மலையமான் காசுகள்
திருக்கோவலூர் மலையமான்
என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான்
வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக்
காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு,
மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி
100 - 300 ஆகும்.மலையமான்கள் ஆண்ட பகுதி.
சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும்
ஊர் மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத்
தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது.
சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.