Monday, June 18, 2018

திருவிதாங்கூர் மறவர் படை

Travancore Maravar Army - A historical views with evidences
==============================================


மார்த்தாண்ட வர்மா

திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)




ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும்கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார்.

ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்குஎதிராகவே கலகம் செய்தனர்.(2)

நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர்.(3)

திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவைமுற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார்.(4)


தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர்இது திருவிதாங்கூர்படையில் புதியதொரு சகாப்தத்தை ஏற்ப்படுத்தியது.(5)




குறுகிய காலகட்டதிலேயே பெரும் அளவில் நன்கு போர் பயிற்சி உடைய மறவர்கள் படையில்சேர்க்கப்பட்டனர். (6)




மறவர்கள் நாய்க்கர் போல் அல்லாமல் மன்னருக்கு விசுவாசமனவராய் இருந்தனர்மிகுந்த ஒழுக்கம்உடையவராகவும்அதித போர் திறமையுள்ளவராகவும் மறவர்கள் திகழ்ந்ததால் மன்னர் அவர்களைஎல்லைப்பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கச்செய்தார்.(7)


நாயக்கர் படை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வெளியேறுமாரு ஆணையிடப்பட்டுமறவர்கள் நிலையான இராணுவமாக ஆக்கப்பட்டனர். (8)


மார்த்தாண்ட வர்மருக்கு முன் அரசாண்ட அரசரின் வாரிசுகள் அவருக்கு எதிராக கலகம் செய்தனர்.எட்டு வீட்டு பிள்ளைமார் மற்றும் மடம்பினர் ஆகிய கிளர்ச்சி அமைப்புகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்(9)

அரசர் பல நவீன ஆயுதம் தாங்கிய (Fire - arms) மறவர் படைப்பிரிவுகள் மற்றும் கோட்டைகள் உருவாக்கிகிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தினார்.(10)



எட்டு வீட்டு பிள்ளை என்ற நாயர்களின் கிளர்ச்சி அமைப்பை அடக்க திருவிதாங்கூர் அரசருக்குபெரிதும் உதவியர் சிங்கம்பட்டி மன்னர்சிங்கம்பட்டி மன்னரின் மகன் தலமையில் பெரும் மறவர் படைஒன்று திருவிதாங்கூர் சென்று மிக திறமையாக போர் செய்ததுஇந்த போரில் சிங்கம்பட்டி மன்னரின்மகன் வீர சொர்கம் அடைகிறார்சிங்கம்பட்டி சமஸ்தானத்தை கவுரவிக்கும் வகையில் பல்வேறுவிதமான விருதுகளும் பரிசுகளும் திருவிதாங்கூர் மன்னரால் சிங்கம்பட்டி மறவர்களுக்குவழங்கப்பட்டதுஇந்த போரில் பங்கேடுத்த பல்வேறு மறவர் குடும்பங்கள் இன்றும் சிங்கம்பட்டிசமஸ்தானத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்)



காயம்குளம் அரசர் மற்றும் அவரது உறவினரான கொல்லம் அரசரும் சேர்ந்து கொண்டு திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் பகுதிகளை தாக்கினர்.(11)

பல்வேறு போர்களுக்கு பின்னும் காயம்குலம் படைகளை வீழ்த்தமுடியாத நிலையில் அரசர் மீண்டும்ஒரு பெரும் மறவர் படைப்பிரிவை நிர்மாணித்தார்இந்த படைப்பிரிவுக்கு தலைமை வக்கித்தவர்திருக்கருங்குடி காவல் தலைவரான பொன் பாண்டிய தேவர்.(12)




1000 நபர்கள் அடங்கிய குதிரைப்படையை பொன் பாண்டி தேவர் தலமை 
தாங்கினார்.(13)




தொடர்ந்து நடைபெற்ற போரில் டச்சுக்காரர்கள் காயம்குலம் அரசர்க்கும் கொச்சி அரசர்க்கும் உதவினர்.டச்சுகரகள் வடக்கு பகுதியில் முழுவதும் வீழ்த்தப்பட்டனர்மொத்தபடையும் வடக்கில் இருக்கும்போது எதிர்பாரத விதமாக தெற்கில் டச்சுபடைகள் தக்கினர் குளச்சல் உள்ளிட்ட பகுதிகள் அவர்கள்வசம் சென்றதுமன்னர் மீண்டும் தெற்கு நோக்கி படைகளை நகர்த்தினார் குளச்சல் யுத்தத்தில் டச்சுபடைகள் முழுவதும் வீழ்த்தப்பட்டது.(14)


இறுதியாக டச்சுக்காரர்கள் தங்கள் வசம் இருந்த சிறு அரசர்களை மார்த்தாண்ட வர்மரின்ஒப்படைத்தனர்மறவர்களை அடித்தளமாக கொண்ட மார்த்தாண்ட வர்மரின் இராணுவத்தைடச்சுக்காரர்கள் தவிர்க்க முடியாததாக எண்ணினார். (15)




கொல்லம் போரில் திருவிதாங்கூர் படைகளை தடுத்து நிறுத்திய ஒரு பெரும் முதலையை ஒரு மறவர்தளபதி வெட்டி வீழ்த்தியது பற்றி ஒரு குறிப்பு ஒரு வரலாற்று நூலில் கூறப்படுகிறதுதொடர்ந்துமுன்னேரிய அந்த மறவர் தளபதியின் உதவியல் திருவிதாங்கூருக்கு பெரும் வெற்றி கிடைக்கிறது.கொச்சி அரசனின் தலையை வெட்டிய அந்த தளபதி போர் முடிந்த பின் கொச்சி அரசரின் தலையைதிருவிதாங்கூர் மன்ன்ர் முன் போடுகிறார்.இந்த 
செயலுக்கு அரசரால் பெரும் சன்மானம் வழங்கப்படுகிறதுஅந்த தளபதியின் வம்சாவழியினர் இன்றுவரை அந்த சாலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். (16)






தனக்கு சிக்கல் ஏற்படும் போது தொடர்ச்சியாக மறவர் படையை ஏற்படுத்தினார் அரசர் மார்த்தாண்டவர்மாமறவர்களின் குதிரை படை அனைத்து போரிலும் முக்கிய பங்கு அற்றியது.இதன் மூலம்தன்னுடைய ராணுவத்திற்கு பலமுல்ல அடித்தளத்தை அமைத்தார் மார்த்தாண்ட வர்மா.(17)





(பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளதுஅயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? ( இது குறித்தகூடுதல் விவரம் தேடப்பட்டு வருகிறது)

கேரள அரசாங்கம் இது பற்றி பல நூல்களில் ஆவனப்பட்டுத்தி உள்ளதுஅவர்கள் காவல்துறையின்அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே குறிப்பிட்டு உள்ளனர்.

http://keralapolice.gov.in/kerala-police/history/police-in-ancient-kerala





நம்மவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா குளச்சலில் இருந்த பொன் பாண்டித்தேவரின் சமாதியைஅப்புறப்படுத்தி உள்ளனர்நம்மவர்களிடம் வேறு எதை எதிர்பார்ப்பது??

இன்றய மெட்ராஸ் ரெஜிமெண்ட் (Madras Regiment) திருவிதாங்கூர் படையில் இருந்துஉருவாக்கப்பட்டது தான்நாயர்கள் மட்டும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறார்கள்மறவர்கள்?
இழந்தது ஆயிரம் அதில் இதுவும் ஒன்று.




அடிக்குறிப்புகள்:
==================
1,4,9,10,11,14)The Travancore state manual by Travancore (India) - V. Nagam Aiya
2,5,7,8,12)Military Under Marthanada Varama and Rama Varma
3,6,13,15)Malabar And The Dutch by K. M. Panikkar
16)Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society, 1700-1900 Susan Bayly

நன்றி: திரு.கார்த்திக் தேவர்

Saturday, May 5, 2018

மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்


கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என   அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள்
மிகவும் பிரசித்தம் .

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.


இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.
 




 


 காலங்காலமாக மதுரையில் வாழும் மறவர்  மக்களும் இதர  போலவே மீனாட்சி  திரு கல்யாண விழாவிலும்
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில்  கலந்து கொள்வார்கள்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மறவர் மண்டகப்படிகள்:

மதுரை தெற்கு மாசி  வீதி மறவர் மக்கள் மக்கள் இராமநாதபுறம் சேதுபதி மன்னர் மண்டகப்படி  சிவகங்கை அரசர் மண்டகப்படிகள் மீனாட்சி திரு கல்யாண வைபவத்தில் 6  ஆம் நாள்  திருவிழா  ரிஷப வாகன ஊர்வலம்,9 ஆம் நாள்   திருவிழா இந்திரா விமான ஊர்வலம் 11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும் சேதுபதி மன்னர்களுக்கும் சிவகங்கை அரசர்களுக்கும் பாத்தியப்பட்டதாகும்.

6  ஆம் நாள்  திருவிழா  ரிஷப வாகன ஊர்வலம்


9 ஆம் நாள்   திருவிழா இந்திரா விமான ஊர்வலம்


 11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும்



அழகர் வந்திறங்கும் மண்டகப்படிகள்:








 அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் சுந்தரராஜன் பட்டி மறவர் மண்டபம்  பிரசத்தியாகும் இதை தவிர

சேதுபதி அழகர் மண்டகப்படி  மிகவும் பிரசித்தம். இந்த மண்டபம் திருமலை நாயக்கரையும் மதுரையையும்
காத்த இரகுநாத சேதுபதியின் நினைவாக கட்டப்பட்டது .

மூக்கறு போர்

இது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது.

கந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர்..

மூக்கறு போர் மண்டபம்

இந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது. இது தான் அழகர் வந்திறங்கும் சேதுபதி மண்டபம்.












கள்ளழகர் வைகை ஆற்று திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர், தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு இரவில் எழுந்தருள்வார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் காலையில் அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்படுவார்.

https://www.youtube.com/watch?v=VWxOzUQ6NIg&feature=youtu.be

இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான தேவஸ்தான மண்டகப்படியில் எம்பெருமான் ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு சிறப்பு பூஜை இராமதபுரம் மகாராஜா திருமிகு. குமரன் சேதுபதி அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் தேவஸ்தான,சமஸ்தான தர்மகர்த்தா இராணி R B K இராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் சமஸ்தான திவான் திருமிகு.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ்ராவ் அவர்களும், வெள்ளியங்குன்றம் ஜமின் அவர்களும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அகர்வாள் அவர்களும்,தேவஸ்தான,சமஸ்தான கண்காணிப்பாளர் திரு.விக்னேஷ்  அவர்களும் மற்றும் பல்லாயிரக்கணக்காணபொதுமக்களும் கலந்துகொண்டு ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு உற்சவம் சிறப்பாக
நடைபெற்றது.....

பெரிய மறவர் நாடு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மதுரை மண்டகப்படி யில் கள்ளழகர் அவர்களுக்கு 68 வகையிலான மூலிகைகள் மற்றும் பால் பன்னீர் புஷ்பங்கள் பழங்கள் சந்தனம் தேன் கல்கண்டு தயிர் மஞ்சள் தீர்த்தம் இவைகளை கொண்டு சிறப்பு அபிசேகம் செய்து சிறப்பாக பூசைகள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சக்கரை பொங்கல், தக்களி, தயிர், புளிசதாங்கள் அரண்மனை சார்பில் வழங்கப்பட்டது 5 லட்சம் மேல் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருளை பெற்று சென்றனர்......

நன்றி:
கார்த்திக் தேவர்