Thursday, February 28, 2013

நாயக்கர்,கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை

நாயக்கர்,கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை:


நாயக்கர் கவுண்டர் மற்றும் ரெட்டி இனத்தவர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகத்தில் குடி புகுந்தவர்கள் இவர்களுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு தான் தாய்மொழி.ஆனால் சில தமிழ் பேசும் இனத்தவர்களுக்கும் இந்த பட்டங்கள் இருக்க இன்று நாம் பார்க்கின்றோம் அதன் காரனத்தை இங்கு நாம் பார்ப்போம்.இந்த பட்டங்கள் எங்குஇருந்து வந்தது இதன் விளக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.

நாயக்கர்:(NAIK or NAYAK)
நாயக்கர் இந்த பட்டத்தின் விளக்கம் படையின் நாயகன்(படை தலைவன்) என்று அர்த்தம். இந்த பட்டம் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு முறையில உச்சரிக்க படுகிறது.இதை வேட்டுவர்,வெள்ளாளர் மற்றும் இடையர்,கம்மாளர்,செட்டியார்,குறும்பர்,வனவாசிகள் போன்ற பல மக்கள் பூண்டுள்ளனர்.

மராட்டியம்:
நாயக்
ஆந்திரா:
நாயுடு
கர்நாடகம்:
நாயுடு,நாயகா
ஒரிசா:
நாயக்,பட்நாயக்(படைநாயகன்)
தமிழ்நாடு:
நாயக்கர்,நாயுடு,படையாச்சி(படை நாயகன்),படைத்தலைவன்.

என பல்வேறு வகையில் உச்சரிக்கபடுகிறது.

கவுண்டர்:(GOUNDAR)(GAIKWAD)(GOWDA)

கவுண்டர் இந்த பட்டத்தின் விளக்கம் கா+மீண்டர் அதாவது மாடுகளை காப்பவன் அல்லது மீட்டவன் என்று அர்த்தம். இந்த பட்டத்தை மாடு,ஆடுகளை மேய்க்கும் இடையர்குலமான குறும்பர் மற்றும் யாதவ மக்கள் பூண்ட பட்டம் பிற்பாடு வேட்டுவர் மற்றும் வெள்ளாளர் இந்த பட்டம் பூண்டனர். இதுவும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு முறையில உச்சரிக்க படுகிறது.
மராட்டியம்:
கைக்வாத்,கோக்வாத்(GAIKWAD)
ஆந்திரா:
கவுடு
ஒரிசா:
கவுடா
கர்நாடகம்:
கௌடா,கவுண்டா
தமிழ்நாடு:
கவுண்டர்
என பல்வேறு வகையில் உச்சரிக்கபடுகிறது.

ரெட்டி:(REDDY)
ரெட்டி தமிழில் வெட்டி என்று பொருள் தருகிறது. இதற்கு அர்த்தம் காடுகளை வெட்டி கழனி ஆக்கியவன் என்று பொருள்.அதாவது காடுகளை வெட்டி கழனி திருத்திய விவசாயி இந்த பட்டத்தை பூண்டனர்.அதாவது கங்கை குலத்தவர்களான விவசாயிகள் பூண்ட பட்டம்.
ஆந்திரா:
ரெட்டி
தமிழ்நாடு:
பாப்புரெட்டி,தொம்மை ரெட்டி,காடுவெட்டி
இதையும் பல தமிழ் இனக்குழுக்கள் பூண்டுள்ளனர்.

சோழ மன்னர்கள் காலத்தில் ஆந்திரா கர்நாடகா மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களின் மீது படையெடுத்து பல தரப்பட்ட மக்களைசிறைபடுத்தி கொண்டு வந்துள்ளனர்.ஆதாவது துளுவர்,கலிங்கர்,கங்கர்,குறும்பர்,வங்கர்,தெலிங்கர்,சளுக்கர்,ராஷ்டிரகூடர் என பலதரப்பட்ட மக்களை கொண்டு வந்துள்ளனர்.இவர்களை கோயில் கட்டுவதற்கும் அனைகட்டுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் வெளிநாட்டு படைஎடுப்புக்கும் கொண்டு வந்தனர். இன்னும் பல சளுக்க,ராஷ்ரக்கூடர் தளபதிகளும் சோழர் படையில் பனிசெய்துள்ளனர்.இந்த பட்ட்ங்களை தமிழ் மன்னர்களான் சேர,சோழ பாண்டியர்கள் பூண்டதில்லை என்பதை நிதர்சனமாக காண்கின்றோம். எனவே இப்பட்டங்கள் தமிழ் குலத்தினரிடையே கான இதுவே காரனமாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.