சேதுபதியின் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html
செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி
https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html
இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை
சேதுபதி மரபின் உண்மையான விளக்கம்
சேது என்பது பாரத்தின் எல்லை "அசேது ஹிமாலயா". இமயமலையிலிருந்து சேது கரை வரை உள்ள எல்லையை பாரத தேசம் என கூறுவர் குமரி முனை அல்ல இராமேஸ்வரம் அருகே உள்ள சேது பாலத்தையே எல்லையாக கூறுவர் வடவர். இதன் காவலனுக்கு இராமரே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் என்ற கதைகளும் உண்டு இவரை ஸ்ரீராமரின் அடியாரான குகன் வம்சத்தினர் என சிலர் கூறுவதுமுண்டு. இன்னும் சிலர் தஞ்சை ஆண்ட ஸ்ரீ ராஜ ராஜன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவை காக்க அமர்ந்த ஒரு தளபதி என கூறுவர். தொன்முது கரை காக்க அமர்ந்த கவுரியர் என்ற பாண்டியர் என்பவர் சிலர். இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் கலிங்க மாகன் என்ற சோழகங்க தேவனின் வம்சம் என இலங்கை வரலாற்றாளர் கருதுகின்றனர். நாயக்கர் காலத்தில் அமர்த்தபட்டவர் என்பர் சிலர். இல்லை காலம் காலமாக வாழ்ந்தவர் என்பர் சிலர். இப்படி பல கதைகள் இருந்தாலும் நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்தவர் என கல்வெட்டு 1403 கல்வெட்டு கூறுகிறது. சேதுபதி எந்த வம்சத்தவர்: சேதுபதியின் செப்புபட்டயங்களில் செயதுங்கராயர் வங்கிஷம் என்ற வார்த்தை வருகிறது. கல்வெடுகளிலும் செப்பேடுகளிலும் செம்பிவளநாடன்,பரராஜகேசரி,அகளங்கன்,ரவிகுலசேகரன்,வைகைவளநாடன்,மனுநீதி மன்னன், சேது காவலன் என பல என பல சோழனை சார்ந்த பட்டங்களும் பாண்டியரை சார்ந்த பட்டங்களும் வந்தாலும்.செம்பி வளநாடன் என்ற பட்டம் சோழனை சார்ந்தது என்ற முடிவுக்கு வந்தாலும் இந்த செயதுங்கராயர் வங்கிஷம் என்பதி பொருள் முழுமையாக புரியவில்லை.
வங்கிஷம் என்றால் என்ன?
வங்கிஷம் என்ற வார்த்தைக்கு "வம்சம்" என்று பொருள். பாண்டியர் தங்களை "சந்திர குல வங்கிஷம்". மதுரை நாயக்கர் "துளுவ வங்கிஷம்". சேரர் தங்களை "சேரமான் வங்கிஷம்" என கூறுவதில் வங்கிஷம் என்றால் வம்சம் என்று பொருள். திருமலை நாயக்கருக்கு முந்த சேதுபதி: திருமலை நாயக்கன் பாட்டன் முத்துவீரகிருஷ்ன நாயக்கன் உடையான் சேதுபதி என்பவரை நியமித்தாக கூறும் நாயக்கர் வரலாறு. "அச்சுதராயர் அப்யுக்தம்" என்னும் விஜயநகர வரலாறு. கிருஷ்ண தேவராயர் தளபதி விசுவநாத நாயக்கன் "சயதுங்க தேவன்" என்ற சடைக்க தேவனை கொன்று சேதுவை கைப்பற்றினான் என கூறுகிறது. இதை மறவர் ஜாதி வர்ணம் என்னும் சுவடியும் உறுதிசெய்கிறது. இதை ஆராய்ந்த வில்லியம் டெய்லர் மற்றும் மெக்கன்சி கையெழுத்து பிரதியும் உறுதி செய்து இதையே "மதுரா மானுவல்" என்னும் புத்தகத்தில் ஜே.எச்.நெல்சன் மதுரை வரலாறு புத்தகத்தில் கூறுகிறார்.
அந்த "ஜெயதுங்க தேவன்" பேரனையே முத்துவீரப்ப நாயக்கன் சேதுபதியாக அமர்த்தினான் என்கிறது. இவனே சடையக்க உடையான் சேதுபதி. தன் மூதாதயரான "சயதுங்க" தேவரை ஒவ்வொரு முறையும் செப்புபட்டயத்தில் "செயதுங்கராய வங்கிஷம்" என குறிப்பிட்டனர் சேதுபதிகள். சேதுபதியின் செப்பு பட்டங்கள் 250 க்கும் மேல் உள்ளது திருமலை நாயக்கரை விட அதிகம். அத்தனையும் ஆங்கிலேயரே பதிவு செய்து தமிழக ஆவணங்களில் ஊர்ஜிதபடுத்தபட்டு ஆவனமாக உள்ளது. செப்பு பட்டயம் மட்டுமல்ல கல்வெட்டுகளும் 70 க்கு மேல் இன்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இவை கடந்த 500 வருடமாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பழமை என ஊர்ஜிதபடுத்த பட்டுள்ளது. இப்போது சேதுபதியின் மூதாதயன் செயதுங்கன் யார்? வரலாற்றில் செயதுங்கன் யார்? பாண்டியர் காலத்திலும் செயதுங்கநல்லூர் செயதுங்க பாண்டியன் என சில பெயர்கள் வருகின்றனர். இதைப்போல் செயதுங்க பல்லவராயன், செயதுங்க தொண்டைமான் என சில பெயர்கள் சோழர் காலத்திலும் வருகிறது. இந்த துனைப்பெயரின் மூலவன் யார். குலோதுங்க சோழன்: இராஜேந்திர சோழன் 1070களில் இறந்தார். அவருக்கு பின் ராஜாதித்தர் போன்றோர் அரியனை ஏறி இறந்தனர். இந்நிலையில் சோழ சிம்மாசனம் வாரிசற்று போனது. இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கையின் பேரன் இராஜேந்திர நரேந்திரன் என்னும் மதுராந்தக தேவன் சோனாட்டின் வாரிசாக அமர்ந்தான் அவந்தான் "கலிங்க போர்" கொண்ட குலோத்துங்க சோழன். குலோத்துங்க சோழன் -சளுக்க வாரிசா? இவனை விஷ்னுவர்தன் என்னும் கீழை சளுக்கர் அரியனைக்குரிவன் என உரைநடை எழுதுகின்றனர். ஆனால் குலோத்துங்கன் கல்வெட்டுகளில் எந்த இடத்திலும் தன்னை சளூக்கன் என கூறியதில்லை. மேலும் இராஜ இராஜனுக்கு பின் "தெலிங்கர் குல காலன்" என்ற பட்டம் புனைந்துள்ளான். மேலும் தமிழிலே இன்றைய கர்நாடகா,ஆந்திரா பகுதிகளில் கல்வெட்டு கிடைக்கிறது. ஆந்திரத்தில் சில கல்வெட்டு பகுதி அறிவிப்புக்காக தெலுங்கில் உள்ளது. மேலும் குலோத்துங்கனால் பரிசு பெற்ற செயங்கொண்டார்,ஒட்டக்கூத்தர்,கம்பர் இவனை சோழன் மனுநீதி சோழன்,செம்பியன் வழியே உதித்த சோழ குல திருமால் என கூறுகின்றனர். குலோத்துங்க சோழன் சளுக்கன் என்பது உறைநடை மட்டுமே யார் வேனாலும் கருத்து எழுதலாம் ஆனால் கல்வெட்டுகளில் இல்லை. இராஜேந்திரனுக்கு பின் கிழக்கு ஆசியா முழுவதும் கலிங்கம் முதல் இலங்கை பாண்டியநாடு சேரநாடு வரை குலோத்துங்கன் கொடி பறந்தது. பாண்டியனை அரியனையில் தூக்கி அதற்க்கு பதில் தன் மகன் ஒருவனை சோழபாண்டியன் என்றோரு மன்னனை அமர்த்தினான். இவன் மறத்தமிழனே அன்றி வேறில்லை. சுருக்கமாக சொன்னால் இராஜேந்திரருக்கு பின் அரியனைக்கு வந்தவன் என்ற ஆதாரத்தை தவிர உறுதியான கல்வெட்டு சான்று சளுக்கன் என கிடையாது. முதலாம் இராஜ இராஜ சோழனும் தன்னை தெலிங்கர் குல காலன் என குறிப்பிட்டுள்ளான்.
குலோத்துங்கன் பல கல்வெட்டுகளில் "தெலிங்கர் குல காலன்" என வந்துள்ளது.
நார்த்தமலை கடம்பர் கோவில் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டு "ஸ்வஸ்திஸ்ரீ ராஜகேசரி திரிபுவனசக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கொண்டு...;... .......ஸ்ரீ திரிபுவன தேவர்க்கு யாண்டு... இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து நகரத்தோரொம்"
அதே கோவிலில் வேறோரு கல்வெட்டு... "ஸ்வஸ்திஸ்ரீ ராஜகேசரி திரிபுவனசக்கரவர்த்திகள் மருதையும் கருவூரும் பாண்டியன் கொண்டு...;... .......ஸ்ரீ திரிபுவன தேவர்க்கு யாண்டு... இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து நகரத்தோரொம்"
அருமைகுளம் கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டு. "ஸ்வஸ்திஸ்ரீ நகர கோயிலோம் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து திருமேற்கோயிலாம்." ஆக ஒரு தமிழ் மன்னனை திரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். குலோத்துங்கனின் விருதுபெயர்கள்: டி.வி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய குலோத்துங்க சோழன் என்னும் நூலில், 1070ல் அரசாட்சி ஏகிய குலோத்துங்க சோழன் என்ற பெயரில் அரியனை ஏறிய இவனுக்கு அதுவே வானால் பெயராணது.. நாமும் குலோத்துங்கன் என்றே அழைப்போம். இப்பெயரன்றி இவனுக்கு அபயன்,சயதுங்கன்,விருதராஜபயங்கரன் கரிகாலன்,இராஜநாராயனன்,உலகுய்யவந்தோன் என பல பெயர்கள் உள்ளது. இது கல்வெட்டுகளிலும் கலிங்கத்துபரணியிலும் உறுதிசெய்யபட்டுள்ளது.
குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதபட்ட கலிங்கத்து பரணியில், முதலி வரும் சூரியன் துதியில், சூரியன் துதி: 7. பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க ஓராழி தனைநடத்து மொண்சுடரைப் பரவுதுமே. 8. பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத் தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. உரை: சூரியின் உல்கிருள் நீங்க ஒராழி நடத்துதல் போல்,முதற் குலோத்துங்கன் கலியிருள் நீங்கி தனியாழி நடத்துகின்றான்.
காளி வாழ்த்தும் செயதுங்கன் மரபு: காளி மகிழ்தல் 210 வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. காளி புகழ்தல் 211 உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34 உரை: சோழனின் வரலாறை கேட்ட தில்லை காளி இனி குலோத்துங்கன்(செயதுங்கன்) உலகை காப்பான் என வாழ்த்தினாள்.
ஒடனே கேப்பாங்க மறவர்கள் கலிங்க போரில் உண்டா: அதுவும் இருக்கு.
தொடை அறுந்த வீரர் செயல் 438 இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. பானையை அடுப்பில் ஏற்றல் 518 கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு தலையுங் காலும் அற்றுவீ ழானைப் பானை அடுப்பினி லேற்று மம்மா. 47 உரை: மறவர்கள் இரு கால்,தொடை அறுந்தும் போரிட்டனர் சோழனுக்காக. போரில் வாள் மறவரால் கொள்ளபட்ட யானைகளை பானைகளில் ஏற்றுங்கள் என பேய்கள்...ஒலம்.
மறவன் என்பது பன்பு பெயர் தானே......அப்படியா...பாண்டியர் கல்வெட்டுகளில் "மறத்தி வயல்" என்ற மறவனின் பெண்பாலும் வந்துள்ளது. இனி மறவன் என்பது இனப்பெயரே ஒழிய பன்புபெயர் கிடையாது புதுக்கோட்டை குளத்தூர் வட்ட பாண்டியர் கல்வெட்டு: "ஸ்வஸ்திஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு.......... மறத்தி வயக்காலுடனு ம்......சத்ருகாலன் வகையும்...... விக்கிரமசோழன் என்ற "செயதுங்கன்": குலோத்துங்கனுக்கு பிறகு இரண்டாம் குலோத்துங்கன் அதன் பின் வந்த விக்கிரமசோழ்னை ஒட்டகூத்தர் செயதுங்கன் என அழைக்கபடுகிறார். விக்கிரமசோழனுலாவில், மனுநீதி சோழனையே மறவன் என்கிறார் ஒட்டக்கூத்தர், தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம் காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167 சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4 உரை கன்றை இழந்து அழுத பசுவிற்காக தன் மகனை திருத்தேரில் ஏற்றி கொன்ற மறவன் என மனுநீதி சோழனை புகழ்கிறார் ஒட்டகூத்தர்.
இதன் பின் விக்கிரமசோழனை சயதுங்கன் என பாடிய ஒட்டகூத்தர். டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத் தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168 உரை: போர் யானை மீதி ஆத்தி மாலை அனிந்த விக்கிரம சோழன்.(சயதுங்கன்).
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323 உரை: யானை மீதி வந்த விகிகிரம சோழனை கண்டதும் கெட்டேன்.
543 தாளிரண்டா னிலவேந்தர் தலைதாங்குஞ் சயதுங்கன் தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோ ளாயிரமே. 7 உரை: தன் இரு கால்களினால் நிலவேந்தர் முடிகளை காக்கும் சோழன் ஒரு காலத்தில் அசுரனை வீழ்த்தினான் அவன் வழி வந்த விக்கிரம சோழன் 100 ஆயிரம் ஆண்டுகள் வாழ்க.
குலோத்துங்கன்,விக்கிரமசோழனுக்கு பிறகு "செயதுங்க" என்ற விருதுபெயர் பலருக்கும் பல இடங்களுக்கும் உள்ள்து,
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர், செயதுங்க நல்லூர், செயதுங்க பாண்டியமண்டலம், செயதுங்க பல்லவராயர் என குலோத்துங்க பெயர் பலருக்கும் அடைமொழியாக இருந்துள்ளது.
முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி
சேதுபதி கல்வெட்டுகளிலும் செப்பேட்டிலும் வரும் செய்தி: சேதுபதியின் 200,250 செப்பேட்டில் வரும் செய்தி......... "செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும் இரன்யகர்ப்பயாஜி ரகுநாத சேதுபதி"
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில்
தவிடுபொடியானது. முதலாம் சுந்தர பாண்டியன் காலத்திலே சேதுபதி மன்னர்களின் முன்னோர் ஆன் ஜயதுங்கராயன்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
காலம் :12-ஆம் நூற்றாண்டு
மன்னன் : ஜயதுங்கராயன்,பாண்டியன்
இடம்:குளத்தூர் குடுமியான்மலை கோவில்
செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ அருளிசெயல் உடையநாயனான ஜயதுங்கரயனுக்கு
விழுமியான புவனமுழுதுடைய பல்லவராயன் கோனாட்டில் விலைகொண்ட
...........காங்கேயராயன் எழுத்து.
பாண்டியனுக்கு கீழ் சுயாட்சி புரிந்துள்ளார். சேதுபதிக்கு கீழ் காங்கேயர்,வழுத்தூர்
பல்லவராயன் 16-ஆம் நூற்றாண்டுக்கு பின் அறந்தாங்கி தொண்டைமான்
என அனைவரும் இருந்துள்ளனர்.
மன்னர் சேதுபதி ஆட்சிக்குஉட்பட்ட அறந்தாங்கி அரசு தொண்டைமானார்கள்பற்றிய செப்பேடுகள் !
இதே ஜயதுங்கராயன் கீழ்கொடுமாளூரான வடதலை செம்பி நாடு உடையான்,இளையான்குடி உடையான் என பல பெயரில் வந்தவரை பற்றி இன்னும் விபரங்கள் வரும்
செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும் உடையான் சேதுபதி காத்த தேவர்கள்"
செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவர் அவர்கள்"
என பல செப்பேட்டில் வரும் செயதுங்கராயன் யார் என்பது ஊர்ஜிதமாகும்
நாயக்கர் காலத்துக்கு பின்னும் வந்த இந்த செப்பேட்டில்
குலோத்துங்க சோழநல்லூர் என்ற விரையாத கண்டன் இன்றைய இளையங்குடி -
இராமநாதபுரம் சாலையில் குலோத்துங்க சோழ நல்லூர் மற்றும் விரையாத கண்டனும் உள்ளது.
இத்தனைக்கும் அறந்தாங்கி தொண்டைமான், வைத்தூர் பல்லவராயன், காங்கேயன் முதலியா தலைவர்கள் சேதுபதிக்கு சேவகர்களாக இருந்துள்ளனர். நாயக்கர் காலத்திலே குலோத்துங்கன் பெயர் ஏன் தாங்கி வந்தது என்பது புரியாமல் நெடுநாள் இருந்தது இன்றே புரிந்தது. சேதுபதிக்கு அகளங்கன்,செம்பிவளநாடன்,இரவிகுலசேகரன்,பரராஜகேசரி, வைகைவளநாடன்,தேவைநகராதிபன்,மனுநீதிமன்னன் என சோழனின் பல பெயர்கள் வந்தாலும் இந்த செயதுங்கராயன் என்பவர் யார் என இப்போதே தெரிந்தது.சோழருக்கு பின் உடையார் தேவர் என்ற பட்டமுடையவர்கள் சேதுபதியை தவிர வேறு யார் முல்லையந்தார் மார்பன் அகலங்கன் செம்பிவள நாடன் ரவிகுலசேகரன் என்பது சேதுபதியை சாரும்
மேலும் கீழசெம்பி நாடு வடதலை செம்பி நாடு எழுர் செம்பி நாடு ராமன்னாதபுரத்திலே தான் உண்டு அதனாலே சேது காவலன் என்பர் இதை ஆண்ட ஸ்ரீ ராமனும் செம்பி நாட்டான் என்றும் இம்மறவர் செம்பி நாட்டு மறவர் என அழைக்க பாடலாயினர்.
இது நாயக்கர் காலத்திலே சோழனை குறிப்பிட்ட எந்த ஒரு ஆதாரங்களையும் எங்கேயும் பார்க்க முடியாது. சேதுபதியின் மூதாதயனாக குறிப்பிட்ட செயதுங்கராயன் என்ற பெயர் குலோத்துங்க சோழனையும் விக்கிரம சோழனையும் குறிக்கும் செயதுங்கன் என்பது நிருபனமாகிறது. குலோத்துங்கணை தமிழன் அல்ல என சிலர் கூறுவது நகைப்பிற்குரியது.
புதுக்கோட்டை சாசனத்தில் வரும் ஜெயதுங்கராயன் என்னும் பெயர் சடைக்கன் சேதுபதியின் முன்னோன் என்பதில் அய்யமில்லை.
சேதுபதி குலோத்துங்க சோழ்னையும் விக்கிரமா சோழனையும் முன்னவானாக கொண்டு சளுக்க வம்சத்தை கிஞ்சி ஆட்சி செலுத்தவில்லை என சூரிய நாராயன சாஸ்திரி சொல்கிறார்.
சோழன் -----செயதுங்கன்------------சேதுபதி........ என தொடர்கிறது. இதி ஒரு ஆதாரமே ஒழிய மற்ற எந்த தமிழ் இனத்தவர் அனைவருக்கும் சோழனை கோருவது ஏற்புடையதே. தமிழ் மக்கள் தங்கள் மன்னர்களை கோறுவதும் ஏற்புடையதே. நன்றி நன்றி: குலோத்துங்க சோழன்(சதாசிவ பண்டாறத்தார்) கலிங்கத்துபரனி மூவருலா சேதுபதி கல்வெட்டுகள்,செப்பேடுகள்--உயர்திரு.ஐயா.எஸ்.எம்.கமால் மதுரை மானுவல் -ஜெ.ச்.நெல்சன் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.