Tuesday, February 3, 2015

புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர்(சக்கரவர்த்தி) கல்வெட்டு கண்டுபிடிப்பு

மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871



புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா ஆகியோர், புதுக்கோட்டை அடுத்த குளத்துார் தாலுகா, காவேரி நகரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:குளத்துார் தாலுகா பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டபோது, சாலையோரம் கிடந்த, மூன்று அடி உயரமுள்ள, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.


அந்த கல்வெட்டை ஆய்வுசெய்த போது, அதில், 'மீநவந் முத்தரையர் ஊர்.ெ-(ந)டுங்குடி இர(ண்)டு கரை நாட்டு மறமாணிக்கர், பெ(ா)ந் மாணிக்க நல்லுார்' என்று, ஒன்பது வரிகள் எழுதப்பட்டுள்ளது.


இதை, பொன்மாணிக்கநல்லுார் என்ற ஊரில், இரண்டு கரை நாட்டு மறமாணிக்கர் தீர்மானித்தபடி நடப்பட்ட எல்லைக்கல் என்று பொருள் கொள்ளலாம். தற்போது, காவேரி நகர் என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதி, கி.பி., 12ம் நுாற்றாண்டில், நெடுங்குடி என்றும், மற்றொரு பகுதி பொன்மாணிக்கநல்லுார் என்றும் அழைக்கப்பட்டதாக கருதலாம்.

இவ்விரு ஊர்களின் எல்லையில், இந்த கல்வெட்டு நடப்பட்டிருக்கலாம். மேலும், பாண்டியர்- முத்தரையர் தொடர்பைக் காட்டுவதாக, இக்கல்வெட்டில் வரும் பெயர் உள்ளது.
அரிய இந்த கல்வெட்டை, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சேர்க்க, கலெக்டர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.undefined

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.