Monday, November 17, 2025

தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் மறவர் போர் இலக்கனம்

 


மூலம்:

ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.

 பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும்.  நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது.  நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும்.  கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.  ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) நடுகல்லின் மூன்றாவது கட்ட மாகும்.  கைவிடப்பட்டு இறந்த மறவர் நினைவாகக் கல் நடப்படுகிறது.  இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இரண்டாவது நூற்றாண்டு ஆகும்.நான்காவது வளர்ச்சி நிலையில் கல்லின் உயரம் குறைந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள் உருவாகின்றன.  இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு ஆகும்.  வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை ‘எழுத்துடை நடுகல்’ என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரும் நடுகல் நடும்போது,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்”

என்று (புறத்திணையியல்: 5) நடுகல் நடுவது தொடர் பான சடங்குகளை வரிசைப்படுத்திக் கூறுகிறார்.  இந்நூற்பாவிற்கு உரை எழுதியோர் மூலமரபை அறியாது உரையெழுதியுள்ளனர்.  உருவம் அல்லது எழுத்து பொறிப்பது குறித்து எதுவும் தொல்காப்பியர் கூறாத நிலையில் இறந்தவனின் உருவத்தைக் கல்லில் பொறிப்பது குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.  பெருங் கற்கால (மெகலத்திக்) நினைவுச் சின்னங்கள் வாயி லாகக் கிடைத்துள்ள சான்றுகளும், இன்றும் நடை முறையிலுள்ள சில இறப்புச் சடங்குமுறைகளும் பின்வரும் விளக்கத்திற்குத் தூண்டுகின்றன.

இறந்தவனைப் படுக்க வைத்தல் காட்சியாகும்.

ஐம்பூதங்கள் அவ்வுடலை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது கால்கோள் ஆகும்.  மற்றொரு வகையில் ஐம்பூதங்களுடன் இணைதல் என்பதைக் குறிப்பதாகும்.  தேர்ந்தெடுத்த சில எலும்புகளை நீரால் தூய்மைப்படுத்தல் நீர்ப்படையாகும்.  அவ்வாறு நீராட்டப்பட்ட எலும்புகளின் மீது கல்லை நடுதல் நடுகல் ஆகும்.அக்கல்லின் முன்னால் சோற்றுத் திரளையைக் குவித்து வைத்தல் பெரும்படையாகும். நடப்பட்ட கல்லின் முன் அதைப் புகழ்ந்து பாடியாடுதல் வாழ்த்துதல் ஆகும்.போர்க்களத்தில் இறந்த வீரர்களின் நினை வாகவே நடுகற்கள் நடப்பட்டுள்ளன.  ஆநிரை கவர்தலுடன் அல்லது கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்டலுடன் தொடர்புடையதாகவே இப்போர்கள் பெரும்பாலும் அமைந்தன.  புலி போன்ற கொடிய காட்டு விலங்குகளுடன் போரிட்டு மரணமடைந்தோருக்காகவும் நடுகற்கள் நடப் பட்டன.  உடன்கட்டை ஏறிய பெண்களுக்கும் பொது நன்மைக்காக உயிர்துறந்தவர்களுக்கும் நடுகற்கள் நடப்பட்டன.

நடுகல்காட்டும் சமுதாயம்

நடுகற்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் மேய்ச்சல் நில வாழ்க்கையைக் கூறும் முல்லை நிலத்துடன் தொடர்புடையனவாய் பெரும்பாலும் உள்ளன.  கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பதின் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முல்லை நிலத்துடன் தொடர்புடையனவாய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகற்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் அதிகமானவை மலையை ஒட்டி யுள்ள நிலப்பகுதிகளிலேயே கிட்டியுள்ளன.  ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளிலும் கடற்கரைப் பகுதி களிலும் அரிதாகவே காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நடுகற்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வட்டெழுத்து வரி வடிவிலேயே எழுதப்பட்டுள்ளன.  கி.பி. எட்டாவது நூற்றாண்டிற்குப் பிந்தைய கல்வெட்டுக்கள் தற் போதைய தமிழ் எழுத்து வடிவிற்கு மாறியுள்ளன.சாளுக்கியர், கங்கர் ஆகியோருடன் பல்லவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளனர்ஆனால் அவர்களது படையெடுப்பின்போது இறந்துபோன படை வீரர்களை நினைவுகூரும் வகையில் நடுகற்கள் எழுப்பப்படவில்லை.பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த பெண்ணையாற்றின் நடுப்பகுதியில் இவை மிகுதி யாகக் காணப்படுகின்றன.  இப்பகுதி மேய்ச்சல் நிலப்பகுதியாகும்.

பல்லவமன்னர்கள், தம் கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டையங்களிலும் தமிழ் எழுத்தையும் வளர்ச்சி பெற்ற கிரந்த எழுத்தையும் பயன்படுத்தி யுள்ளனர்.  தமிழ் எழுத்தின் முந்தைய வடிவமான வளர்ச்சி பெறாத வட்டெழுத்து வடிவத்தைப் பயன் படுத்தவில்லை.  அவர்கள் ஆளுகையின் கீழிருந்த பொதுமக்களோ வட்டெழுத்து வடிவத்தையே பயன்படுத்தியுள்ளனர்.கவிதைகள், காப்பியங்கள், இலக்கணங்கள், ஆகமங்கள், புராணங்கள் ஆகியன சராசரி மனிதன் மீது அதிகக் கவனம் செலுத்தவில்லை.  இதற்கு மாறாக நினைவுக் கற்களில் தம் வட்டார மொழி யையும் வட்டெழுத்து வடிவையும் மக்கள் பயன் படுத்தியுள்ளனர்.

அரசியல் சார்ந்த போர்களைச் சில நடுகற்கள் மட்டுமே குறிப்பிடுகின்றன.  பெரும்பாலான நடுகல் கல்வெட்டுக்கள், உள்ளூர்ப் பூசல்களையும், ஆநிரை கவர்தல் தொடர்பான போர்களையும் குறிப்பிடு கின்றன.  போருக்கு முந்தைய அடிப்படை நடவடிக் கையாக ஆநிரை கவர்தலைச் சங்க மரபுகள் குறிப்பிட இதை ஆதரிக்கும் போக்கு நடுகற்களில் காணப்படவில்லை.

பல்லவர் ஆட்சிப்பகுதியில் இந்நடுகற்கள் உருவானாலும், இப்பகுதியில் நடந்த போர்களில் பல்லவர்கள் நேரடியாக ஈடுபட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இந்நடுகற்களில் இல்லை.  தம் ஆட்சிப்பகுதியின் பரப்பளவை நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டுமே பல்லவ மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.  உள்நாட்டுப் பகுதியின் சமூக வாழ்வில் அவர்கள் தலையிடவில்லை.  வட்டார அளவிலான ‘நாடு’ என்ற பிரிவின் தலைவர்களுக் கிடையில் ஆநிரை கவரும் போர்கள் நிகழ்ந்துள்ளன என்பதை நடுகல் கல்வெட்டுக்கள் உறுதி செய் கின்றன.

நினைவுக்கற்கள் உள்ளூர் மக்களுடன் தொடர் புடையனவாய் உள்ளதால் வடமொழிச் சொற்கள் கலவாத வட்டார மொழியையே அவை பயன்படுத்தி யுள்ளன.  வடமொழிச் சொற்களைப் பயன்படுத்த நேர்ந்ததால் தமிழ் வடிவிலேயே அவற்றைப் பயன் படுத்தியுள்ளனர்.  ஆநிரை மந்தையைக் குறிக்க ‘தொறு’ என்ற சொல் பதிற்றுப்பத்தில் (13:1) இடம் பெற்றுள்ளது.  இச்சொல்லே நடுகற்களில் இடம் பெற்றுள்ளது.  கர்நாடகம், ஆந்திரப் பகுதிகளில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுடன் கூடிய நடு கற்களிலும் ‘தொறு’ என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.  செங்கம் பகுதியில் உள்ள நடுகற் களிலும் ‘தொறு’ என்ற சொல் காணப்படுகிறது.ஆநிரையைக் குறிக்கும் ‘தொறு’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக ‘நிரை (கூட்டம்) என்ற சொல் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.  நிரை என்ற சொல்லும் நடுகற்களில் இடம்பெற்றுள்ளது.  தொடக்கத்தில் ‘தொறு’, ‘நிரை’ என்ற இரு சொற்களும் விலங்குக் கூட்டத்தைக் குறிக்கும் சொற்களாக இருந்துள்ளன.  இதனால் ஆன்தொறு (பசுக் கூட்டம்) மறிதொறு (ஆட்டுக் கூட்டம்) எருமை தொறு (எருமைக் கூட்டம்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.  பின்னர் ‘தொறு’, ‘நிரை’ என்ற இரு சொற்களும் மாடுகளை மட்டுமே குறிப்பதாயின.

தம் காலத்தில் நிலவிய அரசியல் அல்லது சமூகப் படிநிலையை நடுகற்கள் உணர்த்துகின்றன.  ‘பருமர்’ (வர்மன்), ‘அரைசர் ‘சேவகன்’ என்ற சொற்கள் நடுகற்களில் இடம்பெறுவதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.  மன்னர்கள் பருமர் என்றும், குறுநில மன்னர்கள் அரைசர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளனர்.  சான்றாக, சிம்மவர்மன் என்ற  பல்லவ மன்னன் சிங்கவின்னப் பருமர் என்றும், பாணர் என்ற மக்கள் பிரிவின் தலைவன் அரைசர் என்றும், நினைவுக் கல்வெட்டில் பூசலில் கொல்லப் பட்ட மறவன் ‘சேவகன்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளான்.ஆநிரை கவர்தலில் அரைசர் ஈடுபட்டது குறித்து ஏராளமான பதிவுகள் உள்ளன.  ஆனால் அச்செயலின்போது அவர்கள் கொல்லப்பட்டமை குறித்த பதிவுகள் இல்லை.  ஆநிரைகளை மைய மாகக் கொண்ட போர்களில் சேவகர்களே பெரும் பாலும் இறந்துள்ளனர்.

சங்ககாலத்தில் மன்னர்களும் போரில் நேரடி யாக ஈடுபட்டுப் போர்க்களச் சாவை எதிர்கொண்டனர்.  இதனால் இவர்கள் நினைவாக நடுகற்கள் நடப் பட்டன.  சங்ககாலத்தில் தகடூர் நாட்டையாண்ட அதியமானுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது.  ஆனால் சங்ககாலத்துக்குப் பின் போர்க்கள இறப்பிற்காக ஒரு நினைவுக்கல் கூட எழுப்பப்படவில்லை.  இம் மாறுதலானது சமூகப் படிநிலை, தகுதி ஆகிய வற்றின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது.

சங்ககாலத்தில்தான் ஆளும் சமூகத்தின் உறுப்பினனாக ஆளுவோன் இருந்தான்.  சமூகத் தினரின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றே ஆநிரை கவர்தல்.  பிற்காலத்தில் சமூகத்தின் மேல் நிலையில் உள்ளவனாக ஆளுவோன் கருதப்பட்டான்.  எனவே அவனது நேரடிப் பங்கேற்பென்பது தேர்ந் தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமேயிருந்தது.சங்க காலத்தில் ஆநிரை கவர்வோருக்கும், அதை மீட்போருக்கும் நடுகற்கள் நடப்படவில்லை.  சங்ககாலத்திற்குப் பின் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்கும் முயற்சியில் இறந்தோருக்கு மட்டுமே நடுகற்கள் நடப்பட்டன.

கிடைத்துள்ள 317 நடுகற்களைப் பட்டியலிட்ட போது அவற்றுள் 214 நடுகற்கள் ஆநிரை கவர்தலை மையமாகக் கொண்டு நிகழ்ந்த பூசலில் கொல்லப் பட்டோருக்கு நடப்பட்டுள்ளன.  எஞ்சிய எழுபத் தைந்து நடுகற்கள் காலத்தால் பிற்பட்டவை, வேட்டையின் போது இறந்தோர், தம்மைத் தாமே பலிகொடுத்துக் கொண்டோர், உடன்கட்டை ஏறியோர் ஆகியோருக்கும், வளர்ப்புப் பிராணி களுக்கும் நடப்பட்டவையாகும்.317 நடுகற்களில் 180இல் மன்னர்கள் அல்லது மன்னர் மரபு குறித்த பதிவுகள் உள்ளன.  இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

பல்லவர்: 86, சோழர்: 4, கங்கர் 26, நுளம்பர்: 11, பாண்டியர்: 4, விசயநகரம்: 4, பாணர்: 2, ராஷ்டிர கூடர்: 1 ஹொய்சாளர்: 1

தமிழக நினைவுக் கற்களை அவற்றால் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தின் வரிவடிவம், அவை அமைக்கப் பட்டதன் நோக்கம், உள்ளடக்கம், உருவ அமைதி ஆகியனவற்றின் அடிப்படையில், முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டாகப் பகுக்கலாம்.

தமிழக இலக்கியங்களில் புறப்பொருள் இலக்கணங்களில் கூறப்பட்ட மறவர்களின் போர்களும் பின்னாட்களில்

சோழ,சேர,பாண்டிய மற்றும் இதர மன்னர்களின் கல்வெட்டுகளில் கானப்படும் போர்களும் ஒன்று என்றும்

அதுவும் மறவர்களையே சுட்டுகிறது என கூறுகிறார்.





தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கணம் என்பது புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்களில் கூறப்படும்

புறப்பொருள் கருத்துக்களை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு ஆராய்வதாகும்.

கல்வெட்டுகளில் போர்வீரம்கொடைவெற்றி போன்ற புறப்பொருள் சார்ந்த செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

 அவற்றை புறப்பொருள் இலக்கண நூல்களில் உள்ள கருத்துகளுடன் பொருத்திப் பார்ப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

 



புறப்பொருள் இலக்கணம்:

புறப்பொருள் என்பது வீரம்போர்வெற்றிகொடைதூதுநிலையாமை போன்றவற்றை குறிக்கும்புறப்பொருள் இலக்கண நூல்கள்,

 புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள்புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கூறுகின்றன.

 

கல்வெட்டுகளில் புறப்பொருள்:

 

தமிழ் கல்வெட்டுகளில் போர்வீரம்கொடைவெற்றி போன்ற செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாகநடுகற்களில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரதீர செயல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதேபோல்கொடை வழங்கிய செய்திகள்கோயில்களுக்கு நிலம் தானம் செய்த செய்திகள் போன்றவை கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

சில கல்வெட்டுகளில்அரசர்களின் வெற்றிகள்போர் செய்திகள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

புறப்பொருள் இலக்கணம் மற்றும் கல்வெட்டுகளின் தொடர்பு:

புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்களில் கூறப்படும் புறப்பொருள் கருத்துக்களை கல்வெட்டுகளில் உள்ள செய்திகளுடன் ஒப்பிட்டு

ஆராய்வதன் மூலம்புறப்பொருள் இலக்கணம் அக்கால தமிழர்களின் வாழ்வில் எந்த அளவுக்கு பின்பற்றப்பட்டது என்பதை அறியலாம்.

எடுத்துக்காட்டாககல்வெட்டுகளில் கூறப்படும் போர் செய்திகளை புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் இலக்கணத்துடன் ஒப்பிட்டு,




அக்கால போர் முறைகள் மற்றும் போர் பற்றிய கருத்துக்களை புரிந்து கொள்ளலாம்.இதுபோன்ற ஒப்பீடுகள் மூலம்புறப்பொருள் இலக்கணம் வெறும் இலக்கிய நூல்களில் மட்டும் அல்லாமல்அக்கால மக்களின் வாழ்விலும்நடைமுறைகளிலும் இடம்பெற்றிருந்ததை அறியலாம்பெருந்தெய்வ கோவில்களில் வழிபடும் சிலைகளுக்கு எவ்வாறு சிற்பவியல் இலக்கணம் இருந்ததோ,அதேபோன்று நடுகல்லிற்கும் இலக்கணம் வகுக்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

 

கல்வெட்டுகளும் போர்தொடக்கமும் எனும் நான்காம் இயலில் வெட்சி,கரந்தை தினை செய்திகள் விரிவாக ஆராயபட்டுள்ளனமறவர்கள் தாமே சென்று நிரைகவரும் தன்னூறு தொழில் நடுகற்கல்வெட்டுச் செய்திகளில் அமைத்துள்ளமை குறிக்கதக்கது.

ஆகோள்,பூசன்மாற்று என்னும் வெட்சி தினை துறைகளும் வாள் வாய்த்து கவிள்தல் எனும் கரந்தை தினைத்துறைகள் கல்வெட்டுகளில் விளக்கமுறுகின்றனமறவர்கள் நடுகற்களில் எல்லா நிலைகளிலும்

நடப்பட்டுள்ளனர் அவர்தம்  பீடும் பெயரும் நடப்பட்டுள்ளன அவர் தம் பீடும் பெயரும் பொரிக்கபட்டுள்ளனர்.

 


 

போருக்குரிய கொள்கைக்குள் அறச்சிந்தனை முதலிடம் களிறு,குதிரை,தேர்,காலாள்(மறவர்எனும் நான்வகை படைகளினால்

அமைதல் ஆகியவை மறவர்குரியதாகும்.

 

போரின் போது பார்ப்பானர் பெண்டிர்,குழந்தைகள் போக

குடிமக்கள் மற்றும் இடைக்குடிகள் ஆகியோரை அழிக்க கூடாது

என்பது மன்னரின் அறமாகும்.

அதன்படி ஒரு கல்வெட்டில்,

"நாங்கள் பகைகொண்டு எய்யுமிடத்து எங்கள்

காவல் ஆன ஊர்கள் வழிநடைக்குடி மக்கள் இடைக்குடி மக்கள் இவர்களை அழிவுசெய்யக்க கட்வோம்ல்லவாகவும்".....

 

இடதில் இடைக்குடி மக்கள் இடையர் எனும் இனத்தோடு

கூறபடுகிறது.

 

நிறைகவரும் மறவர்கள்:

ஆநிறைகவர்தலையே தொழிலாக கொண்ட கூட்டத்தினர் தமிழகத்தில் வாழ்ந்தனர்.இவர்களுக்கு ஆநிறை கவர்தலும் கொலையும் போரையுமே தொழிலாக

இருந்த இவ்வீர இனத்தாரே தமிழகத்தின் ஆநிரை காப்பாளரான ஆயரோடு போரிட்டு துன்பம் விளைவித்தவராகலாம் வீரத்தில் சிறந்து விளங்கிய இவர்கள் மறவர்கள் என அழைக்கபட்டனர்.

"விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்"

"விளையம்பின் விழுத்தோடை மறவர்'

"விழுத்தொடை மறவர் வில்லிட தொலைந்தோர்"

 

மறவர்கள் காவல் தொழிலையும்,போர் வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் விளங்கியமை அறிகிறோம். 

போரில் வீழ்ந்த மறவர்கள் நடுகல்லின்கண் மறவனை நடுதல் என்றும் இருவகையான விளக்கம் கூறுவார் நச்சினார்கினியர். 

"கல்லினை நடுதல்என்பதற்குச் சான்றுகளாக நடுகற்கள் அனைத்தும் அமைந்துள்ளன.கல்லிண்கண் மறவரை நடுதல்

என்பதற்க்கு அக்கல் மறவனது கல் ஆதனால் கருதி சிறப்பு செய்து

மறவனை அருவமாய் நிலைபெறச் செய்தல் அவர்கள் வாழ்ந்த

காலத்தில் எப்படி உனவளிக்கபட்டது போலவே அவர்கள்

இறந்த பின்னரே உணவு படைத்தனர் நடுகல்லான பின்னரும்.

 

மறவனின் உருவத்தை புடைப்போவியமாக பொறித்தலும்

கம்பீரமும் போர்க்குணமும் விளங்க நிற்கும் வகையில் நடுகல்

அமைக்கபடும் என நச்சினார்கினியர் கூறுகிறார்.

 

 

 

மன்னர் தோற்று வீழ்தலும் யானை வீழ்தலும் உடனிகழ்ச்சியாயிருத்தலை தொல்காப்பியர் தன் இலக்கனத்தில் கூறியுள்ளார்.

 

ஆதித்த கரிகாலன் ஆனைமேல் துஞ்சின தேவர் எனும் சிறப்பிக்கபட்டமையை இம் மன்னன் யானைப் படையை அழிப்பதில் பெரும்புகழ் பெற்றிருந்தான் என்பதை கரிகாலன் என்னும் இவனது

சிறப்பு பெயர் காட்டும்.

 

இவ்வாறு களிற்றோடு மன்னன் படுதல் என தொல்காப்பியர் பின்னர்

ஐயனாரிதனார் களீற்றுடனிலை எனுமொரு துறையை கூறினாரேனும் அதனை மறவர்க்கு உரிய துறையாக்கினார்இத்துறைக்கு "களிற்றெரி தெறிந்தோர் பாடு"...





கல்வெட்டுகளும்  போர்நிகழ்ச்சி துறைகளும் வஞ்சி,உழிகை,தும்பை

நிலைகள் பற்றிய விளக்கம்,காஞ்சி தினை மானப்போர் எனும் அளவிற்கு

இடம்பெற்றமை குறிக்கதக்கது. "கல்வெட்டுகளும் போர்விளைவுத் துறைகளும்எனும் ஆறாவது இயல் கீர்த்தி ஆகும்வெற்றிக்கு பின்

"கொற்ற நாள்கணக்கிடப்பட்டமையும் போர் முடிந்த பின்னர் கொற்றவையை வாழ்த்துவது வழிபடுவதும் மன்னர்கள் மக்களை பாராட்டியும் உயிர்த்தியாகம் எனும் அவிப்பலியாகௌம்மன்னரும்

மறவர்களும் கொற்றவையை வழிபட்டனர்.

மறவனோடு மாடுகளை பொறித்தல்(கி.பி102]

வீரனின் உருவத்தை கல்லில் பொறிக்கும்போது அவன் கல்லானதற்க்கு மாடுகளையும் பொரித்தனர்இக்கல்வெட்டுகளில் தொறு என்னும் தொகைப் பெயரைக் காணலாம்இது பொதுவாகக் கூட்டத்தை குறிக்குமாதலால் ஆநிரையோ அன்றி எருமை தொறுவ என அறிய  இயலவில்லைஆனால் கல்வெட்டில் வீரனின் கால் அருகே இரு பசுக்கள் பொறிக்கபட்டுள்ளதால் தொறு.

 

மறவனோடுநாயுரு பொருத்தல்[கிபி 102]

ஆநிரை காரனமாக கல்லாயினான் என்பது விளங்க பசு உருவங்களைக் கல்லில் பொறித்தது போலவே,மறவனோடு உறுதுனையாயிருந்து போரிட நாய்களையும் நன்றியோடு பொரித்து வைத்துள்ளனர்போர்கள்த்தில் த்லைவனோடு இருந்த புறங்காட்டாத நாய்க்கு உருவமைத்து பாராட்டதக்கது.





மறவனோடு புலி பொறித்தல்(கிபி 101]

வீரனை புலியோடு இயைந்து காண்பது இலக்கியப் பாங்கு வீரத்திலும் பாய்ச்சலிலும் பகைவரை வீழ்த்துவதிலும் புலியோடொத்த வீரன் புலியோடயே போர் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.வீரனொருவன் புலியை வேல் கொண்ட குத்தி வீழ்த்தி குறுவாலுடன் கை ஓங்கிய நிலையில் கல்வெட்டில் பொரித்துள்ளனர்.

 



மறவனோடு பன்றி பொறித்தல்[கிபி 101]

புலிகளை போலவே காட்டுப் பன்றிகளும் அச்சத் தருவனவாக இருக்க வேண்டும்அதனாலயே

பன்றியை குத்தி கொன்று இறந்த நிலையில்

இரண்டு பன்றிகள் வீரனை நோக்கி பாய்ந்து வருகின்ற நிலையை ஆறிய முடிகின்றது.

வீரன் ஒருவன் ஈட்டி ஒன்றை ஓங்கி நிற்க

கல்வெட்டு அமைக்கபட்டுள்ளது.





 மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871




இதில் சுந்தரபாண்டியத் தேவர் தனது படை மறவர்களை(மறமாணிக்கர்) பாடிய புலவர் ஒருவருக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை என பட்டம் வழங்கி அவருக்கு தூத்தூர் என்ற ஒரு ஊரினை பரிசாக வழங்கினார் என்ற செய்தி இங்கு கானக்கிடைகின்றது.இங்கு "மறச்சக்கரவர்த்தி" என்பது மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவரை குறிக்கும்.

                             
மறச்சக்கரவர்த்தி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் "பெருவஞ்சி" எனும் நூல் பற்றி பொன்னமராவதி கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு பரிசாக தூத்தூர் எனும் கிராமம் வழங்கப்பட்டது.இந்த படைபற்று தலைவர்களை தான் மறமானிக்கர் என்னும் மறவர் மானிக்கம் என அழைக்கபடுகிறது.
 One of the records of Maravarman Sunarapanya I found in the temple of Cholesvara at Pon-Amaraviati, Tirumayam Taluk, Tirchchirapalli District is dated in the 11+1st year (=1127-28 A.D.) It refers to the title Marachchakravarti-pillai conferred on Tiruvarankulam-udaiyar by the group of people called Maramanikkar of Ponnamarapati inn Puramalai-nadu for his reciting the Per-vanji and records the grant of tax-free lands for the purpose of reciting verses in praise of the rerumal (god) of this place. It may be inferred from the title borne by this chief that he must have belonged to the same group the Per-vanji which may be the same as Peru-vani is a theme describing the setting fire to an anemy's country as referred to in a Tamil grammatical work called Puraporrul -venba-malai.

I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில்

பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்,வெத்திவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993..................... வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக.....



 

ஆநிரைகவர்தல், ஆநிரைமீட்டல், படை யெடுப்பைத் தடுத்தல், நாட்டையும் தலைவனையும் பாதுகாத்தல், பெண்களைக் காப்பாற்றல், ஆகிய செயல்களில் உயிர்துறந்தோருக்கு நினைவுக் கற்கள் நடப்பட்டுள்ளன.  காட்டுப்பன்றி, புலி, யானை, மான், குதிரை ஆகிய விலங்குகளால் தாக்குண்டு இறந்தோருக்கும் நினைவுக் கற்கள் நடப்பட்டுள்ளன


தெருப்போரில் இறந்துபட்ட மறவனின் மனைவியும், கணவன் இறந்தபின் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு தானும் உயிர்விட்டு நடுக்கல்லாய் மாறியதும், கணவன் உயிர்விட்ட உடனே தானும் தீ பாய்ந்து உயிர் விட்டதும் இவர்களுக்கு உறவினர்கள் நடுகல் எடுத்து வணங்கியது பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகின்றது. இவை சதிக்கல் என்றும் வழங்கப்படுகின்றது.

கால்நடைகளை கவரவும், தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்தவும், பெண்ணின் மானத்தைக் காக்கவும், விலங்குகளிடமிருந்து ஊர்மக்களை காக்கவும், தம் அரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தன் கணவனுடன் உயிர் விட்ட மகளிரை போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டன. 

போரில் இறந்தவருக்கு நினைவு கற்கள் எடுக்காவிட்டால். தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் என பயந்தனர். எனவே, நீர்நிலைகள், மரத்தடி, இறந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்பினர். தற்போதும் ஒரு சிலர் எழுப்புகின்றனர்.

மனிதர்களுக்கு மட்டுமில்லாது விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடன் இறந்த அல்லது தன் உயிரைக் காக்க இறந்த குதிரை, நாய், யானை, கோழி போன்ற விலங்குகளுக்கு நடுகல் பல இடங்களில் எழுப்பட்டுள்ளதை நன்றி உணர்வின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் குதிரைக்காக எடுக்கப்பட்ட நடுகல் இவ்வாசிரியரால் கண்டறிப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினர். அதற்கேற்ப சடங்குகள் செய்யவும் வழிபடவும் முற்பட்டனர். உலகெங்கும் இப்பழக்கம் உருவாயிற்று. இறந்தவன் ஆன்மா நடுக்கல்லில் வருவதாக நம்பிக்கை ஏற்பட்டது. தொடக்க காலத்தில் நடுகற்களில் எழுத்தோ, உருவமோ இல்லை. தொல்காப்பியர் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடவில்லை. நடுகல்லை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே நீண்டகாலமாக இருப்பதை புறம் 263 பாடலில்,

“தொழுது போகவே கொடுங்கானம் மழை பெய்தலான் குளிரும் என்பான் வண்டு மேம்படுதலாகிய காரியம் கூறினான்

என கூறப்படுகின்றது. இன்றும் பல ஊர்களில் மழைக்காக வேண்டி நடுக்கற்களுக்கு விழா எடுப்பதை பார்க்கமுடிகின்றது.

வீரர்களுடைய நடுகற்கள் வழிபாடு பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்கள் தோன்ற காரணமாயிற்று.

நடுக்கல் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகளாக சங்ககாலம் முதல் தற்காலம் வரை கீழ்க்கண்ட செய்திகள் பதிவு செய்யப்படுகின்றது.

மேற்கோள் நூல்கள்:

1) புறநானூறு
2) அகநானூறு
3) தொல்லியல் முனைவர். க.ராஜன் 
4) இந்தியத் தொல்லியல் வரலாறு - அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
5) திருக்குறள் 
6) தினத்தந்தி நாளிதழ்

7)ஆசிரியர்பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.