபதையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது.
இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிபதுக்கு சற்றும் குறைவில்லாதது..
எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.
தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந் நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500 ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண் டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.
இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது.
ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். அதில் முதலாமவர்
O r i or aram 4530-4470BC - தமிழில் ஓரி என்பது செப்பமான் வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான்.
இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.
இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.
Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள்
உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது.
உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது.
Eylouka 3836 - 3932 BC (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா > எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.
Kam 2713 - 2635 BC - தமிழில் காம் > காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல.இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.
Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD - தமிழில் எல்லு அப்பய்ய தி > எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி -- சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.
Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர > மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்கா வில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.
Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.
Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வாலமீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிபது மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர். காட்டாக, Ramesses I 1295-1294 BC - தமிழில் இராமி சே > இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் எனறும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.
Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன > வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர்
Liu Bang206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு.
எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்னs > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.
Liu Bang206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு.
எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்னs > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.
Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.
Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது.ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.
Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் .
Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.
Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.
Lakndun Nowarari . தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.
Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.
Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.
Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC .
Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD. அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC . சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.
ஈரானின் ஈலம் நாகரிக மன்னன்பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது .
பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில்Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.
Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம் . சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது.
சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர்
Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.
Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு. விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.
Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.
Sera I (Tomai) 956 - 930 BC - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று.
Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.
Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.
Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன்பெயர்
Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC -தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC -தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர்.
Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர்
Liu Eloulou 356 -358 BC - தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.
Liu Eloulou 356 -358 BC - தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.
Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர்.
Kolas 295 - 285 BC - தமிழில் காள> காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.
Stiyo 269 - 255 BC - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.
Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர்.
Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன்.
Azegan Malbagad 200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் -- கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின.
தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும்.
மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.
மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம்.
இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.
In the Coromandel coast the Nagas who were traditional fishermen (the Paravas) and Warriors(Maravas) founded the Madurai Kingdom with its capital first at Korkai and later at Madurai. The Nagas also founded Jaffna and occupied the north east of Ceylon island and the kingdom was called Nagadipa. They also moved into Keleniya and other places in Ceylon. The Naga capital at Nagadipa was Kathiramalai and the port was at Matota.
The three hillocks around which the Madurai Kingdom was built, Pasu Malai, Naga Malai and Yanai Malai
This is Not a Nature Hill. It was built by Naga ancestors.
The Nagas, like most of the other Native tribes had serpent as their totem. They also used to worship serpent and consider them to be their protective deity. They also used to wear artificial hoods of cobra on their heads at certain occasions.
The tradition of Naga worship or totem was in prevalence in Babylonia, Assyria, Palestine and Iran from ancient times and it was brought to India alongwith migration of Sumerians and Assyrians and Dravidian race.<-p>
There are enormous evidences of seals and seal impressions found from Indus towns to show that Indus Valley people also used to worship this serpent deity.
Dr.Viyogi through his meaningful research has proved that native Naga people were highly civilized, their heritage and culture was very rich. They developed an ideal social, religious, economic and political system which made them very wealthy and invincible warriors and ideal citizens. Thus they founded Indus Valley Civilization, one of the oldest civilization of the world. They are responsible for the urbanization of India as much as twice and to bring forth ?Golden Age? of Indian history. Not Only Indus vally Civilization Egyptian Civiilization brought tutta-Naga kings Called Tuttakaman. Sumerian Kings also Nagas. Cambodia,East Asian Peoples also the version of Naga Clans.
If this existing course of invader?s history is replaced by this new research work, it can prove to be an ideal history for developing young brain to the right path of creating sense of nationality, humanity, fraternity, liberty, patriotism and rationality. This can be a gain of considerable amount of progressive mileage in the human history
If this existing course of invader?s history is replaced by this new research work, it can prove to be an ideal history for developing young brain to the right path of creating sense of nationality, humanity, fraternity, liberty, patriotism and rationality. This can be a gain of considerable amount of progressive mileage in the human history
சேசாத்திரி.