மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது.
1. ஸ்ரீ குடி
3.ட்டு இ-
4.டை ஆற்-
5.றூர் பால்
7. வழுதி கு-
8. ளத்து ம-
9.றவன் பெற்-
10. றானுக்கு.
என ஆவணம் 31, 2020 - பக்: 51 ல் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட நடுகல் படியைப் படத்தில் உள்ளது படி வாசிக்க 'மறவன் பேரயன் பெற்றானுக்கு' என்றுள்ளது. ( திருத்தம் மேற் கொள்ள வேண்டும்)
- ஸ்ரீ குடிகாட்டு நாட்டின் இடையாற்றூரிலுள்ள வழுதிகுளத்தைச் சேர்ந்த 'மறவன் பேரரையன் பெற்றான்' என்பவனுக்கு மேற்கண்ட நடுகல் எழுப்பப்பெற்றுள்ளது.
மீதமுள்ள ஐந்து நடுகற்களில், நாகன்நம்பி என்பவனுக்கு உடையான் பூதம் என்பவன் கல் எடுப்பித்துள்ளான், கொற்றன் ஆச்சனன் பொய்கையரையன் என்பவனுக்கு யார் கல் எழுப்பியது என்பது தெரியவில்லை. கலங்கன் காரி என்பவனுக்கு தகடனும், அரமான பெற்றான் என்பானுக்கு அப்பன் காரியும் நடுகல் எடுப்பித்துள்ளதை அறிய முடிகிறது. இவை தவிர, பூங்கா நாட்டின் கடக்குறிச்சி ஊரைச் சேர்ந்த நம்பன் உடையச்சி என்பவள் 'சிதைக் கடன்' ( சிதை கடன்- உடன்கட்டை ஏறுதல்) ஆற்றியதையும் கூறுகிறது.
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.