சேதுபதியின் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html
செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி
https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில்
தவிடுபொடியானது. முதலாம் சுந்தர பாண்டியன் காலத்திலே சேதுபதி மன்னர்களின் முன்னோர் ஆன் ஜயதுங்கராயன்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
காலம் :12-ஆம் நூற்றாண்டு
மன்னன் : ஜயதுங்கராயன்,பாண்டியன்
இடம்:குளத்தூர் குடுமியான்மலை கோவில்
செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ அருளிசெயல் உடையநாயனான ஜயதுங்கரயனுக்கு
விழுமியான புவனமுழுதுடைய பல்லவராயன் கோனாட்டில் விலைகொண்ட
...........காங்கேயராயன் எழுத்து.
பாண்டியனுக்கு கீழ் சுயாட்சி புரிந்துள்ளார். சேதுபதிக்கு கீழ் காங்கேயர்,வழுத்தூர்
பல்லவராயன் 16-ஆம் நூற்றாண்டுக்கு பின் அறந்தாங்கி தொண்டைமான்
என அனைவரும் இருந்துள்ளனர்.
இதே ஜயதுங்கராயன் கீழ்கொடுமாளூரான வடதலை செம்பி நாடு உடையான்,இளையான்குடி உடையான் என பல பெயரில் வந்தவரை பற்றி இன்னும் விபரங்கள் வரும்
திருமலை நாயக்கருக்கு முந்த சேதுபதி: திருமலை நாயக்கன் பாட்டன் முத்துவீரகிருஷ்ன நாயக்கன் உடையான் சேதுபதி என்பவரை நியமித்தாக கூறும் நாயக்கர் வரலாறு. "அச்சுதராயர் அப்யுக்தம்" என்னும் விஜயநகர வரலாறு. கிருஷ்ண தேவராயர் தளபதி விசுவநாத நாயக்கன் "சயதுங்க தேவன்" என்ற சடைக்க தேவனை கொன்று சேதுவை கைப்பற்றினான் என கூறுகிறது. இதை மறவர் ஜாதி வர்ணம் என்னும் சுவடியும் உறுதிசெய்கிறது. இதை ஆராய்ந்த வில்லியம் டெய்லர் மற்றும் மெக்கன்சி கையெழுத்து பிரதியும் உறுதி செய்து இதையே "மதுரா மானுவல்" என்னும் புத்தகத்தில் ஜே.எச்.நெல்சன் மதுரை வரலாறு புத்தகத்தில் கூறுகிறார்.
அந்த "ஜெயதுங்க தேவன்" பேரனையே முத்துவீரப்ப நாயக்கன் சேதுபதியாக அமர்த்தினான் என்கிறது. இவனே சடையக்க உடையான் சேதுபதி. தன் மூதாதயரான "சயதுங்க" தேவரை ஒவ்வொரு முறையும் செப்புபட்டயத்தில் "செயதுங்கராய வங்கிஷம்" என குறிப்பிட்டனர் சேதுபதிகள். சேதுபதியின் செப்பு பட்டங்கள் 250 க்கும் மேல் உள்ளது திருமலை நாயக்கரை விட அதிகம். அத்தனையும் ஆங்கிலேயரே பதிவு செய்து தமிழக ஆவணங்களில் ஊர்ஜிதபடுத்தபட்டு ஆவனமாக உள்ளது. செப்பு பட்டயம் மட்டுமல்ல கல்வெட்டுகளும் 70 க்கு மேல் இன்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இவை கடந்த 500 வருடமாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பழமை என ஊர்ஜிதபடுத்த பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.