Saturday, December 30, 2017

திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்

நெல்லை களக்காடு,நாங்குநேரி அருகே அழகிய வயல் சூழ்ந்த கிராமம் திருக்குறுங்குடி இயற்கை கொஞ்சும் இந்த ஜமீனுக்கு விடுதலை போராட்ட பெருமைகளும் மிக உண்டு.




இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழ் நாட்டிற்கு சிறப்பு மிக்க பெயர் உண்டு. சுதந்திர தாக உருவான இடம் நெற்கட்டான்செவ்வல் என்பது வரலாறு அறிந்த உண்மை.பூலித்தேவரின் தலைமையில் மறவர் பாளையங்கள் இனைந்து கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளையர்களை தங்களது மண்ணில் கால்பதிக்கவிடாமல் துரத்தி அடித்த பெருமை நமது தேவரின மன்னர்களுக்கு உண்டு. அந்த வகையில் பெயர் வெளியில் தெரியாத சிறு  சிறு மன்னர்களும் வீரர்களும் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் பல வியக்கதக்க போரட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் நாங்குனேரி தாலுகா நம்பித்தலைவன்பட்டையம் என்ற ஊரை சேர்ந்த வீரன் ஒருவரது கையில் கத்தியும் கட்டாரியும் இருந்தால் எதிரியில் 100 பேரையாவது ஒரே நேரத்தில் வீழ்த்தும் வல்லமை இருந்தது. அப்படி அவர்களின் அரசர் தான் சிவராமத்தலைவர்
இன்றைக்கும் சிலையாக காட்சி தரும் இவரது வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.சிவராமத்தலைவனை பற்றி நம்பித்தலைவன் பட்டயத்தில் வாழும் நமது உறவினர்கள் கூறும்போது ஆப்பநாட்டில் இருந்து ஐந்து மறவர் குடும்பங்கள்(அண்ணன் தம்பி குடும்பங்கள்) திருக்குறுங்குடி ஊருக்கு அருகில் வந்து குடியேறுகிறார்கள். அந்நேரம் திருக்குறுங்குடி நம்பி கோவிலை கேரள மன்னர் ரவிவர்மா கட்டி வழிபட்டு வந்தார். இக்கோவிலின் வரலாறு தனியாக உள்ளது.  மறவர் குடும்பங்கள் குடியேறிய சிறிது காலத்தில் கோவிலில் திருட்டு நடைபெறுகிறது. புதிதாக குடியேறியவர்கள்தான் திருடி இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் மன்னர் இவர்களை  பிடித்து விசாரனை செய்கின்றனர். நாங்கள் திருடவில்லை என்றும் திருடர்களை பிடித்து தங்களிடம் ஒப்படைக்க முடியும் என்ற உறுதிமொழியுடன் மன்னரிடம் இருந்து விடைபெறுகிறார்கள்.

குறிப்பு:-
திருநெல்வேலி சரித்திரம் 234 மற்றொரு கடிதம்,
1782 - சிவராம தலைவன் என்ற பாளையக்காரன் திருக்குருங்குடிக்கு அருகில் திருக்குருங்குடிக் கோட்டை ஒன்றைக் கட்டி அதன் சுற்றுப்புறத்தைக் கொள்ளையடித்து வந்தான். அந்தக் கிலேதார் ஒரு பிரிவு படையை அனுப்பினான். அப்படை கோட்டையைக் கைப்பற்றி அதை அழித்தது. அந்த இடத்தில் வலிமை மிக்க மறவர் குடும்பத்தின் தலைவனுக்குப் பரம்பரைப் பெயர் சிவராம தலைவன் என்பதாகும்.


சொன்னபடி கோவிலில் திருடியவர்களை பிடித்து ஒப்ப்டைக்கிறார்கள். இதனால் மன்னர் இவர்களுக்கு வெகுமதியாக விவசாயம் செய்து கொள்ள நிலங்களும் அதற்கான பாசனத்திர்காக வடலியார்குளம்,கேசரிகுளம் என்ற இரண்டு குளங்களயும் குடியிருக்க இடமும் கொடுத்திருக்கிறார். இதற்காக இந்த குடும்பத்திற்கு செப்புப்பட்டயமும் மன்னரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அன்று முதல் கிராமத்தில் இவர்களுக்கு தலைவர் குடும்பம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிரது. அந்த பகுதியில் வரி வசூல் செய்யும் வேலையும் செய்து வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த காலம் அது. ஒவ்வொரு பகுதியிலும் ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்து கொண்டு வருகையில் சிவராம தலைவனின் குடும்பம் வரி கட்ட மறுக்கிறது. வரி கட்ட மறுப்பவர்களின் முதுகில் அதிக எடை கொண்ட கற்களை ஏற்றி வைத்து அடிப்பது அன்றைய வழக்கத்தில் இருந்திருக்கிறது. வெள்ளையரிடம் அடி வாங்க மாட்டேன் என்று ஆவேசத்துடன் அப்பகுதியிலிருந்து சொக்கம்பட்டிக்கு வந்து விடுகிறார். அங்கும் வெள்ளையர்களுடன் சம்ஸ்தானம் மோதி கொண்டிருக்கிறது. அச்சமயம் மன்னரை பாதுகாத்திடும் வகையில் தனது ஆயுதங்களால் 100க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களைக் கொன்று குவிக்கிறார். இதனால் சொக்கம்பட்டி மன்னரின் அன்பிற்கு பரிட்சியமாகிறார். சில ஆண்டுகள் அங்கிருந்து சிவராமத்தலைவனுக்கு ஊர் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதை அறிந்த மன்னர் 1000 பேர் கொண்ட மறவர் படையுடன் சிங்க முக பல்லாக்கில் சிவராமத்தலைவனை அனுப்பி வைக்கிறது சொக்கம்பட்டி ஜமீன். நம்பித்தலைவன்பட்டயத்தின் எல்லையில் படையை நிறுத்திவிட்டு ஊருக்குள் செல்கிறார் ஏற்கனவே சொக்கம்பட்டியில் தங்களின் படையை கொன்று குவித்த சிவராமதலைவனை பிடித்துவிட வேண்டும் என்று தயாராகிறது வெள்ளையர் படை ஆனால் வரி வசூல் செய்து கொண்டிருந்த தலையாரி உள்ளிட்ட இரண்டு பேரின் தலைகளை வெட்டி எறிகிறார் சிவராமத்தலைவன். இதனால் சிவராமத்தலைவனின் குடும்பமே இவரை வெறுத்து திருச்செந்தூர் அருகில் மாணாடு என்ற கிராமத்திற்கு செல்கிறது அங்கிருந்த பயில்வான்கள் முத்துகுட்டி,வீரக்குட்டி( சிவராமத்தலைவனின் அண்ணன் மகனின் மைத்துனர்கள்) ஆகியோர் சமாதானம் செய்து சிவராமத்தலைவனுடன் இணைகிறார்கள். முத்துகுட்டியும் வீரக்குட்டியும் சிவராமதலைவனுக்கு தளபதிகள் போன்று செயல்படுகிறார்கள். அங்குள்ள மலைப்பகுதியில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

சிவராமத்தலைவனை கொல்ல தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த வெள்ளையரிடம் சிலர் விலை போயினர் தனது குடும்பத்தை சேர்ந்த நபர்களுடன் சிவராமத்தலைவனால் பாதிக்கபட்டவர்களும் வெள்ளையர்களுடன் இணைந்து சதியில் ஈடுபடுகிறார்கள். அப்போது ஒரு வீட்டில் சிவராமத்தலைவனை தனியாக இருக்கும் போது வெள்ளையர்படை சூழ்ந்து விட்டது.
எப்படி தப்பிப்பது என்று திட்டம் போட்டார் சிவராமத்தலைவன் பெண்கள் போன்று நீண்ட தலைமுடியை விரித்துவிட்டு பெண் வேடமிட்டு குதிரையில் ஏறி கிளம்பியிருக்கிறார். ஏதோ பெண் போகிறார் என்று விட்டுருக்கிறார்கள் வெள்ளையர் படை. சிறிதி தூரம் சென்றவுடன் தனது பெண் உடைகளை களைத்து விட்டு முடிந்தால் பிடித்து பார் என்று சீறியிருக்கிறார். வெள்ளையர் படையும் துரத்தியிருக்கிறது. குதிரையில் சென்று கொண்டிருக்கும் போது துரதிஸ்டவசமாக சிவராம தலைவனின் நீண்ட தலைமுடி கள்ளிச்செடியில் பட்டு சிவராம தலைவன் கீழே விழுந்து விட்டார் சூழ்ந்த  வெள்ளையர் படையிடம் பலி ஆகியிருக்கிறார் சிவராமத்தலைவர்.

திருக்குறுங்குடி ஜமீன் போர் வீரர்கள் தான் நாங்குநேரி சுதந்திர போராளிகள் சிவகங்கை மன்னர் வேங்கை பெரிய உடையனத்தேவர்,மருதுமகன்,பிரமலை கள்ளர்கள்,சில பிராமணர்கள்,கம்பளத்து நாயக்கமார்கள் விடுதலைப்போரில் 1801 ல் தூத்துகுடி துறைமுகத்திலிருந்து விடுதலைபோரில் தோற்ற 73 போராளிகளை பினாங்கு மற்றும் மலைசியாவிற்கு நாடு கடத்திய பிரித்தானிய அரசாங்கம்.எனவே ஆயுத ஒடுக்குமுறை சட்டம்  போடப்பட்டது நாங்குனேரி மறவர்களான சிவராமத்தலைவனின் போர் வீர்களுக்கு.



வீரத்தில் சிறந்து விளங்கி ஆங்கிலேயர்களுக்கு தலைவலியை ஏற்படுத்திய சிவராமத்தலைவனுக்கு சிலை வைக்க அவரது பாட்டி சித்திர வடிவு தலைவச்சி முடிவு செய்து சிற்பியிடம் கூற,சிலை தயாராகிறது. ஆனால் சிலை செய்ய முடியாமல் 3 கற்கள் வீணாகியிருக்கிறது பாட்டியின் கனவிலும் இதே நிகழ்வு தோன்றியிருக்கிறது. எனவே பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை சிலையை முடிக்க வேண்டும் என்றிருக்கிறார் பாட்டி அதனால் சிலை மூக்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் சிலை செய்வதற்கு முயன்ற மூன்று கற்களும் ஊரில் தற்ப்போதும் இருக்கிறது.

 இவரது வாரிசுகள் தனுஷ்கோடித்தலைவர் மகன் துரைமுத்துதலைவர் வம்சமாக இன்றும் ஊரில் வாழ்ந்து வருகிறார்கள். சிவராமத்தலைவனின் வாரிசுகள் என்பற்கான பட்டயமும் வைத்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் பூலித்தேவரின் பெண்வழி வாரிசுகள் என்பதும் கூடுதல் தகவல். தி.மு.க ஆட்சி வரை பூலித்தேவர் விழாவிற்கு அரசு சார்பில் அழைக்கபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துவக்கத்தில் இச்சிலை வழிபட்ட மக்கள் காலப்போக்கில் பராமரிக்கவும் தவறிவிட்டனர். இன்னும் சொல்ல்ப்போனால் கிராமத்தில் இது என்ன சிலை என்றும் இவரது வரலாறு என்னவென்றும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு தெரியவில்லை. ஏதோ கல்சிலை என கூறுகிறார்கள்.

முகநூல்,வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வளைதலங்களில் இல்லாத வரலாறை எழுதுகிறார்கள் நமது மன்னர்களை அவர்களின் சமூகம் என்கின்றார்கள் என்று அதங்கபடுகிறார்கள். வரலாறு எப்படி திருடப்படுகிறது என்பதற்க்கு சிவராமதலைவன் சிலையை சிறந்த உதாரணமாக வைத்து கூற முடியும் சிறிது காலத்திற்குப் பிறகு சிலையை சுற்றி சுவர் கட்டி அதற்கு நன்கொடை கொடுத்தாக மாற்று சமூகத்தினர் பெயர்கள் கல்வெட்டில் வடிக்கப்டும். பின்பு படிப்படியாக கோவில் எழுப்பப்பட்டு அவர்களின் கட்டு பாட்டிற்குள் செல்லும். சென்றவுடன் நமது இனமன்னர்கள்,தெய்வங்கள் அனைத்தும் மாற்று சமூகமாக சித்தரிக்கப்டுவார்கள். அதனால் திருடப்பட்டு பிறகு நிவாரணம் தேடி அலைவதை விட திருட்டை முங்கூட்டியே தடுப்பதுதான் விவேகத்தனமானது சிவராமத்தலைவன் போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்து விளங்கிய நமது இனத்தை சேர்ந்த வீரர்களின் வரலாறை எடுங்கள் அவர்களின் சான்றாக  தற்போது கொண்டிருக்கும் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் இளைஞர்களே நமது தேவர் மலரிலும் அவர்களைப்பற்றிய வ்ரலாறை இடம் பெறச்செய்து ஆதாரத்தை உருவாக்குங்கள்.




திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்டங்கள் பற்றியும் சிறந்து விளங்கிய வீரர்களைப் பற்றியும் நிறைய நூல்கள் இருக்கின்றன.
இதுவரை மக்களால் அறியப்படாத மறைக்கப்பட்ட தேவர் சமுதாய வீரர்களின் வரலாறையும் அவர்களின் போராட்டங்கலையும் இன்றைய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை அல்லவா.
இனியாவது விழித்து கொண்டு நமது வரலாறை நாமே காக்க முயல்வோம்.
https://www.facebook.com/100006179355297/posts/pfbid0hmZPzuG5CyTdMqBSDcrTzKQoNuSmaJEYRfbuvke1ZyEQaz8Bt5azWgQwsaHC21gLl/?sfnsn=wiwspmo

மறவர் குலத்து ராணியின் பதிபக்தி
```````````````````````````````````````````````````````````
ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் எனும் ஆங்கிலேயர் கேரளத்தின் அஞ்சுதெங்கு கோட்டையில் இருந்து, தான் இந்தியாவில் இருந்த 17 வருடங்களில் தனது காலத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் தொகுப்பாக ஓரியண்டல் மெமரீஸ் என்ற நூலாக எழுதியுள்ளார். 

அந்நூலில் கேரளத்தை ஒட்டி அரசாட்சி செய்த மறமன்னர் ஒருவரின் ராணியைப் பற்றி அவர் எழுதிய செய்தி மிகவும் நெகிழ்ச்சி கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இனி அவரின் வரிகளிலிருந்து.....
             
               -ஒரு மறவர் நாயகி-

இங்குள்ள சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் உள்ளன . இருப்பினும் இந்த மலபாரில் அவைகள் எப்போதாவது விதிவிலக்குகளுக்கு உள்ளாகின்றன.  
 
அஞ்செங்கோவில் ( அஞ்சுதெங்கு) நான் வசிக்கும் போது ஒரு பாரம்பரியத் தியாகம் ஒன்றை நாங்கள் இழிவுபடுத்த முடியாத ஒரு சூழல் தோன்றியது.

இந்த தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மலைப் பிரதேச நாட்டில் வசிக்கும் மறவர்களுடன் ஆங்கிலேயர்கள் போரிட்டனர், அவர்களுக்கு எதிராகச் சென்னையிலிருந்து கணிசமான படைகள் அனுப்பப்பட்டது, மறவர்களுடனான இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் மிகவும் சிரமப்பட்டு வெற்றியைப் பெற்றனர்: இதற்குக் காரணம் என்னவென்றால்.. எதிரிகள் எளிதில் ஊடுருவமுடியாத வனப்பகுதியாக போர்க்களம் இருந்தது.
அடர்ந்த காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கு மத்தியிலும், கிட்டத்தட்ட அணுக முடியாத குன்றுகளிலும் அமைந்த கோட்டைகளில் இருந்து மறவர்கள் போரிட்டனர். 





இந்த போரின் முடிவில் மறவர்களின் ராஜா போரிட்ட களைப்பில் சோர்ந்திருந்தார். இருப்பினும் அவர் அவர் தனது குடும்பத்துடன் பொக்கிஷங்கள் நிறைந்த தனது கடைசிக் கோட்டையைப் பாதுகாப்பதற்காக விடாது போரிட்டார். பலத்த காயங்களுடன் கோட்டைக்குள் இருந்த அவர் தன்னைத் தாங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியின் கரங்களில் காலமானார்;

அந்தக் கடைசிக் கோட்டை சிறிது சிறிதாக ஆங்கிலேயரிடம் பிடிபட்டுக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்
தனது மடியிலேயே விழுந்து உயிரை விட்ட தனது அன்புக் கணவரின் மரணம் அந்த ராணியை மேலும் உலுக்கியது. தனது கணவரின் வீரமரணத்திற்குத் தாம் தக்க மதிப்பை அளிக்க வேண்டும் என அவர் எண்ணினார். உடனடியாகத் தனது காவலர்களில் ஒருவருக்கு, "இந்தக் கோட்டைச் சரணடைவதற்கு முன்பே எனது இதயத்தில் வாளைக் கொண்டு சொருகி விடு" எனக் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்குக் கீழ்படிந்த அந்த வீரர் தனது மஹாராணியின் உத்தரவை மிகவும் கடினமான மனதுடன் நிறைவேற்றினார். 
அந்த ராணி தங்களின் பழைய வழக்கங்களின் படி தனது உயிரை விடத் தீர்மானித்திருந்தார்.

 கோட்டைக்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், துரதிர்ஷ்டவசமான இந்த நிகழ்வினையும், கடைசியாக ராஜாவும் ராணியும் தங்களை ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு, இணைந்து இறந்து கிடந்ததைக் கண்டனர். 

அந்த ராணியின் தியாகமிக்க இந்தச் செயலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, மறவர்களின் சாதி வழக்கப்படி, சவக் குவியல்களுக்கு மத்தியில், ஆங்கிலேய அதிகாரிகள் முன்னிலையில், அந்த மதிப்பு மிக்க ஜோடியினர் ஒன்றாக வைத்து எரியூட்டப்பெற்றனர். 

  -இவ்வாறு திரு. ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறார். இந்த போரில் ஈடுபட்ட ராஜாவும் அந்த ராணியும் யார்? என்பதை இப்போது இங்கே ஆராய்ந்து பார்ப்போம்.

இந் நிகழ்வு நடக்கும்போது அஞ்சுதெங்கு கோட்டையில் இருந்த ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் லண்டனில் ஸ்காட்ஸ் குடும்பத்தில் பிறந்தவர், 1765 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் எழுத்தாளராக இந்தியாவிற்குப் பயணம் செய்து 1784 வரை இங்கேயே தங்கியிருந்தார். சிறந்த எழுத்தாளர் மற்றும் ஓவியக்கலைஞரான அவர், 52,000 பக்கங்களில் இந்திய வாழ்க்கை, அதன் வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் கட்டிடக்கலை. ஆகிய அனைத்து அம்சங்களையும் அதனைப் பற்றிய குறிப்புகள் மற்றும் தனது ஓவியங்களை அந்நூலில் ஏற்றினார். என்பது செய்தி. 

இதன்படி பார்த்தால் அவரின் காலத்தில் கேரளத்தை ஒட்டிய பகுதிகளில் ஆங்கிலேயருடன் சண்டையிட்டு இறந்த மறவர் பாளையக்காரர் யார்‌ - என்று ஆராயும் பொழுது, அவர் நம்பித் தலைவன் பட்டயத்தைத் தனது தலைமையிடமாகக் கொண்ட திருக்குறுங்குடி பாளையக்காரர் சிவராமத் தலைவனாரே என்பது வெளிச்சமாகும். இவரைப் பற்றிய குறிப்புகள் திருநெல்வேலி மானுவல் நூலில் மிகவும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. 

ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக திருநெல்வேலி பகுதியில் டிசம்பர் 8 1781ல் புதிதாக ஆங்கிலேய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். 

அந்த நேரத்தில், திருக்குறுங்குடியிலும் களக்காடு முதலிய பகுதிகளிலும் கோட்டைகள் அமைத்துக் கொண்டு சிவராமத் தலைவனார் ஆங்கிலேய அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல் சுயாட்சி செய்து வந்தார். அவரை அடக்க சென்னை அரசாங்கம் 1782ல் கேப்டன் எடிங்டன் மற்றும் லெப்டினன்ட் - கர்னல் நிக்சன் ஆகியோருக்குத் தேவையான இராணுவ உதவியை வழங்குமாறு உத்தரவிட்டது, அவர்களுடன் போரிட்ட சிவராமத் தலைவனார் போரிலேயே இறக்கிறார். திருநெல்வேலி மானுவல் இவரை 'மிகவும் சக்திவாய்ந்த மறவர் தலைவர்' என்று கூறுகிறது. போரில் இவரது கோட்டைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் சிவராமத் தலைவனார் சிலை ஒரு இடிந்த கோட்டையின் சுவர்களுக்கு நடுவில்தான் உள்ளது. இச் சிலை அவரின் மரியாதையான மரணத்தின் காரணமாகவே எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இந்த சிவராமத் தலைவனாரின் கட்டளைக்கு நான்குநேரிப் பகுதியின் புரட்சிக்கார மறவர்கள் கட்டுப்பட்டு நடந்துள்ளனர். 

1.ஃபோர்ப்ஸின் குறிப்புகளின் படி, மலைப்பாங்கான பகுதியில் இருந்த ராஜ்ஜியம் இவருடையது.

2. கேரளத்தை ஒட்டிய பகுதி என்பதால், எளிதாக செய்தியை விரைவில் அஞ்செங்கோ கோட்டை அறியக் கூடிய தூரம் இதுவே ஆகும்.

3. ஃபோர்ப்ஸ் இருந்த காலத்தில் நடந்த மறவர்- ஆங்கிலேயப் போரும் இதுதான். மறவ ராஜா ஒருவர் இறந்ததும் இந்த காலத்தில்தான்.

4. ஃபோர்ப்ஸ் தனது நூலிலேயே தலைப்பாக "மறவர் நாயகி" (A MARAWAR HEROINE) என்று கூறியிருப்பதால் அவர் குறித்துள்ள ராணியின் கணவர் போரில் வீர மரணம் அடைந்த சிவராமத் தலைவராகவே இருக்க முடியும். இவரைத் தவிர வேறு எந்த மறவர் பாளையக்காரரும் அந்த காலகட்டத்தில் இறந்ததாகச் செய்திகள் கிடைக்கவில்லை. 

                      - முடிவாக ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் தெரிவிப்பது சிவராமத்தலைவனார் மற்றும் அவரது மனைவியையுமே என்பதே இங்கு வெளிச்சம் பெறும் உண்மையாகும் என்று கூறிக்கொண்டு, முறையாக சிவராமத் தலைவனாரைப் பற்றி விரிவாக இன்னும் சரித்திரத் தகவல்களை நாம் வெளிக்கொண்டு வர முயல வேண்டும் என்றும் அவரின் எதிரிகளான ஆங்கிலேயர்களே போற்றிப் புகழ்ந்த அவரது மனைவியின் தியாகச் செயல் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் கூடுதல் செய்திகளுடன் சந்திக்கிறேன்.

References.
---------------------
1. Oriental Memories. A Narrative of Seventeen years Residence In India, Vol.1. Second Edition1834. By James Forbes, (page no: 244)
  
2. A political and General History The District of Tinneveli in the presidency of Madras. By Caldwell, (page no: 144)

And special Thanks to Vijay Pandya Thevar (pictures courtesy) 
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்

நன்றி!

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
நன்றி:
தேவர் மலர்
ஏ.கே.போஸ்
திருநெல்வேலி சரித்திரம்
தென் இந்திய போராட்டங்கள்-கே.ராஜய்யன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.