Wednesday, July 17, 2013

சங்க கால சோழ படை தளபதிகளாக அறியப்பட்ட தேவர் இனத்தவர்கள்

  1. பழையன் சோழன் மறவன் (அகம்.326-9 ) இவன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்து சோழ படை தளபதி ஆவான்.
 
பிளைய மறவன் என்றும் பிளைய  மாறன் என்றும் அறியப்படும் பழையன் சிங்கள நாட்டை மேலும் 4 படை தளபதிகளோடு சேர்ந்து
வட்டகாமினி இடம் இருந்து கைப்பற்றி ஆண்டான், மேலும் அவன் மனைவி சோம தேவியை சிறை வைத்தனர்.

பழைய மறவன் (கி.மு 91 - 92)
பணய மாற (கி.மு 92 - 99)
பாக்கிய  (கி.மு 99 - 101)
புல அத்த (கி.மு 101 -104) அதற்கு பின்
தாதிக போன்ற  மறவர்களே  ஆட்சி செய்தனர்.



2. சோழன் மருகன் நல்லடி - வல்லங்கிழான்
நல்லடி அரசன் என்னும்  இவன்  "சோழன் மருகன் " என்று குறிப்பிடபடுகின்றான். இவன் ஆரிய படையை வென்றவன் என்று குறிப்பிடபடுகின்றான். தஞ்சை வல்லம் அருகே இவன் வழியினர் இன்றும் வல்லக்கோன், வலங்கண்டார், வல்லுண்டார், வல்லத்தரசு, வல்லத்தரசர், வல்லத்தரையர், வல்லமாண்டார், வல்லாண்டார், வல்லண்டார், வல்லாளதேவர், வல்லாளியார்,
வல்லாடியார், என்ற பட்டங்கள் தரித்து பெருவாரியாக வாழ்கின்றனர்
.
    
ஏனாதி - சேனைத்தலைவர், சேனாதிபதி.
காவிதி - வேளாண் மக்கள் தலைவன்.
எட்டி - வணிகர் தலைவர் பட்டம்.

ஏனாதி, ஏனாதியார், ஏனாதிகொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன்,

3. ஏனாதி திருக்கிள்ளிசோழன்- ( புறம் 167 ),

 ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடலின்  மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும்.
மேலும் இவன் காலம் சோழன் இலவந்திகை பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி மற்றும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் காலமாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

4. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் (புறம் 394 ) இப்பாடலில் இவன் நாடு, வலிமை, உருவம், வள்ளல் தன்மை போன்றவை கூறபடுகின்றது. 
சோழன் தமிழனே :

சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட  மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட  அந்த மாநில வேலைக்காரர்களே  ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.

அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும்   மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.

தெலுங்கர் குல காலன்  சோழனான தமிழனின்  வரி  இதோ:

"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"

5.சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்,
ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது
.


இவற்றில் இருந்து சங்கம் முதல் சோழன் படை தளபதிகளாகவும்
ஏனாதிபட்டம் பெற்றவர்களாகவும் வழிவழியாக வந்தவர்கள் சோழ மறவர்கள் இன்று தஞ்சை கள்ளர்களாகவும்  பார்க்கவ குல மலையமான்களாகவும் உள்ளனர். 


நன்றி:
செய்தி வழங்கியவர்:
காலிங்கராயர்  தேவர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.