மேல் மலையடி வாரத்தில் சிவசைலம் என்றோர் கிராமம்.
இக் கிராமத்தில் மறவரில் ஊர்காடு சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்
இருந்தான்.
ஊர்க்காடு ஜமீன்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_853.html
சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)
https://thevar-mukkulator.blogspot.com/2018/01/chedi-vanshi-king.html
சேதுராயன் காதல்
https://thevar-mukkulator.blogspot.com/2024/01/blog-post_7.html
அவன் அடிக்கடி மலைக்கு வேட்டைக்குச் செல்வதுண்டு. அங்கு
மலைப்பளியர் சாதியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்தான். அவள் காட்டு
சாதியைச் சேர்ந்தவள். முற்றிலும் நாகரிகம் அடையாத இனத்தவள். பளியர்கள்
வேட்டையாடியே பெரும்பாலும் தம்வாழ்க்கையைக் கழித்தார்கள். பெண்கள்
சிறிதளவு மலை வேளாண்மை செய்வார்கள் கொம்புச் சாமான்கள்
செய்வார்கள். வேலை செய்வதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்
கிடக்கமாட்டார்கள். சேதுராய இளைஞனும் வேட்டையாடச் செல்லும்போது
பளிங்க சாதி இளைஞர்களைச் சந்தித்து அளவளாவுவான்.
அவர்களோடு
சேர்ந்து வேட்டையாடுவான். இரவில் ஊருக்கு வெளியே மணமாகாத பளியர்
இளைஞர்கள் தங்கும் இளவட்டஞ் சாவடியில் தீக்கணப்பருகே உறங்குவான்.
அவனும், அவளும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அவர்கள்
உள்ளங்களில் காதல் அரும்பிற்று. பளியர் சாதியில் விவாக உறவுகள் மிகவும்
கண்டிப்பானவை. பெண் வேறு சாதியானோடு பேசியதைக் கண்டாலே
வீட்டில் சிறை வைப்பார்கள். “தவறு நடந்துவிட்டால்” கொன்றே
போடுவார்கள். அப்படியிருந்தும் அவள் துணிந்து விட்டாள். உயிரைவிடக்
காதலுக்கு மதிப்பு வைத்தாள். அவனுடைய சாதி ‘நாகரிகம்’ படைத்த
சிறுவிவசாயி குடும்பம். ஆடு மாடு நிலபுலன் உள்ள குடும்பம்.
சாதிக்குள்ளேயே பெரிய குடும்பம் என்று சொல்லலாம். அங்கு எவ்வளவு
தடைகள் இவ்வுறவுக்கு ஏற்படும் என்பது இளைஞனுக்குத் தெரியாது. அவன்
ஊர்திரும்பினான். பெற்றோரிடம் காதல் கொண்ட பெண்ணை மணம்
செய்துவைக்கக் கோரினான். அவர்கள் எப்படிக் காட்டுப் பெண்ணை வீட்டிற்குள் அழைத்துக்கொள்ள
முடியும்? அவனை வீட்டிற்குள் அடைத்துப் போட்டார்கள். தாங்கள் சொன்ன
பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்துரிமை இல்லை
என்றனர். நயத்தாலும், பயத்தாலும் புத்தி சொன்னார்கள். இருமாதங்கள் ஓடின.
இவன் வெளிகிளம்ப முடியவில்லை. பளிச்சி இருமாதங்கள் பொறுத்துப்
பார்த்தாள். வந்தது வரட்டுமென்று ஒரு உறுதியான முடிவுக்கு வந்தாள்.
அவளைக் கண்டால் அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு
இருந்தது. அவனது ஊர் நோக்கி வந்தாள். வழியில் கருணையாறு
குறுக்கிட்டது. அக்கரையில் காதலனது ஊர். ஆற்றில் வெள்ளம். இக்கரையில்
நிலையாக ஒரு பாறைமேல் நின்றாள், அவன் வரக் காணோம். பெற்றோர்
அவளை அக்கரையில் கண்டு மகனை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுப்
பாதுகாத்தனர். அவன் வரவேயில்லை, அவளும் போகவேயில்லை. நின்றாள் ;
நின்றாள் ; நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன அவள் இளமை
மாறிற்று ; வனப்பு அழிந்தது ; முதுமை தோன்றிற்று. கடைசியில் எலும்புக்கூடு
எஞ்சியது.
இவ்வாறு காதலுக்குப் பலியானவளை “பளிச்சியம்மன்” என்று பெயரிட்டு
வணங்குகிறார்கள். இவளுக்கு கருணையாற்றங்கரையருகே சிலையொன்று
இருக்கிறது.
குறிப்பு:
ஆழ்வார்குறிச்சிக்கும், ஆம்பூருக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வருவது கருணை ஆறு. . இந்த கருணை ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய உறைகிணறுகள் மூலமாக ஆற்று நீர் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மேலாம்பூர் வழியாக,.கடனா அணைக்கு வந்து சேர்கிறது. இந்த தண்ணீர் சிவசைலம், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி வழியாக பாப்பான்குளம் மற்றும் கீழ் பகுதிகளுக்கு செல்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.