Sunday, December 24, 2017

DNT சலுகை என்னும் குற்ற விலங்கு-1

DNT(Denotified Nomadic Tribe)

Indian Government about DNT

Part 1   https://thevar-mukkulator.blogspot.com/2017/12/dnt-1.html
Part 2  https://thevar-mukkulator.blogspot.com/2017/12/rathnakumar-answer-to-director-bala.html
Part 3   https://thevar-mukkulator.blogspot.com/2017/12/dnt-3.html

http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Draft%20List%20of%20Denotified%20Tribes%20for%20Mail.pdf

http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Voices%20of%20The%20DNT_NT%20for%20Mail.pdf

* பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவரால் உடைக்கப்பட்ட விலங்கை கெஞ்சி கேட்டு மறுபடியும் கைக்கே பூட்டும் அபத்தம்.

* குற்றப்பரம்பரை அல்லாத மக்களையும் குற்றவாளிகளாக அட்டவனையிடும்
கேவலம்.

* சலுகையினால் மரியாதையும் மாணத்தையும் இழப்போம் என எண்ணாத மடமைத்தனம்.

 இந்த கூட்டத்தின் பிரச்சாரத்தில் DNTல் வரும் நன்மைகள்

  + பி.சி.ஆர் கேசுகள் போட முடியாது(நாம் யார் மேல வேனுமானால்

       போடலாம்?)
  + தனித்தொகுதிகள் கிடைக்கும்(எந்த சலுகையை கேட்கிறார்கள்?)
  + டாக்டர் அரசுதுறை வேலைவாய்ப்பு கூடும்(அப்படியா ?)
  + இலவச கல்வி (கவர்மெண்ட் அறிவிப்பா?)
  + தனி வீடுகள் தரப்படும்(சமத்துவபுரமா?)
  + பழங்குடிகள் என்ற பெருமை(ஆதிதிராவிடரா? ஆதிதமிழரா?)
  +  DNT பள்ளிகள்(சீர்திருத்த பள்ளியா?)


இன்னும் நீளும்.

முகநூலில் இப்போது ஒரு கலாச்சாரம் வெகு நாளாக தொடங்கிவிட்டது.
ஐயா.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தை போட்டுவிட்டால் அந்த நபர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் தேவர் மக்கள் எல்லாத்தையும் மறந்து கேட்டுகொண்டு இருப்பர்.

 புளுகு:
  1)ஐயா தான் சொன்னார் நமக்கு DNT வேணும்னு. தேவர் ஐயா வாழ்க!
  2)ஐயா தான் சொன்னார் நாம் தனித்து இருக்க வேண்டும் என.
     தேவர் நாமம்     வாழ்க! ஜெய்ஹிந்த்
  3)ஐயா தான் சொன்னார் நாம் தனித்தொகுதி வேண்டும் என.
    நேதாஜி நாமம் வாழ்க!

இப்படி பச்ச குழந்தையை கண்னை பிடுங்கி அந்த குழந்தையை வைத்து பிச்சை எடுப்பது போல தேவர் படம் போட்டால் யார் வேண்டுமானாலும் போலியாக திரியலாம்! இனத்தான் அல்லாதவன் கூட தன் விஷம கருத்தை பேசலாம்.

இதெல்லாம் பசும்பொன்.தேவர் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையில் என்னவெல்லாம் சொல்லமுடியுமோ தேவர் படத்தை போட்டு தங்கள் வேலையை செய்கின்றனர்.

பிரமலை கள்ளர்களுக்கு DNT கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் அதற்கு மறவர்களையும் உடன் சேர்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை.

DNT/NT போராட்டம்:

சில விஷமிகள் நாங்கள் தான் குற்றப்பரம்பரை கள்ளர்,மறவர் ஆகிய நாங்கள் ஜாதிகள் அல்ல பழங்குடிகள் எங்களை ஜாதி என்று அழைப்பதே தவறு. நாங்கள் குற்றப்பரம்பரை,வீரப்பரம்பரை என்று முப்பது பேருக்கு கூட முழசா தேறாத ஒரு கூட்டம் கூச்சல்களையும் குழப்பங்களையும் கிளப்பி கேவலப்படுத்தி வருகிறது.



முக்குலத்தோர் என கூறிக்கொண்டாலும்  கள்ளர்,மறவர்,அகமுடையர் என்பவர்கள் ஒரே ஜாதியா? ஒரே பழக்கவழக்கம் கொண்டவர்களா? என்று பார்த்தால் நிச்சயம் கிடையாது.

மறவருக்கு DNT வேணும் என கூறும் பிரமலைகள்ளர் உறுப்பினர்கள் கவணத்திற்கு.

ஈசநாட்டு கள்ளர்(பெரியசூரியூர் கள்ளர்,கூத்தப்பால் கள்ளர்) என்பவர்கள் முதலில் குற்றப்பரம்பரை பட்டியலில் இருந்தவர்கள்.

அவர்கள் இன்று எங்களூக்கும் மதுரை பிரமலைகள்ளர்களுக்கும்  முக்குலத்தோர்கள் என்பவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தஞ்சை கள்ளர் மாமணி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தினமலரில் கூட தஞ்சை கள்ளர் நாங்கள் முக்குலத்தோர் இல்லை நாங்கள் குற்றப்பரம்பரை இல்லை என தமிழ்நாடு முழுவதும் அறிக்கை வெளியிட்டு இதனை மறுத்துள்ளனர்.

இதேபோல் மதுரை அருகே பிரமலை கள்ளர்கள் அருகே இருக்கும் மேலூர் கள்ளர்கள் தாங்கள் குற்றப்பரம்பரை அல்ல என ஆங்கிலேயர் காலத்திலே அவர்கள் விலக்கு வாங்கி குற்றப்பரம்பரை பட்டியலில் கூட அவர்கள் பெயர் இடம்பெறாமல் பார்த்து கொண்டனர்.

இப்படி இரு பெரும்பிரிவு கள்ளர்களே பிரமலை கள்ளர்களை தங்கள் இனம் அல்ல என முறித்து கொண்ட போது. மறவர் மட்டும் எப்படி பிரமலைகள்ளரோடு சேர்த்து குற்றம்பரம்பரையில் இடம் பெற இள்ளிச்சாவாயனா?

எந்த மறவருக்கும் பிரமலைகள்ளர்களுக்கும் எந்த  ஒரு தொடர்பும் கிடையாது.

இதேபோல் அகமுடையார் என்று ஒரு இனம் இருக்கிறது. அவர்கள் BC பிரிவில் வரும் ஒரு சாதி. அவர்களுக்கு DNT என எந்த கோரிக்கை வைக்காத அவர்கள் சமூகத்தில் இருந்த ஒரு பெண் பிரமுகர்  கள்ளர்,மறவர்களுக்கு  DNT வேணும் என போராடுகிராராம். முதலில் அகமுடைய சாதியில் எத்தனை பேரை இவர் DNTல் சேர்த்தாராம்?

சொல்லபோனால் இந்த அகமுடையர் என்னும் சாதிக்கும் மறவர் சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மறவர் சமீந்தார்களிடம் சிலர் சேவகம் ஆற்றி சேர்வை என் பட்டம் பெற்று உத்தியோகத்தில் இருந்தனர். இவர்களுக்கு மறவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் வேறு ஒரு இனமே.

வட தமிழகத்தில் வன்னியர்,வெள்ளாளரில் உட்பிரிவாகும் வரும் அகமுடையர்கள் ஆந்திராவில் அகமோதிவார்(Agamodiwaru) என்ற பெயரிலும் கர்நாடகாவில் அகத்தமாவார்(Agathmawar) என்ற பெயரில் வாழ்ந்து வரும் இவர்களுக்கும்  மறவர்களுக்கும் சம்பந்த படுத்துவது அபத்தம்.

அகமுடையர்களை மறவர்களோடு தொடர்புடையவர்கள் என முகநூலில் சிலர்*********  என்ற ஒருவர் சம்பந்தபடுத்தியும் வேண்டாத சண்டையும் மூட்டி வருகிறார். அவர்  *********  தன்னை மறவர் என கூறி மறவர்களும் *********களும் என்நேரமும் விவாதம் நடத்தியும் பிற சமூகத்தினரான பள்ளர்,பறையர்,வெள்ளாளர் சமூகத்தோடும் விவாதம்பன்னி மறவர்களின் வரலாறை அழிக்க முற்படுகிறார். அவரின் கருத்துகளுக்கும் அவரிடம் போடும் கருத்துகளுக்கும் மறவர் சமூகத்தினர் பொறுப்பு ஏற்கமுடியாது. அவர் *******சமூகத்தின் ரகசிய இடைதரகராக செயல்பட்டு மறவர் சமூகத்தை *********சமூகத்திடம்
விவாதம் செய்து தரமிரக்கி தாழ்த்தபட்ட இதர சமூக பகையை உருவாக்க செயல்பட்டு வருகிறார். அவர் ரகசிய ********* குல போராளி.
அவர் ஒரு மறவர் சமூகத்து கோடாரி காம்புகளாக கருதினால் தவறில்லை. அதே வேலையில் அகமுடையர் அரண் பாலமுருகன் போல அகமுடையோரை தனி ஜாதியாக போராடும் போராளிகளை ஊக்குவிப்பது சமுதாய நல்லினக்கத்திற்கு நண்மையாக இருக்கும் என தோன்றுகிறது.


இப்படி முக்குலத்தோர் சமுதாய ஒற்றுமை கேலிச்சிரிப்பாக இருக்கும்போது மொத்த மறவருக்கும் DNT என்பது மறவர்களை சிக்க வைக்கும் வலை என்று தான் தோன்றுகிறது.

DNT என்றால் என்ன?

முதலில் DNT என்பது SC/ST என்பதன் உட்பிரிவு. DNTல் கொஞ்சம் காலம் கழித்து
SC/ST சலுகையை கோர அந்த இனத்துக்கு தகுதி வரையரைக்கப்படுகிறது.
BC/MBCல் இருப்பவர்கள் இதற்க்கு தயாராக உள்ளனரா என்பது கேள்விகுறியாகும்.

DNT என்றால் என்னவென்றே தெரியாமல் 30க்கு 25 பேர்களும் சேந்து எங்களுக்கு DNT வேண்டும்!DNT வேண்டும்! என கேட்கும்  பலருக்கும் DNT என்றால் என்ன அதன் விளக்கங்கள் என்ன என்பதே தெரியாது. DNT-Denotified Nomadic Tribe என்றால் சீர்செய்யபட்ட (அ) விடுவிக்கபட்ட(சிறைக்காவல்?) பழங்குடிகள் என்று அர்த்தம்.

இதை ஹிந்தியில் விமுக்தா சாதி(ViMukta Jati) என்று அழைப்பர். விமுக்த ஜாதி என்பதன் விளக்கத்தில். அதாவது ஒரு போலிஸ்காரர் கைதியை அடிக்கும்போது
"அடிக்காதீங்க ஐயா விடுங்க விடுங்க" எனும் கதரலையே கூறுகின்றனர்.
விமுக்தா சாதி என்றால் "விடுவிக்கபட்ட சாதி (அ) விடுதலையான சாதி". எப்படி காந்திஜி தலித் சமூகத்தை ஹரிஜன்(மகாவிஷ்னு மக்கள்) என சொன்னாரோ அதே மாதிரி குற்றப்பரம்பரையை விமுக்தா சாதி(விடுதலை இனம்) என்றனர்.

விடுவித்துவிட்டோம் என கூறினாலும் குற்றப்பரம்பரையினரின் பெயர் அட்டவனையை இன்னும் பின்பற்றுகின்றனர்.

நாம் DNT க்கு வருவோம் DNT-Denotified Nomadic Tribe என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த பட்டியல்  Nomadic Tribe  என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். இதற்க்கு யார் தகுதியுடையவர்கள் என்பதை பார்ப்போம்.
Nomads என்றால் நாடோடிகள். இந்த தகுதி யாருக்கு இருக்கிறதென்றால் நரிக்குறவர் சமூகத்துக்கே உண்டு. நரிக்குறவர் சமூகம் ஒரே இடத்தில் தங்காது வெவ்வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பர். அவர்களுக்கு பூர்வீகம் என்ற ஒன்றே கிடையாது. அதனால் Nomads என்று அழைக்கபட்டனர்.
நரிக்குறவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என எம்.ஜி.ஆர் காலத்துக்கு முன்னே இருந்தே நடமுறையில் இருந்து வருகிறது. அப்படி உள்ளவர்களை SC/ST பட்டியலில் முழுவதுமாக சேர்க்க முடியாது என்று அவர்களுக்கு DNT/NT   என்ற சலுகை தந்துள்ளனர். ஏனென்றால் இவர்கள் நடமாடும் பழங்குடிகள் Gypsies என அழைக்கபட்டர்.
அப்படி பட்டவர்களுக்கு முன்னேற்றம் கருதியே இந்த DNT/NT கொண்டு வந்தது.
இது தான் DNT/NT.


ஒரே இடத்தில் 100 வருடமாக குடியிருந்தாலே இந்த DNT/NT க்கு தகுதி இல்லாத  பூர்வ குடிகளாக்கபடுவர்.

எனவே 400 வருடம் 300 வருடம் மதுரையில் வாழும் பிரமலை கள்ளனுக்கே அல்லது திருநெல்வேலி மறவனுக்கோ இந்த DNT ஆகும் தகுதியே கிடையாது காரனம். பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் குடியிருக்கும் ஜாதியர் எவருக்கும் DNT/NT சலுகை கிடைக்காது நரிக்குறவர் போல் நகர்ந்து கொண்டை இருக்கும் Nomads பழங்குடிகளுக்கு தான் DNT/NT சான்றிதல் பெற தகுதி உள்ளது.

இப்படி பூர்வீகமற்றவனே பரதேசி எனப்படுவான். அப்படி பரதேசியான குற்றப்பரம்பரையில் ஒரு கூட்டம் தான் வேப்பூர் 'ப' என மாறி இன்று எங்ளுக்கு பிசி/எம்.பி.சி வேண்டும் என ஒரு கூட்டம் திரும்பியுள்ளது.

பின்னே இந்த குற்றப்பரம்பரையிலே யாருக்கு இடம் கிடைத்தது என்றால்.
அது பிரமலைகள்ளருக்கு தான்.


அதற்க்குமுன்னால் DNT/NT வரலாறையும் குற்றப்பரம்பரை பட்டியலையும் பார்ப்போம்.
1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA)

1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்தியாவை தங்கள் பிடியில் வைக்க பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் சில போராட்ட இனக்குழு சமூகங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒழுங்கு ஆணையம் கொண்டு வர ஆங்கில அதிகாரி ஒருவர் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரையின் பெயரால் 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA) இயற்றப்பட்டது.

இந்தக் கடுமையான அடக்குமுறை சட்டம் சில சமூகங்களை குற்றம் சார்ந்த பழங்குடிகளாக அறிவித்தது. அப்படி அறிவிக்கபட்ட பழங்குடிள் கிரிமினல் என "அறிவிக்கப்பட்டுவிட்டால், அதன் உறுப்பினர்கள் அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் உள்ளூர் போலிஸ் நிலையத்தில் தன்னை தானே பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் வருகை பதிவும் கொடுக்க வேண்டியிருந்தது.
அவர்களின் ஆய்தங்களும் உடமைகளும் பறிக்கபட்டன. அவர்கள் தங்களுடைய வீட்டை மாற்றிக் கொள்ள முடியாது, எந்தவொரு பயணத்திற்கோ இயக்கத்திற்கோ முன்பாக சரியான அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
இந்த விதிகளை முறித்துக் கொண்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.உள்ளூர் போலிஸ்  சமுதாயத்தின் எந்தவொரு நடவடிக்கையின் மீதும் சந்தேகத்தையும்  கொண்டு அவர்களை கைது செய்வது சுலபமாக்க முடியும்.இச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட  198 பழங்குடியினரைப் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அப்படி கொண்டு வரப்பட்ட சமூகங்களில் பலர்,
இந்தியாவில்
பாம்தா ராஜபுத்திரர்கள்,ஜாட்டுகள்,குஜ்ஜர்கள்
 போன்ற மேல் ஜாதிகள் போல பிராமணர்கள் சமுகத்தில்
பூரா பிராமணர்கள் என்ற ஒருவகை வேத பிராமணர்களும்
இதில் அடக்கம்.



தமிழகத்தில்,
ஆதிதிராவிடர்
அம்பலகாரர்கள்
இருளர்
தொட்டிய நாயக்கர்கள்
காலடிப் பறையர்கள்
குறவர்
கள்ளர்
மறவர்
ரெட்டியார்
வலையன் குப்பம் படையாச்சி
வேட்டுவ கவுண்டர்
வலைய முத்தரையர்
என பட்டியல் நீளும்.


இதில் இன்னும் என்னற்ற சாதிகள் இருந்தாலும் அந்த சி.டி சட்டம் தமிழகத்தில் பிரமலைகள்ளர்களுக்கு மட்டுமே போடப்பட்டது. மற்ற சமூகங்கள் அட்டவனையில் இருந்ததே தவிர (CTA) சட்டம் போட்டு கண்கானிக்கபடவில்லை.
தமிழ் நாட்டில் பிரமலைகள்ளர்(மதுரை,தென் ஆர்காடு) மாவட்டத்திலும் அதே மாதிரி கட்டிலு காலிங்கி,யெர்ரகொல்ல குறவர்கள்(சென்னை)  பகுதியிலுமே இந்த சட்டம் போடப்பட்டது.

கள்ளர்,மறவர்கள் என்று பார்த்தால் கள்ளரில்(கூத்தபால் கள்ளர்,பெரியசூரியூர் கள்ளர்,பிரமலை கள்ளர்கள்) என வந்துள்ளனர் மறவர்களில்(செம்பநாடு,ஆப்பநாடு கொண்டையங்கோட்டை) பிரிவினர் என வந்துள்ளனர். வேறு எந்த பிரிவு கள்ளர்களும் மறவர்களும் அட்டவனையில் வரவே இல்லை. ஆகவே அவர்களுக்கு இது பொருந்தவே பொருந்தாது.

இப்படி அட்டவனையில் கூத்தபால் கள்ளர்,பெரியசூரியூர் கள்ளர்,செம்பிநாடு மறவர்,ஆப்பநாடு கொண்டையன்கோட்டை மறவர் என்று குறித்திருந்தாலும் இவர்களுக்கு இந்த (CTA) சட்டம் போடவில்லை அவர்கள் அட்டவனையில் மட்டுமே இருந்துள்ளது.

இப்படி (CTA) சட்டத்தால் பாதிக்கபட்டது பிரமலைகள்ளர்கள் ,யெர்ரகொல்லா,காலங்கா போன்ற சமூகங்கள் மட்டுமே (CTA) போடப்பட்டு செட்டில்மெண்ட் கிராமங்கள் என்ற தனிகுடியிருப்புகள் வேறு ஒதுக்கபட்டது.
இப்படி சட்டத்தால் பாதிக்கபட்டது பிரமலைகள்ளர்களே.

(தொடரும்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.