உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்..
கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு
மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).
கரிகாலனும்
மலையமான்
மன்னவனும்.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது.
கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார்.
கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான்.
இங்கு மலையமான் பகைகொண்ட வேளிர்களில் சேர்க்கப்படவில்லை. கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார்.
டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே.
சோழனின் கிளைக்குடி என்று கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே,அவையாவனமலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும்.
சேதிராயர் என்பதை மட்டுமே சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க சோழரின் சொந்தமென உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு ராஜராஜனுக்கும் முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி.
உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.
முள்ளூர் அரசனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தனது கோட்டை வாயிலில் புலியின் சின்னத்தைப் பதித்திருந்தான் என புறநானூற்றில் 174 வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படியாயின் பங்காளிகள் என்றே பொருந்தலாம்.
உடையார் பட்டம் உள்ளோர் எல்லாம் உடையார் அல்ல.
ஆதியிலிருந்தே பார்க்கவ குலம் பெருமை வாய்ந்த சமூகமாக இருந்துள்ளதால் இந்த உடையார்,நயினார்,மூப்பனார் என்ற பட்டங்களை பிற சமூகங்களும் குலப்பெருமை வேண்டி,குறிப்பாக வன்னியர்கள், பிள்ளைமார்,முதலிமார் போன்ற வேளாளர்கள்,குயவர்கள்,முத்துராஜாக்கள்,கவுண்டர்கள் போன்றோர் சூட்டிக்கொண்டு அவரவர் ஜாதிப் பழக்கங்களையே கையாண்டுள்ளனர் .என்றொரு குறிப்பும் கிடைக்கிறது.
உடையார் என்ற பட்டம் வேளிர் வம்சத்தையே நேரடியாக சுட்டும். ஆதாரப்பூர்வமாக குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருடமாக சுத்தத்தமிழ் ஜாதி உடையான்கள் பார்க்கவ குலம் மட்டுமே.
சோழருக்கு உரிமை கோரும் ஆதாரமற்ற அசிங்கமான ஆசைகள் எல்லாம் எங்களுக்கில்லை.ஆயினும் சோழர்களோடு தொடர்புடைய மிக நெருங்கிய ஆதாரங்கள் எங்களிடம் இன்னும் கூட நிறையவே உண்டு.மேலும் ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி எங்கள் பார்க்கவ வம்சத்து மலையமானின் மகள் என்பது நிரூபணமான வரலாற்று ஆதாரங்கள் கொண்டது.எங்கள் ரத்தத்தில் சோழனுக்குப் பிறந்த உடையார் ராஜராஜனின் வீரத்தை ஒத்த,பெருமையை நிகர்த்த இந்திய அரசர்கள் அவனுக்கு முன்னர் யாருமில்லை என்ற பெருமை போதும்.ராஜராஜனைப் பெற்றெடுத்த தாய் வம்சம் நாங்கள் என்ற பெருமை ஒன்றே போதும்.
சேர வம்சத்து மலையமானின் வேளிர் குலத்துதித்த வரம் ஒன்றே போதும்.
சோழர்கள் யாரென்று நிரூபிக்கவே முடியாது ஆகவே சோழர்கள் தங்கள் இனம் என்று கூறுவது யாராயினும் ஆதாரமற்ற துணிந்து கூறும் பொய்யாய் மட்டுமே இருக்க முடியும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.