Monday, November 28, 2022

காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)

கடந்த கட்டுரையில் வெள்ளாளர்
 பாண்டியமண்டல ராஜாக்கள்,சோழமண்டலராஜாக்கள்,தொண்டை மண்டல சரிதம் இதெல்லாம் 
 இராமாயனம் 
 மகாபாரதம்
 நளவென்பா 
 திருவிளையாடல்புரானம் 
 கலிங்கத்துபரனி



காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai's Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு

 போன்ற செய்யுள்களை பார்த்து வெள்ளாளர்கள் போலியாக உருவாக்கி கொண்ட ஓலைகள் என தெரியவரும். இப்போது புதுக்கோட்டை பகுதியில் கானாட்டு வெள்ளாளர் கோனாட்டு வெள்ளாளர் சண்டை என வானாதிராயர் முதலான ராயர்களின் வரலாறையும் சில கோவில் உரிமைகளையும் கவர்வதற்க்கும் மன்னின் மைந்தர்களான மறவர் கள்ளர்களை குடியேற்றியதாக போலியாக செய்தி சொல்ல பயன்பட்ட ஒரு ஓலை தான் தேக்காட்டூர் சுப்பிரமணியே வேளார் ஓலைகள். இதை பற்றி கள்ளர் சரித்திரம் நா.மு.வேங்கடசாமி பிள்ளை(நாட்டார்) என்ற கள்ளர் மதுரை தமிழ் சங்கத்தில் ஆவணங்களையும் பண உதவிகளையும் பெற்றுகொண்டு மறவரை கேலிகூத்தாக ஆக்க இந்த கள்ளர் அரையர்களுக்கு கோர வெள்ளாளர் பயன்படுத்திய சுவடியை எழுதிகொண்டார். அவரை பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் கள்ளர் அவர் மனதில் வஞ்சம் கொண்டு எப்படி மறவரை அதில் என்னமாதிரி துண்டாடினார் என பலருக்கும் தெரியாது இருக்கட்டும். தேக்காடூர் ஒலைசுவடியே டூபாகூர் எனில் கள்ளர் சரித்திரத்தில் அதை சொன்ன ஆய்வுகள்...பிராடு மைண்டுதான். 


 இப்போது வீ.மாணிக்கம் என்ற ஒரு வரலாற்று ஆய்வாளிரின் ஆய்வை பார்ப்போம். இது இவரது கருத்து மட்டுமல்ல சுப்பிராயலுவின் ஆதாரபூர்வமான பல புதுக்கோட்டை கல்வெட்டை ஆதாரமாக எழுதபட்டுள்ளது. தேக்காடூர் ஒலை சுவடி சென்ற தொண்டைமண்டல சுவடிபோலதான் தொடங்கும் வேட்டுவர் முதலில் புதுகையில் இருந்தனர் அதன் பின் குறும்பர் வந்தனர் அவர்களை வென்ற வெள்ளாளர் கானாடு கோனாடு என பிரித்து ஆண்டனர். ..................................................வேனாம் ஆய்வுக்கு போவோம்.. 

 வீமானிக்கம் சொல்கிறார் 

விஜயநகர காலத்துகுரியவை எனும் கருத்தை தோற்றுவிப்பதற்க்காக 18-19 ஆம் நூற்றாண்டுகளில் தயாரிக்கபட்ட செப்புபட்டயங்களின் நம்பகத்தன்மை குறித்து மேலே கூறப்பட்டது. ஆனால் ஒரு வேத நூல் போன்ற புனிதத்தன்மை பெற்றதாக புதுகை வரலாற்றியலில் கருதப்படும் தேக்காட்டூர் ஒலைசுவடிகள் மரபுவழிச் சான்றுகளுள் முதலிடம் பெறும் 1910-ல் ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் இச்சுவடிகள் சமர்பிக்கபட்டதாக இராதகிருஷ்ணஅய்யர்(1916) தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். பிற ஆய்வாளர்காளுக்கு இச்சுவடிகள் கிட்டாத நிலையில் இச்சுவடிகளில் கூறப்படும் செய்திகளாக இராதாகிருஷ்ன அய்யர் கூறியுள்ளவையே மேற்கோள் காட்டபடுகின்றன.முதனிலை சான்றில் கூறப்படுவதாகத் துனைனிலை சான்றில் காணப்படும் செய்தியை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதே தவறான வரலாற்றியல் அணுகுமுறையாகும்.
இச்சுவடியில் கூறப்படுவதாக இராதாகிருஷ்ன அய்யர் அளித்துள்ள செய்திகளின் சுருக்கம் பின்வருமாறு உறையூரிலிருந்து மதுரை அருகே உள்ள சோழவந்தான் வரையிலும் பரந்து காணப்பட்ட கோனாடு,உறையூர்கூற்றம்,உறத்தூர்க்கூற்றம்,ஒல்லையூர் கூற்றம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளையும் 64 நாடுகளையும்,756 கிராமங்களையும் கொண்டிருந்தது.கொனாட்டிற்குத் தெற்கும் கிழக்கும் அமைவிடத்தை பெற்ற காணாடு காளையார் கோவில்,தொண்டி முதலான பகுதிகளை உள்ளடக்கியதாகக் கானக்கூற்றம் தளைக்கூற்றம்,மிழலைகூற்றம் எனும் இருபெரும்பிரிவுகளையும் 24 நாடுகளையும்,108 கிராமங்களையும் கொண்டதாகும். சோழரின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோனாட்டில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் காஞ்சிலிருந்து அழைத்து வரப்பட்ட வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர். (இந்த ஆதொண்டை சக்கரவர்த்தியை வெள்ளாளர்கள் சோழமண்டல ராஜாக்கள் சரித்திரத்தில் நாகி வயித்தில் பிறந்த தேவடியா மகன் என பெருமை படுத்தியிருந்தனர்) கானாட்டில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் கிழக்கு காஞ்சிப்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட 48000 நற்குடி வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர்.



வெள்ளாளர் வாழும் நிலப்பரப்பில் கொனாடு எட்டில் ஐந்து பங்கும் கானாடு எட்டில் மூன்று பங்கும் கொண்டவையாகும். கோனாடு,கானாடு,தொண்டைமனலத்து 24 கோட்டங்கள் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வெள்ளாளர்கள் அனைவரும் கம்பர் ஏரெழுபது பாடியதை கேட்டனர்.கம்பருக்கு பரிசாக பல்லக்கு,வெள்ளாளக்குடிகளிலிருந்து குடிக்கு ஒரு பணம் பெறும் உரிமை ஆகியன வழங்கபட்டன.கம்பருக்கு எளிதில் வசூலானது.ஆனால் கானாட்டில் தாமத ஏற்பட்டது. கோனாட்டின் ஒல்லையூர் கூற்றத்து வெள்ளாளர்கள் கானாட்டு வெள்ளாளர்க்கு இது குறித்து சிபாரிசுகடிதம் அனுப்பினர் இதனால் கோபமுற்ற கானாட்டு வெள்ளாளர்கள் பணம் தர மறுத்தனர். எனவே கானாட்டு வெள்ளாளரை தண்டிக்கும் பொருட்டு கோனாட்டு போர் தொடுத்தனர்.(எவ்வளவு காமெடியான சண்ட ஒரு புறாவுக்கு போரா பெரும் அக்கபோராக அள்ளவோ இருக்கிறது)




 இது கானாடு கோனாடு வெள்ளார்களிடம் துவந்த யுத்தமாக மாறவே இரு தரப்பினரும் போர்திறம் பெற்ற மறவர்,கள்ளர் சமூகத்தவரை பிற பகுதியிலிருந்து உதவிக்கு அழைத்து வந்தனர். தமக்கு உதவியவருக்குப் பரிசாக நிலமும் வழங்கினர். இவ்விதமாக மறவரும் கள்ளரும் புதுகை பகுதியில் நிலைபெற்றனர். இம்மோதலில் பள்ளருக்கும் பங்குபெற்றுத் தலைப்பழி கொடுத்தமையால் அதற்க்கு பரிசாக அன்னார்க்கு நிலம் வழங்கபட்டதாகப் பொன்னமராவதி செப்பேட்டில்(ஆவணம்14) கூறப்படுகிறது. [இது கரு.ராஜேந்திரனால் தொகுக்கபட்ட பல செப்பேடுகளும் தமிழக்க தொல்லியல் தலைவர் சுப்புராயலு போலி என சுட்டியுள்ளார் காரணம் எந்த மன்னர் பெயருமில்லாமல் வெள்ளாளர் கானியாட்சி என வந்துள்ளதால்] 

முன்னாள் தமிழக தொல்லியல் துறை தலைவர் சுப்புராயலு =============================================================== வெள்ளாளர் கானியாட்சி என்று நேரடியாக போடாமல்,கள்ளர் செப்புபட்டயம், புதுக்கோட்டை மறவர் செப்பேடு என்ற பெயரில் வெளி வந்த கரு.ராஜேந்திரன் செப்பேடுகள் பற்றி முன்னாள் தமிழக தொல்லியல் துறை தலைவர் சுப்புராயலு அவர்கள் அந்த "புதுக்கோட்டை மறவர் செப்பேடு" நூலுக்கு அனிந்துறை எழுதியுள்ளதில்.....




"கானாட்டு வெள்ளாளருக்கும் கோனாட்டு வேளாளருக்கும் இடையே ஏதோ பினக்குகள் ஏற்பட்டதால் அவர்கள் தத்தம் பாதுகாப்பு கருதி வெளியிருந்து மறவர் வீரர்களை தத்தம் ஊர்களில் குடியமர்த்தி நிலக்கானிகள் கொடுத்துள்ளதை இச்செப்பேடுகள் பேசுகின்றன இந்த வேளாளர் பூசல் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இவற்றில் எந்த குறிப்பும் இல்லை பெரும்பாலும் நில உரிமைகள் பற்றிய தகராறாக இருக்கலாம். இச்செப்பேடுகளில் காலத்தை கணிப்பது எளிதாக இல்லை இவை ஒவ்வொண்றும் வரும் சாலிவாகன ஆண்டும் தமிழாண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தி வரவில்லை பலவற்றில் சக ஆண்டு 1400ஐ யொட்டி வந்துள்ளது. இது விஜயநகர அரசுக்காலம் பெயர்கள் முன்னுக்கு பின் முரணாகவும் ஆண்டு பொருத்தமில்லாமல் ஏதோ சங்குக்கு குறிப்பிடுவது போல் கொடுக்கபட்டுள்ளன எதிலும் கிருஷ்ணதேவராயர் போன்ற பெரிய அரசர் பெயர்கள் இல்லை பெரும்பாலும் இவை விஜயநகர அரசு முடிந்த பின் ஏழுதபட்டதாக இருக்க வேண்டும் என்பது உறுதி. 25 பக்கம் உள்ள பழனி மடால செப்பேட்டின் காலம் மட்டும் சரியாக கொடுக்கபட்டுள்ளது. இச்செப்பு பட்டயத்தில் பரங்கி வராகன் என்ற காசு பயண்படுத்தபட்டுள்ளது. இந்னூலில் உள்ள செப்பேடுகள் யாவும் 17ஆம் நூற்றண்டை சார்ந்தவை என கொள்ளலாம்.20-20இல் வரும் வயிரமுத்து விசைய ரெகுநாத சேதுபதி பற்றி குறிப்பும் இந்த ஊகத்தை உறுதி செய்யும். இச்செப்பேடுகள் குறிப்பிடும் மறவர் குடியேற்றத்தை வைத்து இப்பகுதியில் மறவர் 17ஆம் நூற்றாண்டில் தான் குடியேறினார்கள் என்று சொல்வது தவறு.ஏனென்றால் இப்பகுதியில் பல்லவர் காலந்தொட்டே மறவர் பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆசிரியர் அந்த கல்வெட்டு செய்திகளைக் கொடுத்துள்ளார்.பல காரணங்கள் முன்னிட்டு..............







முனைவர் ஏ.சுப்புராயலு கோயம்புத்தூர் 14.11.2017


 இனி மரபுவழித்தரவுகளில் கூறப்படும் இச்செய்திகளை மதிப்பீட் செய்வோம் முதலாவதாக தேக்காட்டூர் சுவடிகள் ஆய்வாளர்களுக்கு கிட்டாதது ஒரு குறை என மேலே கூறப்பட்டது. 1910-ல் நீதி மன்றத்தில் சமர்பிக்கபட்டதாகக் கூறப்படும் இச்சுவடிகள் இன்று கிட்டினும் வெப்பமண்டலச் சூழலில் சிதிலமடைந்து பயனற்ற நிலையிலே இக்கருத்தை கவனத்திற்கொண்டால்19-ஆம் நூற்றாண்டில்தான் இச்சுவடிகள் தயாரிக்கபட்டிருக்கும் என கருதலாம். அடுத்ததாக கோனாடு,கானாடு ஆகிய பிரிவுகளுக்குரியதாகக் கூறப்படும்



 நிலப்பரப்பும்,கூற்றங்களும்,நாடுகளும்,குடியிருப்புகளும், உண்மைக்கு புறம்பானவையாகும்.புதுகை கல்வெட்டுகளில் வளநாடுகளாக கூறப்படும் கோனாடு ஆறு உட்பிரிவுகளையும் கானாடு இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டவையாகும் மேலும் கோனாட்டிற்கு மாற்றுப் பெயராக கூறப்படும் ஜெயசோழவளநாடு எனும் பெயர் ஆயரத்துக்கும் மேற்பட்ட புதுகை கல்வெட்டுகளில் காணப்படவில்லை. கோனாடு சோழரின் ஆதிக்கப்பகுதியாதலால் இப்பகுதியில் சோழனால் வெள்ளாளர் குடியமர்த்தபட்டனர்; பாண்டியர் ஆதிக்கத்திற்குட்பட்ட கானாட்டு பகுதியில் பாண்டியனால் வெள்ளளர் குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி ஏற்புடத்தெனில் கோனாடும் கானாடும் தனித்தனி அரசியல் பிரிவுகளாகக் செயல்பட்டதாக கருத வேண்டியுள்ளது. ஆனால் உண்மை நிலை என்ன புதுகை பகுதி சோழ,பாண்டிய அரசுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகையால் இவ்விரு அரசுகளுமே இங்கு முட்டி மோதிக் கொண்டன.இரண்டின் எவ்வரசின் கை ஒங்கிகிறதோ அதன் ஆதிக்கம் புதுகை பகுதி முழுமையுமே ஆதாவது கோனாடு கானாடு ஆகிய இரு பிரிவுகளிலுமே நிலைபெற்றது. பாண்டியர் கோனாட்டுப் பகுதியில் பண்டே ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பதற்கு ஒல்லைய்யூர் தந்த பூதப்ப்பாண்டியன் எனும் குறிப்பு பகரும்.கானாடு கோனாடு ஆகிய இரு பிரிவுகளிலுமே பாண்டியரும் சோழரும் மாறி மாறி ஆதிக்கம் பெற்றிருந்த நிலையில் பாண்டிய நாட்டவரும்,சோழ நாட்டவரும் தத்தம் ஆட்சியாளர்களின் தூண்டுதலால் புதுகைப்பகுதி முழுமையுமே குடியேறினர் என கொள்வதே பொருத்தமானதாகும். இவ்விதம் குடியேறியவருள் வெள்ளாளரும் அடங்குவர் என கருதலாம். எனவே கானாட்டு வெள்ளாளர்,கோனாட்டு வெள்ளாளர் சொல்லாட்சிகள் இடைக்காலப் புதுகை சமூகத்திற்கு பொருத்தமற்றவையாகும். வெள்ளாளர் தமக்குள் மோதிக்கொண்ட போது உதவும் பொருட்டு மறவரும் கள்ளரும் இப்பகுதியில் வெள்ளாளரால் குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி மீளாய்விற்குரியது. இது ஏற்றுக்கொள்ளபடின் வெள்ளாளர் இப்பகுதியில் குடியமர்ந்த பிறகே மறவரும் கள்ளரும் இங்கு குடியமர்த்தபட்டனர் எனும் செய்தி பெறப்படுகின்றனது. ஆனால் கோடையில் புதுகை பகுதி பாலையாக மாற்றமுறுகையில் பாலை தினைக்குரிய எயின மறவரும் இங்கு வாழ்ந்திருப்பரல்லவா?களபர்-களப்பிரர்-கள்ளர் தொடர்பு கள்ளரும் களப்பிரர் காலத்திலே இப்பகுதியில் நிலைபெற்று விட்டனர் என்பதை புலப்படுத்தும் எனவே இப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான மறவரும் கள்ளரும் பிற்றை நாளில் இங்கு குடியேறிய வெள்ளாளரால் அழைத்து வரப்பட்டனர் எனும் செய்தி பொருத்தமற்றதாகின்றந்து. 





கொங்கு நாட்டு கல்வெட்டில் 
"கரடி வேட்டுவறில் வெள்ளாளரான மருதங்கிழான் "
"பூவாணிய நாட்டு வெள்ளாளரில் சமய வேட்டுவன் "

என கொங்கு பகுதியில் வேட்டுவன் வெள்ளாளன் என இரு குடியும் ஒன்று 
என்பது போல் கள்ளர் மறவர் வெள்ளாளர் ஆனார்கள் என்ற முது மொழி பொருத்தம் அன்று என மாணிக்கம் சொல்கிறார் 




 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்திய புதுகை கல்வெட்டுகளில் குசவர்,அம்பட்டர்,அரையர் ஆகிய சமூகக் குழுக்கள் பிணங்கி மோதிக் கொண்ட சுமார் நாறபது நிகழ்வுகள் சுட்டபடுகின்றன. இவற்றில் ஒன்றில் கூட வெள்ளாளர் மோதிகொண்ட செய்தி கூறப்பட வில்லை. [இங்கு ஒரு பழமொழி, வெள்ளாடு முட்டிகிட்டு செத்ததுமில்லை வெள்ளாளன் வெட்டிகிட்டு செத்ததுமில்லை] என கேள்வி பட்டிருக்கேன். மேலும்,வெள்ளாளர்களின் சண்டையில் பங்கு பெற்றதாக கூறப்படும் சில நபவர்களில் நாயக்கர் எனும் பிற்சொல் இடம்பெற்றுள்ளமையால் இச்சுவடிகளின் தொண்மை கேள்விக்குரியதாகிறது காலத்தால் மிகவும் பிந்தைய 17-ஆம் நூற்றாண்டு காலத்திய,ஒரிரு கல்வெட்டுகளிலே கானாட்டு வெள்ளாலர்(872) கோனாட்டு வெள்ளாளர்(944) எனும் சொல்லாட்சியை கவனத்திற்கொண்டால், இதற்குபிந்தய காலத்திலேயே தேக்காட்டூர் ஓலைசுவடிகள் தயார் செய்யபட்டிருக்க வேண்டும். எனவே நிலௌரிமை மற்றும் ஆலய வழிபாட்டுரிமை பெறும் சுயநல நோக்கில் தயார் செய்யபட்ட இந்த போலியான ஆவணங்களை படுத்துவது வரலாற்று நகைப்பிற்குரியதாக்கும் செயலாகும். 


கோவிலையும் கோவில் நிலங்களையும் வளைக்க போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றே 
தேக்காட்டூர் ஓலை சுவடி இது புதுக்கோட்டை மாவட்டத்தில்  வந்த வழக்கை ஆராய்ந்த 
புதுக்கோட்டை அரசாங்கமும்  தொண்டைமான் அரசும் கள்ளர் பெயர் வந்துள்ளதால் இதை ஆவண படுத்திவிட்டனர் .

1913-ல் வந்த புதுக்கோட்டை நீதி மன்றத்தில் 
வந்த வழக்கில் ஒருவர் அரசனம்பலக்காரன் 
தொடுத்த வழக்கில் வந்த போலி ஆவணமே இந்த தேக்காட்டூர் ஓலை சுவடி கடைசியாக இதை கொடுத்து தனக்கு அரசாங்க வேலை கேட்டுள்ளார் அந்த நபர் .














 நன்றி: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு-ஐயா.மாணிக்கம்.
வீ சுப்புராயலு தமிழக தொல்லியல் துறை 🔔

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.