Saturday, January 26, 2013

சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்


முத்து வடுகநாதர் (? - 25 சூன், 1772) என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தையான சசிவர்ணத்தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

பொருளடக்கம்

[தொகு] மதுரை மீட்பு

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர்.அதையறிந்த முத்துவடுகநாதர்விசய குமார நாயக்கரை காப்பாற்றி வெள்ளிக்குறிச்சி என்ற ஊரில் வைத்து பாதுகாத்து மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பினி படைகளுக்கு சிவகங்கை மீது கோபம் இருந்தது.

முத்துவடுகநாதர் என்ற பெயரின் விளக்கம்?

சில இழிசன கூட்டத்தினர் மிக வண்மையான காழ்புணர்ச்சி காரணமாக முத்துவடுகநாதர் என்ற பெயரை வைத்து இவர் தெலுங்கு நாய்க்கர் என கூவுகின்றனர். ஆனால் இந்த மல்லு கூட்டம்
வடுகையும் தாண்டி குஜராத் படேல் மற்றும் எகிப்து,கிரீஸ்,நேபாளம்,அமெரிக்கா என கப்பைகால் விரித்து கணவு காண்கின்றனர்.

முத்து வடுகநாதர் என்னும் பெயர் பிராண்மலை வடுக பைரவரை குறிக்கும் பெயராகும்.
பிரான்மலை சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட  போர் கோட்டையும்
என்னற்ற பீரங்கீகளும் இருந்த கோட்டையாகும். இதில் கோயில் கொண்ட ஈசன்தி ருகொடுங்குன்றநாதர் என்று பைரவர் வடுகு பைரவர் என அழைக்கபடுகின்றனர்.
முதலாம் சசிவர்ண தேவர் மகன் வேண்டி இப்பைரவரை வழிபட்டு அதன் நினைவாக முத்துவடுகநாதர் என அழைக்கபட்டார்.
Kodunkundranathar siva Temple Piranmalai

[தொகு] வரி மறுப்பு

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப் பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

[தொகு] இராமநாதபுரம் இழப்பு

அதே நேரத்தில் பரங்கிப்படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. அப்போது இராமநாதபுரத்தின் பரங்கித் தளபதியாக மார்டினசு பொறுப்பேற்றான். அதற்கு உதவியவன் இராமநாதபுர தளபதிகளில் ஒருவனான இராயப்பன் என்றவனே. தனக்கு முத்துவடுகநாதர் மந்திரி பதவி அழிக்காததால் தான் அவன் இந்தத் துரோகச் செயலில் இறங்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தருமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தருமாறும் செய்தியனுப்பினான். அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமையை சேர்ந்தவர்களின் உதவியை நாடினார் முத்துவடுகநாதர்.

[தொகு] இராமநாதபுரம் மீட்பு

மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து பரங்கியர்களின் துப்பாக்கிப் படைமீதும் பீரங்கிப்படை மீதும் போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார்.

[தொகு] சதியில் மரணம்

சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த பரங்கிப்படை தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்றை காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற பரங்கித்தளபதியின் கீழும் மற்றொரு பிரிவை மருது சகோதரர் படை மீதும் செலுத்திப் போர் தொடுத்தது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

[தொகு] போலி வரலாறு

சமாதானம் பேசுவதாக பொய் கூறிவிட்டு கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற நேரம் பார்த்து முத்துவடுகநாதரை கொன்றுவிட்டு சிவகங்கையும் காளையர்கோவிலையும் வெற்றி கொண்டதாக பரங்கியர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர். அந்த சதிச்செயலுக்கு லண்டன் நகரவாசிகள் வெட்கத்துடன் வெளியிட்ட ஆங்கில நாளிதழ் செய்திகளே சாட்சி.

[தொகு] சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

முத்துவடுகநாதர் இறந்ததை அறிந்த அவரின் மனைவியான வேலு நாச்சியார் தன் இரண்டாவது மகளான வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து விருப்பாச்சிக்குத் தப்பிச்சென்றார். அதன்பிறகு கைதர் அலி உதவிபெற்று மீண்டும் சிவகங்கை, இராமநாதபுரம், காளையார்கோவில் போன்ற இடங்களை கைப்பற்றி 4 ஆண்டுகள் அரசாண்டார். சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை இராமநாதபுரத்தை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு,
1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1783 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 - 1801 - மருது பாண்டியர்கள் - பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - து. உடையணராஜா
  • 1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
  • 1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.[1]

[தொகு] மூலம்

  • குங்குமம் வார இதழ் கட்டுரை[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. ராமநாதபுரம் வரலாறு
  2. இரா. மணிகண்டன் (மே 2011). "சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்". குங்குமம்


  1. பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு...அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான் முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க வேண்டும்...திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் வதரித்தாலும் உலக இரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன்...அதோடு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்...இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள்...சினம் கொண்டார்... சிவபெருமான்...பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார்...தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி வரும்படி ஆணையிட்டார்...வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்.. இந்த பைரவர் அம்சமே வடுகதேவர்...(வடுகன் என்றால் பிரம்மச்சாரி).. புராணத்தில் சொல்லப்பட்டத் தகவல் இது.

பயன்பாடு[தொகு]

  • பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி: ஒருமுறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் வண்டிகளில் மிளகு மூட்டைகளை எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே இந்த வனத்தில் தங்கிவிட்டு மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது இலந்தை மரத்தின் அடியில் குடிகொண்டிருந்த பைரவர் கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை நெருங்கினார். உடல் நிலை சரியில்லை, கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள் கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள் என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே மூட்டைக்குள் இருப்பது மிளகு இல்லை, பாசிப்பயறு என்றார். கிழவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தார். நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் ஒரு விலை பேசி சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக் கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி, பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க, உள்ளே இருந்தவை பாசிப்பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்துவிட்டது. முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான். அதிலும் பாசிப்பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப்பயறு இருப்பதைக் கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி, அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான். அப்போது, பைரவரின் திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ, அவருக்கு திடீரென சாமி வந்தது. மிளகு மூட்டைகளை பாசிப்பயறு ஆக்கியது. நான்தான்டா என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும் மன்னன் இதை நம்பத் தயார் இல்லை. எனவே சாமி ஆடிய செட்டியாரைப் பார்த்து “எனக்கு இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை நான் நம்புகிறேன்” என்றார். நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து என்னை சந்நிதியில் குடியேற்று; அபிஷேகங்கள் செய்; மிளகு சாற்றி வழிபடு; உன் குழந்தைகளைக் குணப்பத்துகிறேன்” என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார். பாண்டியமன்னனும் அதை சிரமேற்கொண்டு சேரநாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான். மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான். பைரவர் அருளியபடியே, எட்டுநாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன. இதனால் இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது உண்டு. குண்டடம், திருப்பூர் மாவட்டத்தில் அருள்மிகு காலபைரவ வடுகநாதர் என்ற கோவிலுள்ளது.அந்த கோவில் கல்வெட்டில் உள்ள வரலாறே இது. இதனால்தான் காலபைரவரின் சொரூபமாகிய சிவபெருமானை வடுகநாதன் என்று அழைக்கிறார்கள்.

ஆதாரம்...சமூகச் சார்பானவற்றிற்கு:
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.