Tuesday, January 31, 2023

கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்

 மறவர், கள்ளர்,பரதவரை நாகர் என போலியாக கதைவிட்ட கனகசபை பிள்ளை(K.K.Pillai)




காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai's Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு

"1800 ஆண்டுகளுக்கு முந்தய தமிழகம்"

The Tamils Eighteen Hundred Years Ago-1956

என்ற புத்தகத்தின் வெள்ளாளரின் திரிபுகள்.


இன்றைய நாடார்,பள்ளர்,வெள்ளாளர் அனைவரும் சொல்லும் நாகர்,தமிழர்

வரலாறுகளின் முன்னோடியே கனகசபை பிள்ளை ஆவார்.


1850 களில் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தை கால்டுவெல் முன்வைத்தார்.

இதற்கு முன்பே, கால்டுவெல்லின் கோட்பாடுகளுக்கு மெட்ராஸ் கலெக்டரான பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அடித்தளம் அமைத்திருந்தார்.பிரபல அமெரிக்க வரலாற்றாசிரியர் தாமஸ் ட்ராட்மேன் என்பவரின் ஆய்வில் "ஆங்கிலேயர்களின் அரசியல் நலன்களுக்கு ஆதரவான மொழி மற்றும்  தேசங்கள் பற்றிய அவர்களின் படைப்புகள் பற்றிய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் படைப்புகளை இந்தியாவின் வரலாறாக உருவாக்கினர்" என்று

 தாமஸ் ட்ராட்மேன் கூறுகிறார்.


காலனித்துவ செல்வாக்கு:

கால்டுவெல் மற்றும் ஜி.யு போன்ற மிஷனரிகளின் படைப்புகளை பிரிட்டிஷ் அரசு தந்திரமாகப் பயன்படுத்தியது.போப். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை இருந்த காலனித்துவ மேலாதிக்கம் அதன் காலனிகளின் வரலாற்றில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியது.


கால்டுவெல் தமிழ் கலாச்சாரம் வரலாறு பற்றி எழுதிய புத்தகத்தில் தமிழர்கள் அடிப்படையில் ஒரு அமைதியான மக்கள் என்று காட்ட முயன்றார்.அவர்கள் பெயர் திராவிடர் என்றும்,அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் 'ஆரியர்கள்' வருகைக்கு முன்னரே சுதந்திரமாக உயர்ந்த நாகரீகத்தை அடைந்தனர்.இதுவே தனித்துவமான திராவிட நாகரீகம். திராவிட மொழியியல் மற்றும் அதனால் பண்பாட்டு சுதந்திரம் என்ற கோட்பாடு தமிழர்கள் முதலில் அமைதியான விவசாயிகளின் வர்க்கம் என்ற கருத்தையும் உள்ளடக்கியது. இதுவே திராவிட கருத்தியல் என்ற வெள்ளாளரின் கலாச்சாரம் என மாறியது.




பிஷப் கால்டுவெல்லின் கருத்துக்கள், வர்ணப் படிநிலையில் உயர் பதவிக்காகப் போராடிக் கொண்டிருந்த, புதிதாக எழுந்த வெள்ளாளர் சாதியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, [20 ஆம்] நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் கழகத் தமிழாய்வுப் பள்ளியால் எழுதப்பட்ட ‘வரலாறுகள்’ கால்டுவெல் மற்றும் ஹென்றி மார்ட்டின் ஸ்கடர் மற்றும் ஜி.யு.போப் போன்ற பிற மிஷனரிகளின் அரசியல் மற்றும் மத அக்கறைகள் சார்ந்ததாக இருந்தது.


வெள்ளாளர் ஜாதியின் போலியான திராவிட வரலாறு:


தமிழ் கலாச்சாரம் சாராம்சத்தில் ஆரிய-பிராமணத்திற்கு முந்தையது போலவும் மற்றும் இராணுவம் அல்லாத அறநெறியுடைய சாத்வீகமானதாக காட்டபட்டது.

தமிழ் கடந்த காலத்தை ஆய்வு செய்வதற்காக திராவிடக் கோட்பாட்டை எடுத்த முதல் பிராமணரல்லாத தமிழர்கள் வெள்ளாளர் ஜாதியினர் மற்றும் புராட்டஸ்டன்ட் மிஷனரிகளால் (மற்றும் சில நேரங்களில் ஆங்கில நிர்வாகிகளால்) ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.


இதில் முதல் ஆள்

 




பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,(1855 - 1897):


திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தின் தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பேராசிரியராக இருந்த சுந்தரம் பிள்ளையின் எழுத்துக்கள், பிராமணர்களால் வெள்ளாளர்கள் சூத்திரர்களாக வகைப்படுத்தப்படுவதையும், அதைவிட மோசமாக ஆங்கில அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் நீதிமன்றங்களால் மிகவும் மோசமாக வகைப்படுத்தப்படுவதையும் தாங்கமுடியாமல் அவரது சாதியினரில் அவரை திராவிட ஆய்வாளராக ஆக்க முயற்சித்தனர்.எனவே இவரது ஆய்வுகள் வெள்ளாள ஜாதியரின் வரலாற்று ஆய்வு தொடக்கம் என கருதலாம்.


இவருக்கு அடுத்து  

வி.கனகசபை பிள்ளை(1855 - 1906)






யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் சென்னையில் அரசு ஊழியராக இருந்த வெள்ளாளர் வகுப்பை சேர்ந்தவரான வி.கனகசபைப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்டமுதல் திராவிட வரலாறு, ‘"1800 ஆண்டுகளுக்கு முந்தய தமிழகம்" என்ற முதல் தமிழ் திராவிட நூலை எழுதினார்.


இந்த கனகசபை பிள்ளையின் நூலே ‘தென்னிந்தி குலங்களும் குடிகளும்’ என்றஎட்கர் தர்ஸ்டன் எழுதிய நூலில் மேற்கோளாக அமைந்தது. இதை மேற்கோள் காட்டிவெள்ளாளரின் வரலாறாக காட்டினர்.


அதில்,


“சுத்தத் தமிழர்கள் என்போர் மிகவும் மதிக்கப்படும் வர்க்கமானஅறிவர் அல்லது முனிவர்கள்.அறிவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் உழவர் அல்லது விவசாயிகள்.அறிவர்கள் சந்நியாசிகள்,ஆனால் சமூகத்தில் வாழும் மனிதர்களில் விவசாயிகள் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தனர். அவர்கள் நாட்டின் பிரபுக்களாகுவும் நிலப்பிரபு தத்துவத்தை உருவாக்கினர் எனவும்.


அவர்கள் வெள்ளாளர் அல்லது காரளர், மேகங்களின் அதிபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர்… சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான குறுநிலத் தலைவர்கள் வெள்ளாள இனத்தைச் சேர்ந்தவர்கள். (தர்ஸ்டன், 1906: ப.367-368)



என்று எழுதிய புன்னியவான் கனகசபை பிள்ளை அவர்களே.


இந்த கட்டுரையில் கனகசபை பிள்ளை எழுதிய நாகர் என்போர் தமிழரல்லஎன்றும் நாகரில் மறவர்,எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர் பரதவர் என்று பட்டியலிட்ட இனங்கள் நாகரே அல்ல என்பது அது சுத்த பொய்.

அவர்களே ஆதி தமிழர் என்பது நிருபனமாகும்.


"1800 ஆண்டுகளுக்கு முந்தய தமிழகம்" என்னும் நூலில் அவர் கருத்துகள்

சில,










"தமிழரில் பழமையான இனமாக வில்லவர்,மீனவர்கள் எனவும், இவர்கள்

இன்றைய ராஜஸ்தானில் பில்ஸ்,மீனாஸ் என்ற பெயரில் வாழ்ந்த

மீன்பிடிப்பவர்களாகவும் வில்லை ஏந்தியவர்களாக உள்ளர்".

Bhil Meena

From Wikipedia, the free encyclopedia
Bhil Meena
भील मीणा
Bhil Meena.jpg
Woman of Bhil Meena tribe.
Regions with significant populations
           Rajasthan,1,05,393[1][2][3]
           Madhya Pradesh,2,244[2][3]
Related ethnic groups
 • Bhil  • Meena

The Bhil Meena (also spelled Bhil Mina) are a tribal group found in the state of RajasthanIndia.

Mainly they are mixed tribe of tribal Meenas and Bhils.[4]

Social status[edit]

As of 2001, the Bhil Meenas were classified as a Scheduled Tribe under the Indian government's reservation program of positive discrimination.[5]




"இவர்களைமிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் ' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி . கனகசகைபப் பிள்ளை கூறுகிறார்.


நாகர்கள் வில்லவரை,மீனவரை வீழ்த்தினர் என்று கூறுகிறார்.


நாகர்களைப்பற்றிக் கனகசபைப்பிள்ளையவர்கள் கூறுமாறு:- "தொகையிற் பெருக்க மடைந்து நாகரிகம் வாய்ந்த ஒரு சாதியார் இந்தியா, கடாரம் (பர்மா) இலங்கையென்னும் தேயங்களில் பெரும் பகுதிகளை ஓரொரு காலத்தில் ஆண்டிருக்கின்றனர். தொழில் திறம் பொருந்த இச்சிலைகளையியற்றிய சிற்பிகள், இந்நாகரை அரவின் தன்மை வாய்ந்து மக்களுருவமும் பாம்புஉருவமும் கலந்த மெய்யினரென்றே நினைத்தனர் போலும். பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர்களும் இவ்வாறே எண்ணம் கொண்டிருந்தனர்


நாகரில் பல பிரிவினர் மறவர்,எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர்,பரதவர் என்று பல

பிரிவுகள் இருப்பதாக என்று மனிமேகலை கூறுகிறது.?


நாகரில் போர் வன்மை மிக்கவர்கள் மறவர்களே இவர்கள் தமிழர்கள் மீது தீர பகைமைகொண்டிருந்தனர்.? இவர்கள் பின்னாளில் தமிழ் மன்னர்கள் படைகளில் சேர்க்கபட்டனர்.இவர்களில் சேரன் படைதலைவன் பிட்டன் கொற்றன். பாண்டியன் படைதலைவன் நாகன் என்பன ஆவர்.


நாகரில் அடுத்து எயினர் என்போர் இருந்தனர் இவர்கள் காளிக்கு எருமையை பலி கொடுத்தனர். இவர்க்ளை பின்னாளில் கள்ளர் அல்லது திருடர்கள் என கூறினர்.

இவர்களை பாண்டியர் கல்வெட்டுகளில் மாறன் எயினன் ஒருவன் கூறப்படுகிறான்.


நாகரில் அடுத்து ஓளியர் இவர்கள் கரிகாலனால் ஒடுக்கபட்டனர். இவர்கள்

ஒளிநாடு காவேரிபட்டினம் அருகே இருந்தது.

ஒளிநாகன் மாடையன்

ஒளிநாகன் நாராயனன்


என்போர் சோழர் கல்வெட்டுகளில் வருகின்றனர்.


அருவாளர் தொண்டை மண்டல நாகராம்


ஓவியர் உரையூரை ஆண்ட நாகராம்.


பரதவர் மீன்பிடித்தலை கொண்ட நாகராம். இவர்கள் பாண்டிய நாட்டில் தென் பகுதிகளில் இருந்தனர்.


சேரர் வாணவராம் இமயமலையில் இருந்து வந்தனர்.

சோழர் திரையராம் பர்மாவில் இருந்து வந்தனராம்.

பாண்டியர் மாறராம் மங்கோலியாவில் இருந்து வந்தனர்.


அடுத்து வெள்ளாளர்,பற்றி,

பிராமனிய வர்னத்தில் நான்கு வர்ணத்தில் சூத்திர வர்ணமான

வீழ்குடி வெள்ளாளர் என அழைக்கபட்டனராம்.

“சுத்தத் தமிழர்கள் என்போர் மிகவும் மதிக்கப்படும் வர்க்கமான

அறிவர் அல்லது முனிவர்கள்.அறிவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் உழவர் அல்லது விவசாயிகள்.அறிவர்கள் சந்நியாசிகள்,ஆனால் சமூகத்தில் வாழும் மனிதர்களில் விவசாயிகள் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தனர். அவர்கள் நாட்டின் பிரபுக்களாகுவும் நிலப்பிரபு தத்துவத்தை உருவாக்கினர் எனவும்.இவர்கள் வேள் அல்லது வேளிர் ஆவர்.


அவர்கள் வெள்ளாளர் அல்லது காரளர், மேகங்களின் அதிபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர்… சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான குறுநிலத் தலைவர்கள் வெள்ளாள இனத்தைச் சேர்ந்தவர்கள்.


இவர்களில் கோசர் கொங்கு மண்டலத்தை உருவாக்கியவர் அவர்கள் குஜராத் குஜ்ஜர் குசான் பேரரசை சார்ந்தவராம்.

இவர்களில் வடுக வெள்ளாளர் விஜயநகர பேரரசை உருவாக்கியதாகவும்.

இவர்களில் வல்லாளர் என்று கர்நாடகாவை ஆண்டதாகவும்.

வெலமா நாயுடு என்ற பெயரில் ஆந்திராவை ஆண்டனர் எனவும். 

கர்நாடகா கங்க மன்னர்கள் வெள்ளாளர் எனவும்."


இது கொஞ்சம் தான் இன்னும் திரு கனகசபை பிள்ளை அவர்களின் அளப்புகள் அதிகம்.



மறவர்,பரதவர் நாகரா?


நாகரில் மறவர் எயினர் ஒளியர் ஓவியர் அருவாளர் பரதவர் என்ற பிரிவு மணிமேகலையில்எந்த இடத்தில் சொல்லி இருக்கிறது.இதை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு.


நாலை கிழவன் நாகன் மறவன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பார்த்தால்இன்றைக்கு நாகராஜ்,நாகசாமி என்று பெயர் வைத்த வெள்ளாளன்,நாடான்,பள்ளன் ஒரு கோடி காட்டலாம்.


வில்லவன்,மீனவன் பாண்டியன் சேரன் கொடி பெயரே ஒளிய இனப்பெயர்கள் கிடையாது.இதற்கு இராஜஸ்தானின் தாழ்த்தபட்ட வகுப்பும் வேட்டையையும் மீன் பிடித்தலைதொழிலாக கொண்ட தமிழரியாத இனக்குழுக்கலை தமிழராய் கூறியதும் தமிழை தவிர வேறு மொழி அறியாத மறவர்,பரதவரை நாகராக  மாற்றியது நகைப்புகுரியது.


மறவர்,பரதவரை தான் சங்க இலக்கியம் வில்லவர்,மீனவர் என கூறியது தெரிந்தும் மறைத்த பிள்ளையின் செயல் அவரது இனப்புத்தி.


மறவர் தமிழர் மீது தீரா பகை கொண்டிருந்தனராம். வெள்ளாளருக்கு கோசர்,வெலமா நாயுடு,கன்னட பல்லாளன்,கங்கன்லாம்,பாண்டியன் மங்கோலியன்,சோழன் பர்மாகாரன்லாம் தமிழனா கதைவிடைல மறவர் தமிழர் மீது பகை என்பது "கட்டி வைத்து அடித்தாலும் சரியாகாது"


மறவர்,எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர்,பரதவர் இவர்கள் சங்க இலக்கியம் முழுதும்வருகின்றனர் கனகசபை பிள்ளை சொன்ன வெள்ளாளர்,அறிவர்,முனிவர் எந்தசங்க இலக்கியத்தில் வருகின்றனர். எனவே வெள்ளாளர் தான் தமிழர் அல்ல

மேற்சொன்ன மறவர்,எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர்,பரதவர் இவர்களே சுத்த தமிழர்.


எயினர் என்போர் கள்ளராம்.எயினர் எந்த ஜாதி என பார்ப்போம். கள்ளர் பற்றிய 7-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுமுத்தரையர் கல்வெட்டு முதல் கள்ளர் வேறு ஜாதி எயினர் வேறு ஜாதி.

கணகசபை பிள்ளை நாகர் புத்தகம் இந்த ஒரு கல்வெட்டிலே பொய்யாகிறது:

சங்க தமிழ் இலக்கியத்திலே "வெள்ளாளர்" என்ற பெயரே இல்லாதபோது தமிழர்

என்ற திராவிடர் என வெள்ளாளர் கோருவது எப்படி நியாயம் ஆகும்.





வெள்ளாளரின் இன்னோர் பெயரான "காராளர் என்ற பெயரே களப்பிரர் காலத்தில்

ஆதாவது 4 ஆம் நூற்றாண்டில் தான் வருகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட

வரலாறு(வீ.மாணிக்கம்) கூறுகிறார்.


காராளர் என்ற பெயரையும் மலை பழங்குடிகளான பழியர்,மலையர்,மலையாளிகள்,குன்னுவர்(குறவர்), இருளர் போன்ற மலை விவசாயம் கொண்ட குடிகள் பெற்ற போது

வெள்ளாளர் காராளர் என்ற ஆதாரமும் பொய்யாகிறது. இதைப்போல்


நாகரில் எயினர், ஒளியர் என்று குறிப்பிட்ட இரு ஜாதியும் வெள்ளாளர் என்ற பெயரை பெற்றுள்ள போது இவர்கள் நாகர் என்பது எப்படி உண்மை.



இடம்:காட்டுமன்னார்கோவில்

கோயில்:திருமூலநாதர் கோவில்

மன்னன்:சோழ மன்னன் இரண்டாம் ஆதித்தன்

காலம்:10-ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு............

.............வெள்ளாளன் துதும்பாடி உடையான் குடும்பில்(வயல்)......

..................குடும்பில் மூவேலியும் வெள்ளாளன் எயினன் தம்பி உடையான்........

குடும்பில்...........

இது 1946 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கல்வெட்டு இது கனகசபை பிள்ளை அவர்களுக்கு தெரியாமல் இருந்தது எப்படி .அவர் பல சோழர் பாண்டியர் கல்வெட்டு பார்த்துள்ளார்.


இதைப்போல் ஒளியரும் ஓளிநாட்டு வெள்ளாளர் என அழைக்கபட்டுள்ளனர்.




இது தவிர Kongu கல்வெட்டில் வேட்டை,குறசாத்துவோர்,இசைஅறைவோர்,மலைக்குடிகள்பலரும் வெள்ளாளர் என்ற கல்வெட்டு வந்துள்ளது. அப்போது கனகசபை கூறிய வெள்ளாளர் யார்?


அறிவர்,முனிவர் என்னும் இனத்தார் ஐவகை நிலத்திலும் இல்லை எனும்போது.வெள்ளாளர் தம்மை அறிவர்,முனிவர் என்பது நகைப்பில்லையா.


அப்போது அழகர்,காமர்,ஒழுங்கீனர்,முடவர்,சிரிப்பர் என்ற இனங்களும் இருந்திருக்க வேண்டாமோ?


நாகர்கள் வரலாறு தோன்றுமுன் இருந்த குடிகள் அவர்கள் மன்னர்கள் இலங்கை ஆண்டபெயர்கள் எதுவும் மறவர்,எயினர்,பரதவர் பெயர்களுடன் பொருந்தாத போது எப்படி நாகர்கள் என வகைபடுத்தினர்.


 To my mind, these caste genealogies used inscriptional material as 

sources much earlier than any professional historian - it certainly pre­

dates the use of epigraphs by P. Sundaram Pillai to mark “some mile­

stones in the history of Tamil literature” and date “the age of 

Thirugnanasambanda”. Oral history and proverbs were also extensively 

used.


திரு மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை தேவாரத்தை ஓலைகளில் திருத்தம் செய்ததாக

குற்றம் சாட்டபட்டுள்ளார்.

The 1934 edition of the Vanniya puranam pub­

lished by A. Subramania Nayagar is a good example of this. Some caste 

groups openly commissioned the writing of caste Puranas. The life of

290 A. R. Venkatachalapathy Mahavidwan Meenakshisundaram Pillai, the prolific nineteenth-century 

poet, is replete with instances of such commissioning.Another intellectual discipline that was frequently employed in the exercise of claiming higher caste ranking was etymology. 

இதே போல் இவர் போலியாக ஓலை சுவடிகள் வெள்ளாளர்களுக்காக உருவாக்க

அது ஆங்கிலேயர் விசாரனைக்கு சென்றுள்ளது.


Kanakasabhai Pillai, Kudalur (Tam. ku. kanakacapai pillai) 1925. Varuna cintamani. 


(1901) Cennai: Taniyampal vilacam acciyantiracalai.


கனகசபை பிள்ளையும் வருன சிந்தாமனி என்ற வெள்ளாளர் மேநிலையாக்கத்திற்கு சொந்த சுவடி எழுதியுள்ளார்.


கனகசபை பிள்ளை அவரகளின் வேள்,வேளான் வெள்ளாளன் என்ற பெயரும்கடையேழு வள்ளாளான வேளிர் எவரும் வெள்ளாளன் அல்ல

என நிருபனமாகிவிட்டது.


கிடைத்த வேளிரில் அதியமான்,மலையமான்,இருக்குவேளிர் என்ற மூன்று வேளிரும் வெள்ளாளர் என்ற பெயர் யாருக்கும் இல்லை.


இருக்கு வேளிரும்,மலையமானும் தன்னை மறவன் என கூறிய கல்வெட்டுகள் 20 க்கு மேல் உள்ளது. அப்போது வேள் எப்படி வெள்ளாளனாது.?


1928 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் சக்திவாய்ந்த சக்தியாக விளங்கிய தூய தமிழ் இயக்கத்தின் நிறுவனர் மறைமலை அடிகளின் படைப்பில் ஆரம்பகால திராவிடப் படைப்பான ‘வரலாற்றியல்’ முயற்சிகள் உச்சத்தை அடைந்தன. 



அவர் 1923 ஆம் ஆண்டு வெள்ளாளர் நாகரீகம் என்ற நூலை வெளியிட்டார். 

1922 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் தமிழர்களின் நாகரிகம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையே இந்நூல். 200 விரிவுரையை புத்தகமாக வெளியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய யாழ்ப்பாண வேளாளர் தனது நலன்களை தென்னிந்தியாவில் உள்ள தனது சாதியினருடன் பிணைந்ததாகக்  மறைமலையடிகள் பேசினார், அவரின் பேச்சு பிராமணர்களால் ஜாதியின் வர்ண படிநிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சூத்திர அந்தஸ்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள முயன்றனர்.


ஆனால், நாட்டுக்கோட்டைச் செட்டி சமூகத்தின் சாதிப் பத்திரிக்கையில்,வெள்ளாளர்களிடையே செட்டிகள் (வெள்ளாளர்கள்) சூத்திரர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கூற்றை மறுப்பதற்காக, மறைமலை அடிகள் அதை நூலாக வெளியிட முடிவு செய்திருந்தார். ஆங்கில முன்னுரையில் மறைமலை அடிகள் தனது நூலில் கூறுகிறார்.


கனகசபை பிள்ளை மற்றும் மறைமலையடிகள் திராவிட வெள்ளாள கோட்பாடு

மதராஸ் பிரசிடென்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கண்காணிப்பாளரிடம் உதவியாளராக பணியாற்றிய மரியாதைக்குரிய பிராமண தமிழ் அறிஞரான எம்.ஸ்ரீனிவாச ஐயங்கார். அவர்களால் உடைத்தெரியபட்டது.


அய்யங்காரின் எழுத்துக்கள் ஸ்டூவர்ட், பிஷப் கால்டுவெல்லின் 'திராவிட' மொழியியல் படைப்புகளிலிருந்து அதன் அதிகாரத்தைப் பெற்ற திராவிடப் வெள்ளாள தமிழ் வரலாற்றுப்  கூற்றுகள் மீது தனது கருத்துகளை வைத்தார். தமிழ்நாட்டின் மதம் மற்றும் கலாச்சாரம் பற்றி அவர் ஆய்வு செய்ததன் அடிப்படையில், அமைதியான பயிரிடும் பண்டைய இனத்தின் உயர் ஒழுக்க நற்பண்புகளால் தமிழ் கலாச்சாரம் அமைக்கப்பட்டது என்ற கால்டுவெல்-வெள்ளாள  கோட்பாட்டை அவர் மறுத்தார். மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் படைப்புகளின் அடிப்படையில் தன் வாதங்களை வைத்தார்.


சீனிவாச ஐயங்கார் தனது ‘தமிழ் ஆய்வுகள்’ என்ற நூலில், “கடந்த பதினைந்து ஆண்டுகளில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரு.சுந்தரம் பிள்ளையின் அபிமானிகள் மற்றும் வெள்ளாள சாதிக்காரர்களைக் கொண்ட ஒரு போலியான திராவிட தமிழ் அறிங்கர்கள் உருவாகியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.


 புதிய திராவிட வெள்ளாள கூற்றுகளுக்கு மாறாக, தமிழர்கள் போர்குடி இனம் என்று ஐயங்கார் வாதிட்டார். அவரின் கூற்றில் "சில தமிழ் மாவட்டங்களில் ‘வீரக்கால்’ (வீரக்கற்கள்) எனப்படும் விசித்திரமான கல்லறைக் கற்கள் நிறைந்துள்ளன. அவர்கள் பொதுவாக போரில் கொல்லப்பட்ட வீரர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டனர்...இறந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சுரண்டல்கள் மயில் இறகுகள் அல்லது சில வகையான சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக சிறிய விதானங்கள் அவற்றின் மீது போடப்பட்டன. அத்தகைய வரைபட மாதிரியை கீழே தருகிறோம். புறப்பொருள் வெண்பா மாலையைக் கவனமாகப் படிப்பதில் பழங்காலத் தமிழர்கள், அசிரிய இனத்தோர்  மற்றும் பாபிலோனியர்களைப் போல, வேட்டையாடுபவர்கள் மற்றும் வில் மற்றும் ஈட்டிகளுடன் ஆயுதம் ஏந்திய போர்வீரர்களின் வெறித்தனமான இனம் என்பதை வாசகருக்கு நம்ப வைத்தனர்.அவர்களைப் போலவே தமிழர்களும் மந்திரம்,ஆன்மா, ஜோதிடம், சகுனம், சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் மரணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. மேற்கூறிய படைப்பின் பின்வரும் மேற்கோள்கள் அந்த வீரிய இனத்தின் குணாதிசயங்களுக்கு சாட்சியமளிக்கும் என்பது அவரின் கூற்று.


அவர்கள் போர்களில் எதிரிகளின் குடல்களால் மாலை அணிவிக்கப்பட்ட அவர்கள் கைகளில் ஈட்டிகளை மேலிருந்து கீழாகப் பிடித்துக்கொண்டு நடனமாடினார்கள். (2) அவர்கள் தங்கள் எதிரிகளின் வளமான கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர், (3) அவர்களின் நாட்டைக் கொள்ளையடித்து, அவர்களின் வீடுகளை இடித்தார்கள். (4) பிசாசின் சமையல்காரன் கொல்லப்பட்டவர்களின் சதையுடன் வேகவைத்த உணவை, விழுந்த அரசர்களின் முடிசூட்டப்பட்ட தலைகளின் அடுப்பில் விநியோகித்தார். அவற்றின் தோல்களால் சுவர்களைத் தொங்கவிட்டேன். நான் அவர்களின் தலைகளை கிரீடம் போல ஏற்பாடு செய்தேன்...அவருடைய கிராமங்கள் அனைத்தையும் அழித்தேன், பாழாக்கினேன், எரித்தேன்; நான் நாட்டைப் பாலைவனமாக்கினேன் என்று தான் சங்க பாடல்கள் தமிழர்களை வர்ணிக்கிறது..’


இன்னும் முற்கால திராவிடர்களை டாக்டர்.கால்டுவெல் சிறந்த ஒழுக்க நெறிகளின் விவசாயிகளாகவும், ஆரியர் அல்லாத தமிழ் இனம் கருதுகிறார்கள்.

அது சுத்த பொய். அவர்கள் மறவர் கள்ளர் போன்ற போர்குடி மரபினர்.


ஐயங்கார் கூறுகிறார், “வெள்ளாளர்களை தூய திராவிடர்கள் என்றும் அவர்கள் இராணுவ மற்றும் ஆதிக்க பழங்குடியினர் என்று கருதினால்  ‘அமைதியாகப் பயிரிடுபவர்களின் விவசாய முன்னோர்கள் எப்படி போர்குடி போன்ற இனமாக இருக்க முடியும்?’ என்று ஒருவர் இயல்பாகக் கேட்கலாம். அதற்கு எவரிடம் பதில் இல்லை 


வெள்ளாள தமிழ் மறுமலர்ச்சியும் அதன் திராவிட தனித்துவம் பற்றிய கருத்தும் 1916 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியின் பிராமணரல்லாத உயரடுக்குகளால் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் சார்பு மற்றும் ஒத்துழைப்பு அரசியல் அமைப்புடன் நெருக்கமாக தொடர்புடையது வெள்ளாளர்கள் அதன் ஆதரவாளர்கள், 


பண்டைய 'உயர்ந்த' தமிழ் நூல்களிலோ அல்லது கிராமப்புற தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலாச்சாரத்திலோ பொதிந்துள்ள தமிழர்களின் போர்குணம் நற்பெயரைப் பற்றிய கதைகளை வலியுறுத்தாமல் கவனமாக இருந்தனர். (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வெள்ளாள தமிழ் மறுமலர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது, அது தமிழ் சமூகத்தை இராணுவமயமாக்கல் மற்றும் அதில் பிராமணர்களின் செல்வாக்கைக் குறைக்கும் சமூக, பொருளாதார மற்றும் மத நோக்கங்களை எளிதாக்குவதற்கு மட்டுமே. )


இது வெள்ளாள சாதி கலாச்சாரத்தை தமிழ் தேசிய கலாச்சாரமாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமல்ல, 'பயங்கரவாதிகளால்' என்ற போர்குடிசாதி பற்றி பரப்பப்படும் தமிழ் கலாச்சார மறுமலர்ச்சி பற்றிய 'தேசத்துரோக' பார்வைகள் பற்றிய ஆங்கிலேயரின் கவலைகளுக்கு ஆறுதலாகவும் செய்யப்பட்டது. மற்றும் அவர்களின் அனுதாபிகள் பொதுவாக தமிழர்களின் "பழங்கால போர் உணர்வுகளை" தூண்டுவதை நோக்கமாகக் கொண்டவர்கள் மறவர்கள் குறிப்பாக போர்குடி சாதியினர்,


டேவிட் வாஷ்ப்ரூக் வாதிடுகிறார், "வட இந்திய ஆதிக்க சாதி சமூகங்களின் துணை மற்றும் பாதுகாப்பு, மற்றும் அவர்களின் கலாச்சாரத்தின் தற்காப்பு, தாராளவாத பிரிட்டனின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான விலையை தெற்காசியா செலுத்திய பல வழிகளில் இரண்டு."(18) அன்று மறுபுறம் தமிழ் போர்குடி சாதி சமூகங்களின் மேலாதிக்கத்தை அழித்தொழிக்கும் மூலோபாயம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் எல்லை நிர்ணயம் ஆகிய இரண்டு முக்கிய வழிகளில் தமிழ் தெற்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு விலை கொடுத்தது.


திராவிட வெள்ளாள கோட்பாடுகள் ஆங்கிலேய ப்ரோட்டஸ்டண்ட் மிஷினரிகளால் வளர்க்கபட்டது. இதைதான் இன்றைய நாடார்,பள்ளர்கள் தங்களது வரலாறாக  கையாண்டு வருகின்றனர்.


நன்றி:


நன்றி:

https://tamilnation.org/forum/sivaram/920801lg.htm

https://tamilnation.org/forum/sivaram/920901lg.htm

(a) Place Name Studies – Kankesanthurai Circuit, by Dr.E.Balasunderam of the Jaffna University, 1988, pp.5-6. The book was published for the Mani Vizha of S.Appadurai of Myliddy.

Kanakasabhai Pillai, Kudalur (Tam. ku. kanakacapai pillai) 1925. Varuna cintamani. (1901) Cennai: Taniyampal vilacam acciyantiracalai. Rajadurai, P. (Tam. pu. iracaturai) 1992. Cuyamariatai iyakkattirku natarkal arriya tontu. Virutunakar: Ilamaran patippakam. Rudolph, Lloyd and Rudolph, Susanne. 1967. The Modernity of Tradition: Political Development in India. Bombay: Orient Longman Shanmugasundaram, K. (Tam. ka. canmukacuntaram) 1995. Kaviccihkam rajarisi arttananca varma. Cennai: Pe. kantacami nayakar kalvi arakkattalai. 292 A. R. Venkatachalapathy Srinivas, M. N. 1966. Social Change in Modern India. Berkeley: University of California Press. -- . 2002. Collected Essays. New Delhi: Oxford University Press. Subramania Nayagar, A. (Tam. a. cuppiramaniya nayakar) 1955. Tirukkaivalam. Cennai: A. cuppiramaniya nayakar. Templeman, Dennis. 1996. The Northern Nadars of Tamilnadu: An Indian Caste in the Process of Change, Delhi: Oxford University Press. Trautmann, Thomas. 2006. Languages and Nations: the Dravidian Proof in Colonial Madras. Berkeley: University of California Press. Washbrook, David. 1975. ‘Development of Caste Organisation in South India’, in C. J. Baker, D. A. Washbrook, South India: Political Institutions and Political Change, 1880- 1940. Delhi: Macmillan.

தராக்கி சிவராம்

ஸ்ரீனிவாச அய்யங்கார்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.