Monday, September 12, 2016

கானாடு கோனாடு மறவர் ஆதிக்கம்


ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html

அரிய மறவர் கல்வெட்டுகள் சில....

https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html

https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html

https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html


டைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை,குழிபிறை,கோவனூர்,செவலூர்,பென்னமராவதி,பூலாங்குறிச்சி,ராங்கியம்.



கோனாடு:

சோழர் எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்


B




கானாடு:
பாண்டிய எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி

NO.15.AR.NO.137 of 1908 Tirupattur,Ramanathapuram district
Inscriptions of Varaguna Maharaja a pandya king

"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து 
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து "




மேலைப்பனையூர் கல்வெட்டுகள்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:


1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"

"மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.


சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.


சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.


வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..


சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.




நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்







































நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.