பா.நீலகண்டன்
(Article in communist website)
இந்த கட்டுரையை வண்மமாக பார்ப்பவர்கள் மறுப்பு,கீற்று,வினவு,சவுக்கு,மள்ளர் ஆவனங்கள் இன்னும் எத்தனையோ வலைதளங்களிலும் கருப்புசட்டை,சிவப்புசட்டை
கருப்பர் கூட்டம் ஐ.பி.சி முதலிய யூடூப் சாணல்களிலும் எம் இனத்தை போலியாக சாடியுள்ளனர் என பரிசோதனை செய்யவும்.
-நன்றி
அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில்
தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர்
விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக்
கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர்
என்பது புலனா~ கிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட
நான்கு பிரிவினர்்ான மரபும் தொழி~ லும் வரையறுத்த மரபியல், அதனை
அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது.
இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என
இளம்பூரணர் உரை எழுதுகிறார்.
இந்த இழிந்த மக்கள் யார்?நடுவண்
ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய
கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~
படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து
என்மனார் புலவர்"இதை
முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாகக் கொள்வோம்.
இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~
வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும்
நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு
உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~
திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாம~ லும், இன்பத்தின் வழாமலும்
இயலல்வேண்டும். அவை~ யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச்
செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும்,
குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருது~ வராகலானும், இன்பம் இனிய
நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர்
ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப்
பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின்
இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்துிறது. ஆக, பொருளாதார
ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்;
அவர்களுக்கு அடித்தொழில்
செய்தோர் ஒரு பக்கம் என்்று அன்றையச்சமூகம் பிளவு~ பட்டுக்கிடந்தது
என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்ள் குற்றேவல் செய்தோரின்
சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க
இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச்படு~ கின்றனர். துடி, பறை
என்னும் தோல் கருவிகளை இயக்கு~ பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர்
"என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~
கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில்
நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65
இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில்
பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று
தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன்
என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது.
(கலி:72:4; 311:2)
பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என
அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள்
மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு
காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி
என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின
வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப்
புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர்
பகுத்துண்டோரே" (ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக,
அன்றைச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான்
போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர்
எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள்
இவர்களா? இது பற்றி உறுதியாகக் கூறமுடியாவிடினும் சில யூகங்களை
முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும்
மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில்
குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த
பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62)
பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத்
தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67
மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில்
செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில்
நெல் வயல்~ களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு
கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை
மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின
வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)
கொண்டைக்
கூழைத் தண்தழைக் கடைசியர்(பள்ளர் ) சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர்
செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது
நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு
கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர்
களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு
கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண
தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட
யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல்
உழைப்பில் ஈடுபட்டவர்ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்"(பள்ளர் ) என்று
சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்பதற்கான
68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக்~ கடைசியர் தங்கள் சமூக
நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இட~
முண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!
இலக்கியங்கள்
சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி
உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~
களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று
சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர்
விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள்
பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக்
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்"
(அகம்:41:1-6)நிலம்,
ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்களை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை'
மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க
இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச்
சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே;
இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான
ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.
சீவக
சிந்தாமணி ஏமாங்கத நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில்
நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல்
அறு~ வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்ள் `கடைசியர் ' என்றே
அழைக்கப்படுகின்றனர்."சேறமை
செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது
பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண்
45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக
மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால்
கடைசியர்(பள்ளர் ) மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப
உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே"
(பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப்
புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர்
மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற
வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார்
கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல்
மிசைஉழத்தி மகஉறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும்
புன்சிறுநா்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண்
கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச்
சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல்
புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்தண்
புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத்
தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி
புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)
புலையர்கள்
இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும்
அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே
செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர்,
கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்~ களுக்கான குடியிருப்புகள்
உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான
மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல்
மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற
வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும்
மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப்
`பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என
அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும்
இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்துிறது. `கீழ்மைத் தொழில்
உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது
தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு,
கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர்.
தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும்,
யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில்
பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத்
தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.
ஊரில் விடும்
பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார்
தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல்
விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும்
நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு
ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த
அறிமுக வரிகளால் அறியலாம். இவர்ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார்
குடி~ யிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்~ பட்ட உண்மைக்கு
நந்தனே சான்று.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
"நாத்து
நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப்
பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும்
அன்றியில்....
சேரியண்டையில்
குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை
வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது
அன்றியில்.....ஆண்டைமார்களிடும்-பணிவிடை
செய்வதும்,
அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து
கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்....
இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமை~ யையும் தெளிவாக
விவரிக்கிறது.
இதுவரை
இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப்
பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்~
றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்தியுó முக்கூடற்ள்ளு,
இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்~ படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்;
கடைநிலை 73 மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு
இலக்கியம் காட்டும் உற்த்தி உறவுமுறை ற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு
இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்து~ கிறது. உருவமற்ற நிலப்பிரபுவான
இறைவனின் பிரதிநிதி~ யாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்~
பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்~ கள் என்ற இரு
வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய
திருமாலுக்குச் சொந்தமானது
முக்கூடல்
அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91)
"முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு
முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129) ஆகிய
வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்ளில் தேவதானம் முதலான பெயர்களில்
மன்னர்களால் கோயில்~ களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம்.
இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்~ பத்தியை
மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ
,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் கார~
னாகவோ இருக்கலாம். பண்ணைகளில்
நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும்
உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு
பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்~ தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5)
"முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை
அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப்
ள்ளர்களுக்~ குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்தான் முக்கூடல் பள்ளுவில்
வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக
நியமிக்கப்படுவதாகத் தெரி~ கிறது.....பள்ளர்்களுக்கெல்லாம்
தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம்
சேரிப் பள்ளர்~ களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்ிறான், அறு~
வடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம்
ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம்,
பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம்,
ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள்
விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000
கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும்,
உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை
நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது.
விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்ப~ தற்கான சான்று இல்லை,
எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும்
பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே-
நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது
இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது. பள்ளர்கள்
தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்~ பானை ஆண்டை என்றும்
அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ
உறவுமுறை~ யின் கொடுமையை வெளிப்படுத்துகிறது பக்கமே
தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்"
என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்ளாக நடத்தப்பட்ட சமூக
நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச் சவுக்கினில்
வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது
அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை
மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர
முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை.
கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே "
(93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்~ பானால்
இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறை~ யின் கோரம் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன்
வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ
சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து
வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அவை
குறித்துக் கேசவன் விரி~ வாக ஆய்கிறார் நிலஉடைமையாளர்களான
வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர்
என்றும் இவர்ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து
குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர்
எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே
இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர்
என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்கு~
கிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும்
பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும்
வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும்
பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் கொள்ளலாம்.
நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம்
சம்பந்தப்~ பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்ுப் பின்னரே உருவாகி~ யிருக்க
வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை
வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது
போனவர், நிலத்தைப் றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப
முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக்
கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்~ கையில் அபலையாகிவிட்ட
வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய
77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்~ றனர். இவ்வகை
வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்~ தினராக அதாவது ஜாதியினராக
உருவாகியுள்ளனர் இவ்விரு
கருத்தையும் கேசவன் மறுக்கிறார்.
"பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர்
என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்~ தில் இக்குடியேற்றம் நடந்தது
என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும்
விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை
மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்ள் நடந்ததற்கு ஆதாரங்கள்
இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம்
இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு~ களுக்குப்
பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம்
தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களி~ லேயே
நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்~ தகை, மேல்வாரம், கீழ்வாரம்
எனும் சொற்கள் குத்தகை~ யைத் தெரிவிக்கின்றன. நிலம் விற்பனைக்கும்
வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம்
நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம் மேலும்
அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்~ களாக இருந்ததே இல்லை.
பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்ள் அல்லர்;
பண்ணை
அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை
மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்~ தனர்."பள்ளர்கள் எவ்வித
விதிவிலக்கும் இன்றி விவசாத்~ தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய
காலங்களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட
அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சதவீதம் பேர்
பண்ணையாட்ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~
யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர்
மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்ிறார்
தஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக~ வியலறிஞர்
கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும்
எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டு~
களுக்கு முந்தைய சமூக நிகழ்வுளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே,
குத்தகைதாரர்களான வேளாளர்ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க
வாய்ப்~ பில்லை என்கிறார் கேசவன். கி.பி.
1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர்
அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்:
கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி
அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில்
வேளாளர்களின் மேலா~ திக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர்
படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்~ பட்டனர் என்றும், தாழ்நிலைப்
பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத்
தெரிவிக்கிறார்.ஆனால்
பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்தி~ கள், கல்வெட்டுகள்
ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரி~ வினர் காணப்படவில்லை.
ஜாதி முறைகளைச்
சொல்லும் கல் 79 வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை
என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிட~ வில்லை.
நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்~ கள் இல்லை. எனவே டாக்டர்
அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில்
தமது கருத்தை முன் வைக்கிறார்.கி.பி.
14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக
மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்ள் நடந்தேறின. கம்மவார்களும்,
நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்~ சில பகுதிகளில்
குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும்
ஆனார்கள். இவர்~ கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடிய~
மர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர்,
சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின்
குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள்
மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள்
தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம்
தொழில்~ களில் ஏதாவது ஒன்றை மட்டும் ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய
தொழில்களை விட்டிருக்கலாம். அன்றைய
தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை
செய்தல் போன்ற~ வற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச்
சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற
தொழில்களைச் செய்~ தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான
சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர்
தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்டு. மாடறுத்தல், தோல்தொழில்
போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்தன. இத்தன்மை
பறையர்ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம் அதாவது
சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர்,
இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும்
வேறுபடுத்தும் தொழி~ லான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்~
கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத் ~ தனத்திலேயே இருந்து, பண்ணைத்
தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமா~ யிருந்தது
எனலாம்.
வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள்
பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த
வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்ஆக
பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த
பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால்,
இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின்
கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவின~ ரான கடைசியர்,
இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது
தெளிவாகிறது. பத்தொன்பதாம்
நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக
வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான
செய்திகளைத் தருகின்றன. அப்~ 81 போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில்
பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 642 சதவீதத்தினர்
விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளர் பறையர்
ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில்
கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில்
93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5
சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி
விவரங்ளில் இருந்து சில உண்மைளை அறிய~ லாம்.i.தமிழகத்தின் மொத்த மக்கட்
தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்~
ளனர். ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள்
இத்தாழ்த்தப்பட்ட மக்களே,
iii. தமிழகத்~ தில் மட்டுமின்றித் தென்னிந்தியா
முழுவதிலுமே தாழ்த்தப்~ பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு
வந்துள்ளனர் iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத
பிணைப்பு இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மை~ கள் இப்புள்ளி
விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார்
`விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்த்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன?
`பண்ணையாள்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ
நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தானர். நில~ வுடைமையாளரின் குடும்பம்
முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மை
82 விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர்.
அப்படியானவர்கள் நிலவுடைய~ யாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்ளை
விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நில~ வுடையமையாளருக்கு உரிமை உண்டு.
நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30
ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.நிலவரி
ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்~ திருந்த ஆரம்ப
காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை
பண்ணையார்ளுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடு~
பட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு
நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமைள் ;
நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடை~ யாது நிலவுடைமையாளரான
பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு
அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஶ்டமடையும்"
என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட
நடை~ முறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச்
சாதகமாகவே ஆரம்பக்காலங்~ களில் தீப்பளித்தன.அடிமைகள்
அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாகத்
தண்டிக்கப்பட்டனர். தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த
கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் 83
அடிமைகள் அவர்ள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனை~ யாக மூக்கறுக்கப்படுவது
வழக்கமாக இருந்தது எனக் குறிப்~ பிடுகிறார்.தவறு
செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால்
அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே
வேலையும் வாங்கப்~ பட்டனர். சில இடங்ளில் மாட்டுச் சாணத்தையும் மாட்டு
மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர். இத்~ தண்டனை முறைகள் இவர்கள்
கால்நடைகளுக்கு நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும் தீண்டத்தகாத
இம்மக்கள் கொடுமையான சமூக இழிவு~ களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் உயர்சாதி~ யாரைத் தொடக்கூடாது; உயர்சாதியார் தெருவழியே
நடக்கக்கூடாது; மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்~ களை
உபயோகிக்கக்கூடாது; காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப்
பெண்களும் கூட தங்ள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும்
அணியக்~ கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால்
இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன பள்ளர்
பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு
32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை, வழக்கம் மற்றும்
சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்' என்ற ஆங்கிலேயரின் கூற்றை
இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்;
பறையர்கள் எங்கும் சொந்தச்
சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதி~ யாருக்குத் தங்கள்
உழைப்பை விற்பதே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கள் கடுமையான
உழைப்புக்குப்பதிலாக மிகச் சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர்.
இவர்களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோஶத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்;
அல்லது வேறு வகைத் துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை
எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பறையர்கள் இந்தியாவின்
பிறவி அடிமைள், நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது
இங்கு பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்க~ மின்றி முந்தியதையே
தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் அவர்.பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இஇந் நிலைமைகள் சிதையத்
துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்'வந்தது. இச்சட்டத்தின்
மூலம் `சுதந்திரம்' அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த்
தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர்.
அங்கு ஓரளவு சேமித்த பணத்~ துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை
உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர் பொருளாதார
நிலையில் போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன.
`தீண்டமை ஒழிப்புச் சட்டம்' வந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.
பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக
அமைப்பில் இவர்~ களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய
சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்~ பாடுகளாக தமிழ்நாட்டில்
தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள்
வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை 85
அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட
மக்கள் நடத்திய ஆயுதந்~ தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்~ களை
நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்~ களை இவர்கள்
கைப்பற்றி `சோசலிச' அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில்
பங்கேற்றவர்~ களில், தலைமையேற்று நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்ளே கிராமப்புற
மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தி~ யிலும் இன்றளவும் பிரதான அங்கம்
வகிப்பவர்கள் இப்~ பள்ளர்- பறையர் சாதிினரே. வரலாறு நெடுக அரக்கத்தன~ மான
சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்்டலுக்~ கும் ஆளாகி வந்துள்ள
இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும்
இவர்களை இவர்களின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு இங்கு எந்தவொரு சமூக
மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.