Friday, April 24, 2020

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு



பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை "மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு" என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்
சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளை
முன்னிறுத்தி அம்பெரிந்து வருகின்றனர். அந்த அறியாமையை நீக்க மேலும் ஒரு சான்றாக
தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையன் கல்வெட்டு பாண்டியனை சங்க இலக்கியம் கூறும் "மறப்படை பாண்டியன்" என்பதை போல் "மறப்படை மீனவன்" என்று முத்தரையன் கல்வெட்டு கூறுகின்றது.

கல்வெட்டு கூறும் செய்தி யாதனில் முத்தரையன் செந்தலை என்ற சந்தரலேகையை வைத்து
தஞ்சை   நகரத்தை தலைநகராக கொண்டு சோழ நாட்டை பல்லவர்களுக்கு உட்பட்டு ஆண்ட ஒரு குறுநிலை மன்னன். முத்தரையன் பல்லவனின் தலைமையில் பாண்டியனை போரில் எதிர்க்கிறான். அப்போது விளக்கும் காட்சியே இந்த கல்வெட்டு இது திருச்சிராப்பள்ளி அருகே
செந்தலை என்னும் ஊரில் கானப்படுகின்றது. இங்குள்ள பிடாரி அம்மன் கோவில் என்ற
7-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால கோவிலில் தென்முகத் தூனில் உள்ள கல்வெட்டு
வாசகம்.

இடம்:செந்தலை தூன் கல்வெட்டு
தெற்கு தூன் முகம்:
ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு
மன்னன்: பெரும்பிடுகு முத்தரையன்

செய்தி:
மறப்படை மீனவன் வல்லரன்
பல்லவன் சேனைகண்று புறப்படுமாறு
....பெருங்களிறுக்......

விளக்கம்:
மறப்படையுடைய பாண்டியனை எதிர்க்க வல்லமை கொண்ட பல்லவன் தன்
சேனைகளுடன் தன் யானை மீது அமர்ந்து செல்கிறான்.

மறப்படையுடையவனுக்கு தலைவன் யாராக இருப்பான் மறவனாகவே இருப்பான்.
இருந்தாலும் சில ஆதாரங்களை முன் வைப்போம். எனவே மறப்படைக்கு தலைவனான பாண்டியனும் மறவனே ஆவான்.

மறப்படை என்பதும் மறவர் படையே இதற்க்கும் ஆதாரம் கூறுகிறோம்.

இதே போல் குலோத்துங்க சோழன் கல்வெட்டும் பாண்டிய மறவர் படையுடன் ஏழகப்படையை
வென்றதாக நிறைய கல்வெட்டு வருகிறது.

இருந்தும் சில தற்குறிகள் அந்த மறவர் நீங்களா என கேக்க கூடும் அதற்கும் பொன்னமராவதியில் பாண்டியனுடன் சோழநாட்டுக்கு படை எடுத்த மறவர்கள்பற்றிய மறமானிக்கர் குறிப்பு இவர்கள் இன்னமும் பொன்னமராவதியில் இருக்கின்றனர்.


பாண்டியன் மறவனே என்பதற்கு பல ஆதாரங்களுள் இவையும் ஒன்று

நன்றி:
தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்
இராகவ ஐயங்கார்(செந்தமிழ்).


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.