Thursday, December 8, 2022

மதுரைக் ARE.1962-63 கோயில் கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html

அரிய மறவர் கல்வெட்டுகள் சில....

https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html

https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html

https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html


மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.

தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.



கல்வெட்டுகளின் நிலை :


கோயிலில் கண்டறியப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தன. இதில், 77 முழு தமிழிலும், 1 முழு சமஸ்கிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் உள்ளன.


மதுரை மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டை ஆராய்ச்சி செய்கின்றனர்

இவை தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளன. இந்த துண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் பெரிய அழிவுக்கு உள்ளாகியுள்ளதை குறிக்கிறது. அதனால் தான் கல்வெட்டுக்கள் சரியான அமைப்பில் இல்லாமல் சிதறி உள்ளன.


கோயில் கட்டுமான தகவல்கள் :


2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஒரு சிவன் கோயில் இருந்ததாக மதுரை காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், "அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்" என பாடியுள்ளார்.


கிபி 1200-ல் கோவில் கட்டப்பட்டுள்ளதும், கிபி 1250-ல் இயற்கை பேரிடரால் கோயிலின் கருவறை, ஆடவல்லான் சந்நிதி, எழுநிலை கோபுரம் ஆகியவை அப்போது சிதைந்ததும் தெரியவருகிறது. அதன்பின் கோவில் சீரமைக்கப்பட்டு 1250-ல் கோயிலுக்கு முதன்முறையாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது.


கி.பி 1190 - 1216 வரை ஆட்சி செய்த சடையவர்ம குலசேகரன் காலத்திய 'வைகைக்கரை' கல்வெட்டு தான் கோயிலில் இருப்பதில் மிக பழமையான கல்வெட்டு. அது, கிபி. 650 - 700 ஆண்டில் கூன்பாண்டியன் (எ) நின்றசீர் நெடுமாறன் வைகையில் தடுப்பணை கட்டி திருப்புவனம் மற்றும் திருச்சுழி பகுதிக்கு நீர் கொண்டு சென்றதை குறிக்கிறது.


தமிழகத்தில் அணை கட்டப்பட்டதற்கு உள்ள முதல் கல்வெட்டு சான்று இது தான். கோயிலில் இருப்பதிலேயே மிக பழைய சிற்பம், சொக்கநாதர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள சூரியனார் சிற்பம் தான். அது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.


கோயில் கோபுரங்களில் கிழக்கு கோபுரம் தான் மிக தொன்மையானது. அது 12-ம் நூற்றாண்டில் குலசேகரன் காலத்தில் துவங்கப்பட்டு, அவரது தம்பி மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் முடிவடைந்துள்ளது. எனவே, அந்த கோபுரத்திற்கு சுந்தரபாண்டியன் திருக்கோபுரம் என்ற பெயரும் உள்ளது.


கோபுரங்களும் அவை கட்டப்பட்ட காலமும் :


1. கிழக்கு கோபுரம் - 13ம் நூற்றாண்டு


2. மேற்கு - 14ம் நூற்றாண்டு


3. தெற்கு - 15ம் நூற்றாண்டு


4. வடக்கு - 16ம் நூற்றாண்டு


மண்டபங்களும் அவை கட்டப்பட்ட ஆண்டும் :


1. கம்பத்தடி மண்டபம் - கிபி 1583


2. நூற்றுக்கால் மண்டபம் - கிபி 1600


3. ஆயிரங்கால் மண்டபம் - கிபி 1600 (வீரப்ப நாயக்கரால்  கட்டப்பட்டது)


13ம் நூற்றாண்டுக்கு பிறகு மதுரையில் இஸ்லாமியர்கள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது கோயில் பேரழிவுக்கு உள்ளாகியது. மீனாட்சியின் கருவறை, அர்த்த மண்டபம் கூட சேதப்பட்டுள்ளன.


மதுரை மீனாட்சியம்மன் கோயில்

விஜயநகர பேரரசு காலத்தில் கிபி 1530 முதல் 1546 வரையிலான அச்சுதராயர் என்பவரின் காலத்திய கல்வெட்டில் தான் சித்திரை திருவிழா பற்றிய முதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றதும், அதன் செலவுகளுக்காக பல கிராமங்கள் அளிக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளன.

கிபி 1736ம் ஆண்டு வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுள்ளது.  நாயக்கர்களால் பாதுகாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோயில்.


அம்மன் பெயர் மீனாட்சி அல்ல :


கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று இப்போது நாம் குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது.



இதுபோக மீனாட்சி என்னும் பெயர் 'கயல்கண்னி' , தடங்கண்ணி என்னும் பெயரில் வேறோரு பெயர் என்பது உண்டு. அதுவும் பாண்டியர் கல்வெட்டில் உள்ளது. இதுபோக

பிரதிமாதேவி(இறைவன் பாகம் கொண்டவள்) என்ற பெயரும் உள்ளது.சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் போராட்டம் :


கிபி 1710ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுவாமிகளின் பல்லக்கை சுமக்கும் சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் 64 பேருக்கு  சாமநத்தம் உள்ளிட்ட 4 கிராமங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவரது ஆட்சிக்கு பின்னால், அந்த கிராமங்கள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சீர்பாதம் தாங்கிகள் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.

அப்போது குட்டி என்பவர் சொக்கநாதர் சன்னதிக்கு நேரே உள்ள வாயில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து இறந்தார். அதனால், அப்பகுதியில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டது. அந்த வாயிலில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டதால் திருமலை நாயக்கர் காலத்தில், அம்மன் சன்னதிக்கு நேரே அமைக்கப்பட்ட வாயில் வழியாக தான் நாம் தற்போது சென்று கொண்டிருக்கிறோம்.


சோழவந்தான் கிராமத்தின் உண்மையான பெயர் :


கிபி 946 - 966 வரை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்ற மன்னன் சோழ மன்னன் ஒருவனின் தலை கொண்டதை குறிக்கும் வகையில் 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்' என 


சோழர்கள் செய்யாததும், செய்ததும் :


சோழர்கள் 200 ஆண்டு காலம் மதுரையை ஆட்சி செய்துள்ளனர். எந்த மன்னரும் மீனாட்சி கோயிலுக்கு எந்த திருப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. 3ம் குலோத்துங்கன் - 'முடிகொண்ட சோழபுரம்' என மதுரையின் பெயர் மாற்றினான். ஆனால், அந்த பெயர் நிலைக்கவில்லை.

ராஜராஜசோழன் சோழவந்தான் பெயரை 'ஜனநாத சதுர்வேதி மங்கலம்' என மாற்றினான். அதுவும் நிலைக்கவில்லை.


நில தானம் பற்றிய குறிப்பு:


மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமாக சோழவந்தான், வாடிப்பட்டி, காரியாபட்டி, இளையான்குடி உள்ளிட்ட 80 கிராமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் பஞ்ச கம்மாளர்களுக்கு சில கிராமங்களை தானமாக அளித்துள்ளார். மடங்கள் கட்டி அவை இயங்குவதற்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதை 2 கல்வெட்டுகள் குறிக்கின்றன.


மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டு



தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் 'நாவித பிராமணர்' என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர்,பிராமணர்,கம்மாளர்,பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. 


மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.


இவ்வளவு பெரிய மீனாட்சி கோயில் கல்வெட்டுக்களில் அரசியல் வரலாறு பற்றியோ மக்கள் வாழ்வு பற்றியோ எந்த செய்தியும் இல்லை என்று தெரிவிக்கும் சாந்தலிங்கம், 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வேளாண் சமுதாய எழுச்சிக்கு பின்னர் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டே பெண் தெய்வங்கள்/கிராம பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாமிக்கு இணையாக அம்மனுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்..


மறவர்களின் நில உடைமை பற்றிய கல்வெட்டு:


இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி1227  மொழி:தமிழ் கல்வெட்டு என்:10

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: கோயிலுக்கு பல ஊர்களிலிருந்தும் நிலக்கொடை

கொடுக்கபட்டுள்லது. மழவராயர் தடங்கண்ணிச் சிற்றூருடையான்

என்ற அதிகாரி. இதில் குறிக்கபடும். நங்க ஏரி,கொடுமளூர்,வடதலை செம்பிநாடு

என்ற இடம் இராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கொடுமலூர்,தாமரை ஊருணி

ஆகும். அம்மன் பெயர் கயல்கண்ணி என்றும். நங்க ஏரி மறவர் விற்ற நிலம்.







கல்வெட்டு 1:

ஸ்வஸ்தி ஸ்ரீ பூமலர் திருவும் பொரு செயமடந்தை தாமரைக்கு முலை

சேர்புயதிருப்ப வேதநாவின் வெள்ளிதாமரை காதல் மாது கவின் பெறதிளைப்ப

வெண்டிரையுடுத்தி மண்டினி கிடக்கை.........

.......கொற்றது எண்டிசையானை எருத்த மேறிகண்ட நாடமதென கயல்கணி கூர

கோசலம் துளுவம் குதிரங்குச்சுர மாளுவம் மகதம் பொப்புலம் புண்டரங்க கலிங்கம் தெலிங்கம் சோளகம் சீனம் முதலாம் விதிமுறை திகழ வெவ்வேறு

வகுத்த நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர் கொரு தனிநாயகன் என்றுகேத

திருமுடி சூடி செங்கோலேச்சி..........மதிக்குலம் விளங்க கோமுதல் கோற பன்மரான திருபுவனசக்கரவர்திகள் சுந்தர பாண்டியதேவர்க்கு யாண்டு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரையன்

திருநாடுடையான் நீலகங்கரையன்..........இவ்வூர் அரையன் பூவனான வேணாடுடையார் காங்கை உழுதாங்குடி நல்லூரான பிரிதிமாதேவி நல்லூர்

பால் பாவூர் நங்கையேரி மறவர் பக்கல் விலை கொண்டு உடைய...

இப்படியூர் நங்கையேரியும் புத்தேம்பலும் ஆன இக்குளங்களுக்கு........

விரி வயக்கலுகும் வானவன் விழுப்பரையன் ஏம்பலுக்கும் தெற்கில்..

வடவெல்லை கண்டன்குறிச்சி எல்லைக்கும்..........அனுபவித்து  வேனாவுடையார்க்கு

விற்ற செய் பொன்னேரி பற்றாய கூட்டி அழகம்பெருமால் உடையானுக்கு

ஒற்றிவைத்து வேணாடுடையானுக்கு இம்மறவர் விற்ற நிலமும் ஆக இந்நிலங்களும்.........

இவ்வூர் நத்ததில் அரையர்குடியிருப்புக்கு...தென்.அந்தராயம் காரிவராய்ச்சியும்...........

குருகுலத்தரயன் எழுத்து.......அரயன் பல்லவராயன் எழுத்து......


விளக்கம்:

இதில் விளக்கம் என்னவெனில் மதுரை ஆளுடையநாச்சி கயல்கண்ணி கோவிலுக்கு மழவராயர் என்ற அதிகாரி வேண்டாடுடையார் என்ற அதிகாரியை

பணித்து இராமநாதபுரம் வடதலை செம்பி நாட்டில் உள்ள கொடுமளூர் அருகே உள்ள நங்கைஏரி மறவருக்கு சொந்தமான நிலங்களை

விழைக்கு வாங்கி கோவிலுக்கு பூசை காரியங்களுக்கு விடுமாறு கட்டளை இட்டுள்ளார், இதல் நங்கைஏரி மறவர் நிலங்கள் வேனாடுடையர் வசத்துக்கு

முன் அழகம்பெருமாள் உடையான் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்த கல்வெட்டில் வரும் வேண்டாடுடையார் மற்றும் அழகம் பெருமாள் உடையானும்

நங்கைஏரி ஊரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது மதுரை ஆளுடையநாச்சியார் கோவில் காலத்தில் ஆதாவது மதுரை மன்னன் முதலாம்

மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்திலே மறவர்கள் நில உடைமை சமுதாயமாக மதுரைக்குட்பட்ட வடதலை செம்பி நாட்டில் இருந்துள்ளனர். வடதலை செம்பிநாட்டு மறவர்கள் தங்கள் நிலத்தை குத்தகைக்கும் வினியோகத்திற்கும் உடையவராக உள்ளனர்.இந்த கல்வெட்டில்

3 இடத்தில் மறவர்கள் இருந்தது தெரியவருகிறது இதுபோக அந்த ஊரில் அரையர் குடியிருப்பும் இருந்துள்ளது. இதில் இன்றைய மீனாட்சி அம்மனுக்கு  தடங்கண்ணி,கயல்கண்ணி,பிரிதிமாதேவி என்ற பெயர் கல்வெட்டில் வருவது சிறப்பு.






இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி1227  மொழி:தமிழ் கல்வெட்டு என்:11

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: சென்ற கல்வெட்டின் தொடர்ச்சி. 

மழவராயர் தடங்கண்ணிச் சிற்றூருடையான்

என்ற அதிகாரி. இதில் குறிக்கபடும். நங்க ஏரி,கொடுமளூர்,வடதலை செம்பினாடு



என்ற இடம் இராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கொடுமலூர்,தாமரை ஊருணி

ஆகும். அம்மன் பெயர் கயல்கண்ணி,தடங்கண்ணி,கயல்கண்ணி,பிரிதிமாதேவிஎன்றும். நங்க ஏரி மறவர் விற்ற நிலம்.


கல்வெட்டு 2:

ஸ்வஸ்தி ஸ்ரீ  திரபுவனசக்கரவர்திகள் கோனேரின்மை கொண்டான் திருவாலவாய உடையார் கோயில் பஞ்சாசுர தேவகன்மிகளுக்கு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரையன்

திருநாடுடையான் நீலகங்கரையன்..........இவ்வூர் அரையன் பூவனான வேணாடுடையார் காங்கை உழுதாங்குடி நல்லூரான பிரிதிமாதேவி நல்லூர்

பால் பாவூர் நங்கையேரி மறவர் பக்கல் விலை கொண்டு உடைய...

இப்படியூர் நங்கையேரியும் புத்தேம்பலும் ஆன இக்குளங்களுக்கு........

விரி வயக்கலுகும் வானவன் விழுப்பரையன் ஏம்பலுக்கும் தெற்கில்..

வடவெல்லை பல தடிக்கும் தெற்கு நிலம் பறையர் குடியிருப்புக்கும் மேற்படி

ஊர் வயக்காலுக்கும் வடக்கும்...கண்டன் குறிச்சி..............

...........ப்பிரதிமாதேவி நல்லூர் ஊரார் பக்கல் இப்பாவூர் நங்கையேரி

மறவர் விலை கொண்டு அனுபவித்து வேனாவுடையார்க்கு விற்ற செய்

......அழகம்பெருமாள் உடையாள் தியாகஞ்சிரியாளுக்கு ஒற்றிவைத்த

வேனாடுடையார்க்கு இம்மறவர் விற்ற நிலமும்.................பாவூர்

நங்கை ஏரி மறவர் பக்கல் விலைகொண்ட உடைய பரப்ப்யிம்..


..இம்மறவர் விற்ற நிலமும் ஆக இந்நிலங்கல் கடமையும்

அந்தராயம் காரிவராய்ச்சியும்...........

பாண்டிய உத்திர மந்திரி எழுத்து.......அரயன் பல்லவராயன் எழுத்து......


விளக்கம்:

இது 10 கல்வெட்டின் தொடர்ச்சியான 11 ஆம் கல்வெட்டு,

 இதல் நங்கைஏரி மறவர் நிலங்கள் வேனாடுடையர் வாங்கும் முன் அழகம்பெருமாள் உடையான் மகள் சிறியாள் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்த கல்வெட்டில் வரும் வேண்டாடுடையார் மற்றும் அழகம் பெருமாள் உடையானும் நங்கைஏரி ஊரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது மதுரை ஆளுடையநாச்சியார் கோவில் காலத்தில் ஆதாவது மதுரை மன்னன் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்திலே மறவர்கள் நில உடைமை சமுதாயமாக மதுரைக்குட்பட்ட வடதலை செம்பி நாட்டில் இருந்துள்ளனர். வடதலை செம்பி நாட்டு மறவர்கள் தங்கள் நிலத்தை குத்தகைக்கும் வினியோகத்திற்கும் உடையவராக உள்ளனர்

.

இந்த கல்வெட்டில் அதே நங்கை ஏரி ஊரில் பறையர் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது தெரிகிறது.




இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:13

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: சென்ற 2 கல்வெட்டின் தொடர்ச்சி...............மூன்றாம் கல்வெட்டு

அதே அதிகாரிகள் பெயர் அதே ஊர் நங்கைஏரி மறவர் விற்ற நிலம்.




கல்வெட்டு 3:


ஸ்வஸ்தி ஸ்ரீ  திரபுவனசக்கரவர்திகள் கோனேரின்மை கொண்டான் திருவாலவாய உடையார் கோயில் பஞ்சாசுர தேவகன்மிகளுக்கு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரும்பெற்கூற்றத்து அழகப்பிரான் ஆழ்வான்..........இவ்வூர் பற்றான பரளை

வனவன் விழுப்பரையன் பலதடிக்கும் தெற்கில் தெற்கு நிலம் பறையர் குடியிருப்புக்கும் மேற்படி

ஊர் வயக்காலுக்கும் வடக்கும்...கண்டன் குறிச்சி..............


நல்லூர் பால் அரியூர் சேத்திரபாலர்க்கு.. இப்பிரதிமாதேவி நல்லூர் ஊரார்

பக்கல் இம்மறவர் விலை கொண்டு அனுபவித்து வேனாவுடையார்க்கு விற்ற ப்ராச் செய் மற்றும் பொன்னமனேரி பற்றாய்...


..இவை மிழலை கூற்றத்து கீழ் கூற்று கச்சனூருடையான்

அருளாளன் சேவகத்தேவனான வாணாயிராஜனெழுத்து......


மேலே சொன்ன 3 கல்வெட்டுகளில் கிட்டதட்ட 7 இடத்தில் நங்கை ஏரி மறவர்கள் பெயர்கள் வந்துள்ளன.



இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்

எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்

ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:15 ARE.1962-63 No.466

மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை

முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்

வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்த பூம்பிழால் திருப்புவன்-திருச்சுழி

சாலையில் உள்ளது.




இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:

தமிழ் கல்வெட்டு என்:15 ARE.1962-63 No.466
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை,முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில் வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்த பூம்பிழால் திருப்புவன்-திருச்சுழி சாலையில் உள்ளது.

கல்வெட்டு 4:
ஸ்வஸ்தி ஸ்ரீ பூமலர் திருவும் பொரு செயமடந்தை தாமரைக்கு முலை
சேர்புயதிருப்ப வேதநாவின் வெள்ளிதாமரை காதல் மாது கவின் பெறதிளைப்ப
வெண்டிரையுடுத்தி மண்டினி கிடக்கை.........
.......கொற்றது எண்டிசையானை எருத்த மேறிகண்ட நாடமதென கயல்கணி கூர
கோசலம் துளுவம் குதிரங்குச்சுர மாளுவம் மகதம் பொப்புலம் புண்டரங்க கலிங்கம் தெலிங்கம் சோளகம் சீனம் முதலாம் விதிமுறை திகழ வெவ்வேறு
வகுத்த நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர் கொரு தனிநாயகன் என்றுகேத்ட்த
திருமுடி சூடி செங்கோலேச்சி..........மதிக்குலம் விளங்க கோமுதல் கோற பன்மரான திருபுரசக்கரவர்திகள் சுந்தர பாண்டியதேவர்க்கு யாண்டு............

................கீழ் வேம்பநாட்டு....திருக்கடம்ப ம..த்தரனான அதிகைமான் காங்கை(இருக்கை) பூம்பிலால் வேளன் கூத்தனான.....நல்லூர் மழுவாடி..... முத்தரையன்
கோட்டை மறவரிடம் விலை கொண்ட...ம கன்மியார் கோட்டை மறவரில்
ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையனான உடையார் ஆழ்வான்..
தொண்டீஸ்வர உடையார் ஊரனிக்கு.........இறையிலிக்காக இறுப்பாக வேண்டி..
.......அதிகைமான் காங்கை......பூம்பிலால் வேலான் கூத்தனான........ அழகனான
அழகிய அரையனும்......
பாண்டியன் ஏம்பலும் கன்மியார் கோட்டை மறவரில் ஆழ்வான்
பாண்டியனான தென்னன் கங்கரையன்...........உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு அனுபவித்து வரும்....பூம்பிலால்.........எல்லைக்கு........இறையிலி நீர்நிலம்.......
உள்பட..........





விளக்கம்:
 இந்த கல்வெட்டு மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள பூம்பிலால்,முத்தரையன்கோட்டை,கன்மியார் கோட்டை ஊர் மறவர்களிடம் விலை கொண்ட நிலங்களை ஆளுடைய நாச்சியாருக்கு இறையிலி விட்டுள்ளனர். மேற்கண்ட கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் தென்கங்கரையன்
என்பவனிடம் அதேபோல் முத்தரையன் கோட்டை மறவரில் உடையான் தென்னவதரையனிடம் பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது. இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும் வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்
தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.



இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:21
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: இதற்கு முன் பார்த்த கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை
முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்
வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .

கல்வெட்டு 5:
சக்கரவர்த்தி கொனேரின்மை கொண்டான்.....மாடக்குளம் கீழ் மதுரை(திருவாலவாயுடைய)............

................கலான் காங்கை(இருக்கை) கொங்கர......பக்கல் விலை கொண்ட தூசி ஏம்பல்..... கன்மியார் கோட்டை மறவரில்
ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையன் எல்லைக்கு கிழக்கே வடவெல்லை.............நான்கெல்லை.... புன்செய் நத்தமும்.....இறையிலி கார்யவராச்சி.......
உள்பட..........




விளக்கம்:
 இந்த கல்வெட்டு  சென்ற கல்வெட்டின் தொடர்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் 
மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள  கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் 
தென்கங்கரையன் என்பவனிடம்  பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது.
இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும்
வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்
தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.




இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:22 ARE 1962-63 NO.466
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: இதற்கு முன் பார்த்த 2 கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை
முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்
வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .

கல்வெட்டு 5:
கோ.........கலி கெட கடவுள் வேதியர்..தொழில் கழங்க தெலிங்க சோனகஞ் சீனம் முதலாய ......சுடரொளி ...பள்ளியரை கூடத்து பள்ளிபீடம்.............

..............கொற்றிலக்கை......பற்றாக வரிஞ்சியூர்கிழான் திருக்கோடிக்காவல்...
முத்தரையன் கோட்டை பற்றில் விலைகொண்ட சங்கரநாரயனேன்....புன்செய்க்கும்..........புன்செய்(நத்தமும்)......
 பொன்வரியும் மற்றும்..........

பூம்பிழால் முத்தரையன் கோட்டை மறவரில்..................
டையார்......வடக்கும் மேலெல்லை......வினியோகமும் தருவதான அச்சும்
காரியவராய்ச்சியும்......... உட்பட
.........காங்கையிருக்கை.....பூம்பிலால் ........மறவர் பக்கல்........

............முதல் ஜீவித பற்றாக இறையிலி........................கூற்று....
பராந்தகநல்லூர் இரும்.....திருமுடி..............

விளக்கம்:
இதற்க்கு முன் பார்த்த பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார்கோட்டை
மறவரின் பெயரும் மறவர் பக்கலும் வந்துள்ள  நிலங்களை இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.




இந்த கல்வெட்டுகளின் மூலம் நாம் தெரிவது யாதெனில் பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் அதன்
முன்பும் பாண்டிய நாட்டுக்குட்பட்ட பூம்பிழாலை,முத்தரயன்கோட்டை,கன்மியார் கோட்டை மறவர்களும் நில உடைமை பெற்ற ஒரே சமூதாயமாய் வாழ்ந்து வருவது நிருபிக்க பட்டுள்ளது. மேலும் அந்த நிலங்களின் நாட்டார்,அரையர்,ஆழ்வார் என வந்துள்ள பலரும்
மறவர் என அறிய காண்கிறோம்.


பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார் கோட்டை என்ற இடம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு தெற்கே திருச்சுழி செல்லும் வழியில்
தொடராக வந்துள்ள ஊர்களாகும். மேற்கண்ட ஊர்களில் இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மறவர்கள் தொகையாக வாழ்ந்து மேற்பட்ட பாண்டியர் காலத்தில் வருகின்றனர்.

மேலும் இவை தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வெளிக்கொனரபட்டுள்ளது.ARE 1962-63 கல்வெட்டு தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி வருடம் 1962-63ல் வெளியாகிவுள்ளது அதில் வந்த செய்தி வெளியாகிவுள்ளது.


நன்றி:
தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்
வருடம் 1962-63

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.