Sunday, December 24, 2017

DNT சலுகை என்னும் குற்ற விலங்கு-3

Indian Government about DNT


Part 1   https://thevar-mukkulator.blogspot.com/2017/12/dnt-1.html
Part 2  https://thevar-mukkulator.blogspot.com/2017/12/rathnakumar-answer-to-director-bala.html
Part 3   https://thevar-mukkulator.blogspot.com/2017/12/dnt-3.html

http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Draft%20List%20of%20Denotified%20Tribes%20for%20Mail.pdf

http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Voices%20of%20The%20DNT_NT%20for%20Mail.pdf

தமிழகத்தில் DNT தற்போது உள்ள ஒரே சமுதாயம்:


தமிழகத்தில் DNT பட்டியலில் கடந்த 2013ல் இருந்த ஒரே சாதி குறவர்கள். இவர்களுக்கே இன்னும் எந்த முன்னேற்றம் கிடைக்கவில்லை எனில் இந்த பழைய குற்றம்பரைகள் இதில் போய் என்ன செய்வார்கள் மரியாதை இழப்பு மட்டுமே உண்டு. மறுபடியும் குற்றப்பரம்பரை மறைமுக அட்டவனையில் சேர்க்கபடுவர்.

DNT ஆந்திர மக்களின் கோரிக்கைகள் சில:
*10% சதவிகிதம் SC/ST சகோதரர்களுடன் உள் ஒதிக்கீடு தரவேண்டும்
* கல்லூரி,பல்களைகழகங்கள் எம்.எல்.ஏ எம்.பி தொகுதி ஒதுக்குதல்
*சுற்றுலா மகளிர் இலவச மருத்துவமனை
*காடுகளில் தங்க அனுமதி
*எஸ்.சி மக்கள் போல் பிசி.ஆர் பாதுகாப்பு
*2 பெட் ரூம் வீடுகள்
கடைசியா கவனிக்கபடவேண்டிய ஒன்று
*கடத்தல் தொழிலுக்கு விபச்சாரத்துக்கும் DNT மக்களுக்கு அனுமதி.

சூப்பர் இப்படி தான் DNT ஒதிக்கீட்டில் மக்கள் உள்ளனர் இவர்களோடு DNT ஆகனும் போல. DNT பழங்குடிகள் வட இந்தியாவில் ஆள்கடத்தல்,விபச்சாரம்,திருட்டு இவைகளே தொழில்களாக உள்ளன.

ஏற்கனவே பிரமலை கள்ளர் மக்கள் பற்றிய ஆவணப்படம் அரவாண் உள்ளது.

அதிலே பிரமலை கள்ளர் அனைவரும் திருடர்கள் என காட்டிவிட்டார்கள். இது தான் பிற்கால மக்களுக்கு பிரமலை கள்ளர் பற்றிய அபிப்ராயமாக இருக்கபோகிறது. இப்போது DNT சேர்த்தால் 1950 களில் ஒழித்த குற்றப்பரம்பரை சட்டம் இப்போது மறுபடியும் உயிர்த்தெழும்.

குற்றப்பரம்பரையினர் அனைவரும் தியாகி அல்ல ஜெயிலுக்கு போனவன்லாம் DNT அல்ல. ஜெயிலுக்கு போனவர்களுக்கு DNT கிடைக்கனும் என்றால் ஜெயிலில் உள்ள அனைவரும் தியாகிகளா?


குற்றப்பரம்பரையில் அட்டவனையில் அனைத்து மறவர்களும் இல்லை. செம்பநாடு கொண்டையங்கோட்டை பிரிவினர் அட்டவனையில் இருந்தாலும் அவர்களை தனி செட்டில்மெண்ட் போட்டு தண்டனை பெறவில்லை அதற்க்கு ஆதாரமும் இல்லை.

பிரமலைகள்ளர்கள் மற்றுமே சுத்தமான செட்டில்மெண்ட் பெற்ற குற்றப்பரம்பரை அவர்களுக்கு DNT கிடைப்பது மட்டுமே நியாயம் மற்றபடி ஆள் பத்தவில்லை என
மறவர்களை DNT இனைப்பது ஏற்றுகொள்ள இயலாது.

சிலர் சொல்லலாம் மறவர் இனத்திலும் சில DNT போராளிகள் உள்ளனர் என கூறலாம். எல்லா இடத்திலும் எல்லா மனிதர்களும் இருப்பர் ஒருவரது கருத்தே அந்த இனத்தின் கருத்து என கூற முடியாது. எல்லா ஊர்லையும் அயோக்கியர்கள் இருப்பார்கள் அவர்களை போல அந்த மொத்த ஊரையும் கருதமுடியாது.

குற்றப்பரம்பரை வேறு வீரப்பரம்பரை வேறு நாங்குனேரி மறவர்கள்,பிரமலைகள்ளர்கள்,பிராமனர்,தொட்டிய நாயக்கர்கள் இன்ன்னும் பலரையும் ஆங்கிலேயர் நாடு கடத்தினார்கள் அவர்கள் சுகந்திர போர் தியாகிகள்.
அவர்களை தியாகிகளாக அறிவித்து அவர்கள் குடும்பத்துக்கு உதவ வேண்டும் அவர்களுக்கு நினைவிடம் வைக்கவேண்டும் என்று கோரினால் அர்த்தம் உண்டு.

எதற்காக மறவர்களுக்கு DNT வேண்டாம்:



# மறவர்களின் காவல் உரிமையை பறிப்பதற்க்கே போடப்பட்ட குற்றப்பரம்பரையில் சிலர் வந்தாலும் மற்ற பிரிவினரான(அகத்தா மறவர்,சிறுதாலிகட்டிமறவர்,ஒருநாட்டுமறவர்,உப்புகோட்டைமறவர்,பெருந்தாலிகட்டிமறவர்,அஞ்சுகோட்டை மறவர்.....) போன்ற மற்ற பெரும்பாண்மையான பிரிவினரும் இதில் குற்றபரம்பரையாக கருதப்பட்டு பாதிக்கபடுவர்.அவர்கள் பிசி/எம்பிசி உள்ளனர். அவர்களுக்கு இது மிகப்பெரிய தன்மான இழப்பாகும்.

#தனித்தொகுதிகள் போல் 10% ஒதிக்கினால் அப்போது ஒடுக்கபட்டவர்கள் போல தனித்தொகுதியில் மட்டும் ஒண்ட வேண்டும் வெகுஜனமக்களிடம் இருந்து புறக்கனிக்க பட வேண்டும் என்பது. இன்று 14 தொகுதிகளுக்கு மேல் பெரும்பான்மையாக  இருக்கும் மறவர்கள் இதில் அதிகமாக பாதிக்கபடுவர்.

#DNT சலுகை பெற்றால் அவர்களை பழைய குற்றப்பரம்பரை என எப்போது வேண்டுமானாலும் சந்தேக சட்டம் பாயலாம் ஆனால் BC/MBC பிரிவினருக்கு அப்படி இருக்காது ஆகவே மறவர்களில் BC/MBC இருப்பவர்கள்  அப்படி பாதிக்காது ஆக இது வேண்டாம்.

#1945ல் ஓழிந்து போன குற்ற்ப்பரம்பரை என்னும் பெயர் அடையாளம் மறுபடியும் தலைதூக்குவது நல்லதல்ல. அதை விட்டொழிக்க வேண்டும்

# டி.என்.டி இல் தொகுதி 10 % கேட்டுள்ளனர்.இராமநாதபுரம் போன்று மறவர் பெரும்பான்மை உள்ள மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன அதில் 1 ரிசர்வ் எனில் மீதம் 3 தொகுதிகள் உள்ளன. இப்போது டி.என்.டி மூலம் 1 தொகுதி மட்டும் தான் அனுமதிக்கபடும் பட்சத்தில் 2 தொகுதிகள் இழக்க சூழ்நிலை வரும் எனவே இந்த டி.என்.டி ரிசர்வ் 10% மிகப்பெரிய பின்னடைவாகும்.

#DNT சட்டம் முழுமை பெறவில்லை ஆதலால் அதனால் வரும் விளைவுகள் ஆதாயம் தேவையற்றது.

பிரமலைகள்ளர்களுக்கு DNT கோரிக்கையை எந்த மறவர்களும் மறுக்கவில்லை அவர்களுக்கு தேவை எனில் பின்பற்றலாம்.

மற்ற மறவர்கள் ஒரு சிலருக்கு கோரிக்கையாக வேண்டுமெனில் அவர்கள் பாட்டனார் அல்லது முப்பாட்டனாரின் குற்ற அடையாளங்களை கொண்டு அவர்களுக்கு வழங்கலாம் மத்தபடி மறவர் சமூகத்துக்கு முழுக்க வேண்டும் என்பது கூடாது என்பதே எங்களது கோரிக்கை.

மேலும் இந்த DNT போராட்டத்துக்கு யார் செலவில் நடக்கிறது என தெரியவில்லை. மேலும் கிருத்துவ மிஷினரிகள் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இதன் தலைவர் ஒருவர் கிருத்துவ மிஷனிரிகளுடன் தொடர்பு உடையவர். இந்த மாதிரி சில சாதிகளை DNT க்குள் கொண்டு சிறுமை அடைய செய்வதால் அவர்களை மதமாற்ற ஏதுவாக இருக்கும் என்பது சிலரின் எண்ணமாக இருக்கலாம்.

மேலும் எதிர் கட்சிகளின் மறைமுக பங்கும் இதில் இருக்க வாய்ப்பும் உண்டு. அரசியலில் இருந்து மறவர்களது மரியாதை சரிக்க நடக்கும் ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாம்.


DNT மறவர்களுக்கு வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.