Saturday, January 26, 2013

தென் பாளயபட்டுகளின் சூரிய,சந்திர,அக்கினி குல செய்திகள்



தென் பாளயபட்டுகளின் சூரிய,சந்திர,அக்கினி குல செய்திகள்


சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள் உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன்,பூலியன், பனந்தாரகன், பொறையன் , கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள் மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், செம்பியன்,வில்லியன், நன்னி என்பன

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலே குறிப்பிட்ட பட்டங்கள் அனைத்தும் மறவர்க்கும் உன்டு


பளையங்களின் கதைகளும் சூரிய,சந்திர,அக்கினி குலங்கள் பற்றிய செய்திகள்:

சேதுபதி தம்மை நம்பி மார்பத நம்பிபுரானம் பாடிய ரவிகுல சேதுபதி ரகுநாதன் அவையில் அரங்கேற்றினானே"
-மருதூர் புரானம்.
"ரவிகுல சேதுபதி ரகுநாதன் காத்தவம்சத்தோதாரன்"
என்று தம்மை ரவிகுலம் என்ரற சூரிய குலம் என கூறுகிறார்.
உற்றுமலை ஜமீந்தார், ஹிருதாலயா மருதப்ப தேவரும் தம்மை சூரிய குலம் என கூறுகிறார்.
புலிகொடி ஏந்தியவனும் ரவிகுலத்தை சார்ந்தவனுமான மருதப்ப தேவனுடன் வஞ்சகனுடன் போர்தொடுக்க புறப்பட்டனர்.
மருதப்பன் புலிகொடியுடன் வரகுனராமன் மகரகொடியுடன் வந்தது சோழனும் பாண்டியனும்"
-- சிவகிரி திக் விஜயம்.
(சேத்துர்,கொல்லம்கொண்டான்) வனங்காமுடி தலைவர்களும்,செம்பி நாட்டு தலைவர்களும் தம்மை ரவிகுலமாகிய சூரிய குலத்தை என்று கூறுகின்றனர்.


தென்காசியைத் தலைநகராக வைத்து ஆட்சி செய்து வந்த சீவலபாண்டிய மன்னர் இந்திரராம சாமி பாண்டியனின் வீரத்தை அறிந்து,
சந்திரன் என்ற இந்திர ராமசாமிபாண்டியன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி 18 ஊர்களுக்கு ‘திசை காவலாக’ நியமித்து, செப்புப் பட்டயம் வழங்கினார்
. இது இப்படி இருக்க

தலைவனார் வம்சம்:(இந்திரன்,நம்பி,தடிய,அனஞ்சா,குமார,சேதுராம,சிவராம,சொக்க,கொத்தாள,அருகு) கொண்டயம் கோட்டை மறவர்கள் இதரமறவர்கள் தம்மை சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டன.
இதை போல கவுரியன் என்ற பட்டம் பெற்ற சிவகங்கை அரசர் "கவுரி வல்லபர்" என்றும் "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்" என்ற பட்டம் பெற்றவர் தம்மை சந்திர வம்சம் என கூறுகிறார்.
வன்னிய மறவர் தலைவர்கள்சிவகிரி,அழகபுரி,எழாயிறம்பன்னை) தம்மை அக்னி வம்சம் என்று கூறிக்கொண்டன.
இவர்கள் அனைவரும் ஓரே இனத்தை சார்ந்தவர்கள்.சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறிவது சாத்தியமா என்றால் சாத்தியமே என்கின்றனர் பரதவர் இனத்தவர்கள் துத்துக்குடி பரதவர் தம்மை "நிலா பரவர் என்று சந்திர வம்சம்" என்று கூறிக்கொண்டனர், எதிர்கரை இலங்கைபரதவர் தம்மை சூரிய வம்சம் என்று கூறிக்கொண்டனர்(எ-டு ஸனத் ஜெயசூரிய கிரிக்கட் வீரர்), கன்னியாகுமரி பரதவர் தம்மை அக்கினி வம்சம் என்று கூறிக்கொண்டனர்.

துத்துக்குடி - இலங்கை - கன்னியாகுமரி 60 மைல் தொலைவில் தம்மை பிரித்து காட்டுவத்ற்காக இவ்வாறு கூறுகின்றானர். இது மன்னர்களில் சேர ம்மன்னர்கள் வம்சத்தை எடுத்துக்கொண்டால் சேரர் அனைவரும் அக்கினி குலம் என்று கூருவர், ஆனால் இடைகால சேர மன்னன் ஒருவன் சந்திர வம்சத்தையே சார்ந்ததாக கல்வெட்டு ஆதரங்கல் கூருறகிரகது.ஆனால் சேர மன்னனர்களுள் 12 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர அழ்வார் ராமன் மீது கொண்ட பக்தியின் காரனமாக தம்மையும் "சூரிய வம்சம்" என்று கூறிக்கொண்டார் அதானாலே தன் அரியனைக்கு "பாஸ்கர(சூரிய) திருவடி" என்றே இன்றளவும் கூறுகின்றனர், இன்றய திருவிதாங்கூர் பென் வழி சேரனோ தம்மை "நாக சூரிய வம்சம் குலத்தவன்" என்கிறார்.
சேரனின் முத்திரை "வில்" திருவிதாங்கூர் சின்னமோ "சங்கு" .
பிற்கால பாண்டியன் ஒருவன் "வரகுன ராமன்" என தம்மை கூறுகிறார். ஆக மூவேந்தரே தம்மை பிரித்து காட்டுவத்ற்காக சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் இவ்வாறு கூறுகின்றானர் ஒழிய இவர்களை ஆரிய வடமாநிலத்தவர்கள் என்றுமே சூரிய,சந்திர,அக்கினி அரசர்களாக ஏற்றுகொண்டதில்லை.அனைத்தும பாளயங்க்ளும் தம்மை சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறி கொண்டனரே தவிர இவர்கள் ஆரிய வழியினர் அல்ல என "நிகொலஸ் டிரிக்ஸ்" கூறுகிரார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.