பலபத்திரராமபுரம் இது எங்களுடைய ஊரின் பெயர்.இது சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பணவடலிசத்ரத்தில் இருந்து மேற்கு பக்கம் 4km தொலைவில் உள்ள கிராமம்.இங்கு முக்குலதோரில் மறவரின (அணி நிலகோட்டை) மக்கள் பெரும்பான்மையாகவும்,யாதவர்,பள்ளர்,வண்ணார்,சக்கிலியர்,மருத்துவர்,ஆசாரிஇன மக்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்துவருகிறோம்.இதுவரை இங்கு ஜாதி ரீதியான எந்த பிரச்னையும் வராமல் ஒற்றுமையாக அணைத்து மக்களும் இருந்துவருகிறோம்.
எங்கள் ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது பெரும்பாலும் அனைவரும் இங்கு படித்துவிட்டு மேற்படிப்பிற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம்.
எங்களது ஊரில் ஓவ்வொரு வருட ஐப்பசி மாதம் 3ம் செவ்வாய்க்கிழமை வடகாசி அம்மன் கோவில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும் உலகத்தில் எங்கு இருந்தாலும் அன்று மட்டும் அனைவரையும் எங்கள் கிராமத்தில் காணலாம்.
எங்கள் ஊர் மக்களின் குலதெய்வம்கள்:-
1)ஆலத்தி போற்றி அய்யனார்
2)அடைக்கலம் காத்த அய்யனார்
3)ஆதிமூல அய்யனார்
4)பாடனாட்சி அம்மன்
5)திருவேங்கட போற்றி அய்யனார்
6)பூநூலுடைய அய்யனார்
7)முப்பிடாதி அம்மன்
8)தவசி பாறை அய்யனார்
7)முப்பிடாதி அம்மன்
8)தவசி பாறை அய்யனார்
இங்கு வாழும் மறவரின மக்கள் கொண்டயன்கொட்டை மறவர்களை போல கிளை, கொத்து போன்றவை இல்லாமல் வலசை என்னும் முறை கொண்டு திருமண உறவு புரிகின்றனர்.மேலும் மருமகளை மணம் புரிபவராகவும் உள்ளனர்.வலசை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்குமான பெயராகும்.
நமது ஊரில் உள்ள வலசைகள்:-
1. பாண்டியர் வீடு
2. இளையவர் வீடு
3. இருளப்பன் கூட்டத்து வீடு
4. தண்ணிகினத்து வீடு
5. தலவாரத்து வீடு
6. தலையாரி வீடு
7. கொம்பர் வீடு
8. மூளைகத்தான் வீடு
9. பூசாரி வீடு
10. மொட்டையன் கூட்டத்து வீடு
11. ஊரணி வீடு
12. சங்கரன் கூட்டத்து வீடு
13. சத்னாரத்து வீடு
14. வெளியப்பன் கூட்டத்து வீடு
15. வைரவன் கூட்டத்து வீடு
16. மொட்டகாளை வீடு
17. பொய்யாளி வீடு
18. மகாலிங்கம் கூட்டத்து வீடு
19. முண்டக்கன்னு வீடு
20. மாலையாரத்து வீடு
21. கூட்டத்து வீடு
22. நடுத்தெரு வீடு
23. புலியர் வீடு
24. பொட்டுக்காரன் கூட்டத்து வீடு
25. மேற்காத்த வீடு
26. முல்லையரத்து வீடு
27. மண்டையர் வீடு
28. வைக்க புள்ள வீடு
29. முக்கடி வீடு
30. கள்ளிகாட்டான் வீடு
31. கடைவீடு
32. உப்புகிணத்து வீடு
33. ஆட்டுக்காரன் கூட்டத்து வீடு
34. நாணயம் கூட்டத்து வீடு
3
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.