Wednesday, February 13, 2013

மலையமான்கள்

விருது பல கூறுவீரமுடையான். உடையான் படைக்கு அஞ்சான். கோவல்ராயன்,வன்னியநாயகன், சேதிராயன்,உடையான்,மலையமான்,நத்தமான், சுருதிமான்,நாட்டார்,மலாடுடையார்,காடவராயன்.

மலையமான்கள் ஆண்ட பகுதி.

 சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர்  மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.

இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.

திருக்கோவிலூர் மறவர்கள்.


சோழ மன்னர்களது ராஜ்ஜியம் வேளிர்களின் கூட்டணியாலானது.வேளிர்கள் எல்லைக்காவலர்களாக அரசனின் படை பலமாக இருந்துள்ளனர்.அதற்காக அரசனிடம் பொருளுதவி பெற்று வந்துள்ளனர் என்று கீழ் வரும் சங்ககால புறநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம்.

பாடல் 122இல், ‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது;
ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று.
மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்’ என்று கூறுகிறார்.

இப்பாடலின் மூலமாக அரசர்கள் தமது நாட்டின் எல்லையைக் காக்க மறவ்ர் குல வேளிர்களுக்கு பொருளுதவி செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. கோவலூர் என்பதன் பொருள் அரசு காவலர் குடியிருப்பு என்பதாகும்.

மலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட
நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.
சேரனுக்கு மலையமான் உதவியாக போரிட்டதையும்,மலையமான் என்பது சேரனின் குடிப்பெயர் என்பதையும் அறிவோம்.
இவ்வாறாக இன்றைக்கும் கோவற் கோமான் மலையமான் வம்சமாக ஆதாரப் பூர்வமாக வாலிகண்டபுரம் ,வரஞ்சுரபுரம் திருச்செங்கோட்டில் ஐம்பது கல்வெட்டுகள்,செப்பேடுகள்,16,17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரூர் கல்வெட்டுகள் முதல் திருக்கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டு வரை உறுதியாக அறியப்படுவோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.
அரசனுக்கு அரணாகவும் காவலாகவும் இருந்துள்ள மலையமான் குலத்தினர் பிற்காலத்தில் சோழ,சேரர்க்கு அகமுடையார் ஆக இருந்துள்ளனர்.
கோவல் மறவர்களில் சுருதிமான் மூப்பனார்கள் (கத்திரியர்)கத்திக்காரர்களாக பதினெட்டாம் நூற்றாண்டு வரை அகமுடையாராக பணியாற்றி உள்ளனர் என்பதும் அறியலாம்.




பார்கவ குல சத்திரியர்களின் சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேட்டில் வன்னிய பட்டம்.

திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் தெய்வீகராஜனுக்கும் பாரி மக்களான அங்கவை,சங்கவை இருவருக்கும் உருவான சந்ததிகள் பார்கவ குல சத்திரியர்கள் எனப்படுகின்றனர்.

தெய்வீக ராஜனிடமிருந்த பச்சைக்குதிரை அதிசயமானது.அதனை கேள்விப்பட்ட மூவேந்தரும் அதனை வாங்கி வருமாறு கேட்டு தத்தமது அமைச்சர்களை அனுப்பினர்.குதிரை வேண்டுமென்றால் போரிட்டு பெற்றுக்கொள்க என்று தெய்வீகன் கூற போர் மூண்டது.மூவேந்தரும் தோல்வி கண்டனர்.

போரில் தோற்ற மூவேந்தரும் மலையமான் தெய்வீகன் வெற்றி கொண்டார் என ஒப்புமை அளித்து எவ்வளவு நிலப்பகுதிகள் வெற்றிப்பரிசாக வேண்டுமென கேட்க,தெய்வீக ராஜனும் தனது பச்சைப்புரவியில் ஏறி தான் சுற்றிவரும் தூரம் எவ்வளவோ அவ்வளவே போதும் என்றார்.
அவ்வாறு எவ்வளவு நிலம் அடைந்தார் என்பதை கீழ் வரும் கிருஷ்ணாபுரம் செப்பேட்டுப்பாடல் கூறுகின்றது.

வடதிசைக்கடியாறு குணதிசைக்கரிய கடல் வளம் வராத 
குடதிசைக்கு கொல்லிமலை தெந்திசைக்கு திவ்வியாறு 
குலவுமெல்லை யடவுபட கணப்பொழுதிலொரு வட்டஞ்சூழ்ந்த
பரியதன்மேல் வந்து புடவிதனிலரச ரொருமூவர் திருமுன்பு போந்தான் வேந்தன்.

வேந்தர் மூவரும் குதிரை ஓடிய இடமனைத்தையும் கொடுத்து திருக்கோவலூரில் தெய்வீக மன்னனுக்கு பட்டாபிஷேகம் செய்துவித்த வரலாற்றையும் செப்பேடு கூறுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த தெய்வீக ராஜனின் மரபில் வந்தவர்கள் இம்மைக்கு புகழும்,மறுமைக்கு வீடுபேறும் அடைதற்பொருட்டு மடம் ஒன்றைக்கட்ட முடிவு செய்கின்றனர்.அவ்வாறாக எடுத்த முடிவின் படி தெய்வீக ராஜன் மரபு வழிவந்தவர்கள் யார் யார் என கிருஷ்ணாபுரம் செப்பேடு தெரிவிக்கின்றது.


  செப்பேட்டில் வரும் அப்பகுதி:
சேரமண்டலம் சோழமண்டலம் பாண்டியமண்டலம் கொங்குதேசம் நான்கு மண்டலத்துண்டாகிய மலையமன்னர்,நத்தமன்னர்,பாளையக்காரராகிய பண்டாரத்தார்(பாளையங்களின் தலைமையாளர் மற்றும் அரசின் கருவூல அதிகாரி பதவி),உடையார்,நயினார்,சீமைநாட்டார்(மூப்பனார்), சில்லரைகிராமத்து  வன்னியர்யிவர்கள்  அனைவருக்கும் பொதுமடம் கிரமமாய் நடந்து வருகின்ற படியினாலே"ஆண்டு வர்த்தனையாக கட்டளை இட்ட சுவாதியம்" என்று தொடர்கிறது செப்பேடு..

இதில் அறிய வரும் செய்தி என்னவெனில் தெய்வீக ராஜனின் மரபுவழி பாத்தியப்பட்டவர்களாக சில்லரை கிராமத்து வன்னியர்கள் என  குறிப்பிட்டுள்ளதை பார்க்கும் போது வன்னியர் என்ற பட்டம் பார்கவ குலத்தாருக்கும் உண்டு என்பதும் தெளிவாகும்.பள்ளி வீரர்களை போருக்கு பயன்படுத்தியதாலேயே வன்னிய நாயகன்,காடவராயன் என்ற பட்டங்களையும் பார்கவா கோத்திர அரசர்களின் விருதுப் பெயராக  காண முடிகிறது.இவர்களுக்கே பிரம்ம வன்னிய பட்டமும் இருந்துள்ளது.தற்போது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பின் ஜாதிய வகைப்படுத்தலின் போது நம் மக்களில் சிலரும் வன்னியர் என பிரிந்துள்ளனர்.
உடையார்பாளையம்,அரியலூர் ஜமீன்கள்  பார்கவ கோத்திரம் கொண்டோர்.நமது இனத்தாரின் பட்டங்களும் வன்னியரில் காணப்பட இதுவே காரணம்.தொண்டை மண்டல குடிகளில் பெரும்பான்மையோர் வன்னியர் என்ற பெயரின் கீழேயே ஒரே ஜாதியாக பதிவு செய்து கொள்ளப் பட்டுள்ளனர்.கோத்திரம் முதன்மையென கொண்டோர் பார்கவ குலம் என பிரிந்துள்ளனர்.

நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.