அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் எனவும் வந்துள்ளது.
மேலும் வேறோரு சுவடியிலும் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும் சிவகங்கை உடையதேவனுக்கும் இதே போல் திருமலை நாயக்கர் "குமாரவர்க்கம்" என திரிபை ஓலையில் சொல்லியுள்ளனர். மறவர் ஜாதி வர்ணம் என்னும் நூலில் சேதுபதி 72 பாளையக்காரர்களின் தலைவர் எனவும் திருமலை நாயக்கரை காப்பாற்றியதால் அவருக்கு திருமலை சேதுபதி எனவும் தஞ்சை 18 நாடுகளின் தலைவர்களும் தொண்டைமானும்,சிவகங்கை ராஜவும் அவரை வணங்க வேண்டும். தொக்கால தொட்டிய கட்டபொம்மனும் சில தொட்டிய தலைவரும் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் எட்டயபுரம் சில்லவர் தலைவனும்,தலைவங்கோட்டை,வடகரை,சிவகிரி வன்னியரும்,தலைவன் கோட்டை தலைவர்களும் அவ்வாரு செய்வதில் மாறாக சேதுபதி வரவேற்கவேண்டும் என கூறியுள்ளது.சேதுபதி வெளியில் செல்லும்போது கட்டியக்காரன் திருமலை நாயக்கரின் முதல் தொண்டனும் 72 பாளையக்காரர்களின் தலைவனான சேதுபதி என கூறியுள்ளனர்.
இது ஒரு ஓலை ஆவணமாகும் இது போலி என தெரிகிறது காரணம். திருமலை நாயக்கரின் காலம்(1623-1659) ஆதாவது கிழவன் சேதுபதியின் தாத்தா திருமலை சேதுபதி என்ற இரண்டாம் ரகுநாத தேவர் காலம்.
அந்த காலத்தில் புதுக்கோட்டை,சிவகங்கை என்ற பெயர் கூட இல்லை காரணம் திருமலை சேதுபதிக்கு பின் ராஜசூரிய தேவர் பின் வந்த கிழவன் சேதுபதியின் இறுதி காலத்தில் அவரின் மனைவி காதலி நாச்சியாரின் தம்பி அன்பில் தொண்டைமானுக்கு வழுத்தூர் பல்லவராயன் என்பவரின் ராஜ்ஜியத்தை கையகபடுத்தி அவருக்கு புதுக்கோட்டை என்ற பெயரிட்டு உருவாக்கபட்ட இடமே புதுக்கோட்டை ராஜாங்கம் ஆகும். புதுக்கோட்டை தொண்டைமான் காலம்(1686-1730) ஆகும் அதிலும் அவரது இறுதி காலத்தில் கிடைத்த புதுகோட்டை 1700க்கு பின் ஆகும்.
சிவகங்கை எனும் ஊரே கிழவன் சேதுபதி காலத்தில் கிடையாது. அவரின் மகனின் மகள் ஆதாவது கிழவனின் பேத்தி அகிலாண்டே ஸ்வரி நாச்சியாருக்கும் நாலுகோட்டை சசிவர்னதேவரை திருமணம் செய்து கொடுத்த சீர் வரதட்சனையாக அளிக்க பட்டதே சிவகங்கை ஆகும். அந்த சிவகங்கை குளத்தை வெட்டி உருவாக்கபட்டது. ஆக திருமலை நாயக்கர் காலத்தில் சிவகங்கை தலைவர்,புதுக்கோட்டை தொண்டைமான் என வந்த செய்தி இடைசொருகல்.
இதேபோல் தஞ்சை 18 தலைவர்களும் பின்னர் சரபோஜி,தொண்டைமானால் உருவாக்கபட்ட நாட்டார்களே ஆவர் அவர்கள் திருமலை மன்னன் காலத்தில் இல்லை.
சேதுபதி பாளையக்காரனா?
திருமலை நாயக்கன் பாட்டன் முத்துவீரகிருஷ்ன நாயக்கன் உடையான் சேதுபதி என்பவரை நியமித்தாக கூறும் நாயக்கர் வரலாறு. "அச்சுதராயர் அப்யுக்தம்" என்னும் விஜயநகர வரலாறு. கிருஷ்ண தேவராயர் தளபதி விசுவநாத நாயக்கன் "சயதுங்க தேவன்" என்ற சடைக்க தேவனை கொன்று சேதுவை கைப்பற்றினான் என கூறுகிறது. இதை
மறவர் ஜாதி வர்ணம் என்னும் சுவடியும் உறுதிசெய்கிறது. இதை ஆராய்ந்த
வில்லியம் டெய்லர் மற்றும் மெக்கன்சி கையெழுத்து பிரதியும் உறுதி செய்து
இதையே "மதுரா மானுவல்" என்னும் புத்தகத்தில் ஜே.எச்.நெல்சன் மதுரை வரலாறு
புத்தகத்தில் கூறுகிறார்.
அந்த "ஜெயதுங்க தேவன்" பேரனையே முத்துவீரப்ப நாயக்கன் சேதுபதியாக அமர்த்தினான்
என்கிறது. இவனே சடையக்க உடையான் சேதுபதி. தன் மூதாதயரான "சயதுங்க" தேவரை
ஒவ்வொரு முறையும் செப்புபட்டயத்தில் "செயதுங்கராய வங்கிஷம்" என குறிப்பிட்டனர்
சேதுபதிகள்.
புதுக்கோட்டை கல்வெட்டில் வந்த "உடையான் செயதுங்கராயன்":
இந்த கல்வெட்டில் குறிப்பிட்ட செயதுங்கராயன் சேதுபதிகளில் ஒருவராக
இருக்கலாம்.
மதுரை மானுவல் நெல்சன் தெளிவாக சொல்கிறார் முதல் நாயக்கன் கிருஷனதெவராயர் சேவகன் விஸ்வநாத நாயக்கனால் கொல்லபட்ட செயதுங்க தேவரின் நிலத்தையே அவன் பேரணாகிய சடைக்கதேவர்
ஆண்டு வந்துள்ளார்.சேதுபதியின் ஆட்சிப்பரப்பு ராமநாதபுரம் மாவட்டம்,சிவகங்கை,புதுக்கோட்டை,விருதுநகர்,கொஞ்சம் தூத்துகுடி பகுதி என்ற இவ்வளவு பெரிய பரப்பு கொண்ட பாளையக்காரன் யார்.
இராமநாதபுரம் சிவகங்கையும் 72 பாளயபட்டுகளில் இல்லாத சுதந்திர அரசுகள்
முதல் சேதுபதி முதல் ராஜசூரியதேவர் வரை மதுரைக்கு வரி செலுத்தியுள்ளனர். ஆனால் இரண்டாம் ரகுநாத தேவர் மைசூர் படையை விரட்டி திருமலையை காப்பாற்றியதால் திருமலைசேதுபதி என்றும் திருமலை மன்னன் மனைவி "தாலிகாத்தார்" என்ற பட்டத்தை வழங்கி இன்னும் திருவாரூர் பகுதியையும் வழங்கினார். இதன் பின் திருமலைசேதுபதிக்கும் திருமலை நாயக்கரின் படைகளும் மோதி மதுரை படை பின் வாங்கி கிட்டதட்ட சேது நாடு சுகந்திரம் பெற்றது போல்திகழ்ந்தது.
மன்னர் சேதுபதி ஆட்சிக்கு
உட்பட்ட அறந்தாங்கி அரசு தொண்டைமானார்கள்
பற்றிய செப்பேடுகள் !
திருமலை நாயக்கரின் மருமகள் மங்கம்மாள் காலத்தில் முழுமையாக மதுரை நாயக்கர் படை தோற்றோடி முழுமையான சுகந்திரம் அடைந்தது சேதுபூமி. அப்போது சேதுபதியின் எல்லை வடக்கே "திருவாரூர் முதல் தெற்கே தூத்துகுடி பாம்பாறு வரை மேற்கே மதுரையிலிருந்து கிழக்கே கடல் வரை எல்லையாக" இருந்தது.
மதுரையை பல முறை மைசூர் படை, ருஸ்டம்கான்,சந்தாசாகிப்,மஹ்பூஸ் கான் ஆற்காடு நவாப் என பலரிடம் இருந்து சேதுபதி மீட்ட போதும். மதுரையை தான் ஆளாமல் நாயக்கரையே மறுபடியும் அமர்த்தினார் சேதுபதி.
போர்சுகீசியர்,டச்சு,பிரஞ்சு,ஆங்கில வரைபடங்களில் மறவர் நாடும் மறவர்குடா(வங்க கடல்) இருப்பதையும் கானலாம்.
திருமலை நாயக்கர் உண்ட தட்டில் சாப்பிட்டர்,திருமலை நாயக்கர் முதல் தொண்டன் என்பது ஓலை எழுதும் சாதியினரால் தவராக திரிக்கபட்டு எழுதபட்டதாகும்.
சேதுபதியின் 60 ஆயிரம் கொண்ட படைக்கு முன்
மறவர் ஜாதி வர்ணம் கூறும் பாளையக்கார்களான
எட்டயபுரம்,சிவகிரி,தலைவங்கோட்டை, வடகரையெல்லாம் எம்மாத்திரம்.
இவர்களை வரவேற்றார் சேதுபதி என்பது சிரிப்பு.
திரிபுகள் ஆயிரம் சொல்லாம் பலகாலமாக பூர்வமாக தலைவணங்கா தமிழ் மன்னன் சேதுவை ஆண்ட சுத்த தமிழ் வேந்தர் சேதுபதி
---- செம்பியன் அரசன்..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.