Friday, January 2, 2015

6-ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு






https://www.dinamani.com/tamilnadu/2014/feb/12/6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-838338.html

செஞ்சி, பிப்.11: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, வரிவடிவத்துடன் கூடிய கி.பி. 6ஆம் நூற்றாண்டு கொற்றவை கல் சிற்பம் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எசாலம் கிராமத்தில், கல்வெட்டு பாடத்துடன் கூடிய அரிய கொற்றவை புடைச்சிற்பம், மதுரையைச் சேர்ந்த வேதாச்சலம், காந்திராஜன் மற்றும் விழுப்புரம் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி வீரராகவன் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களால் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
முதலாம் ராஜேந்திரச் சோழனின் இராஜகுருவான சர்வசிவ பண்டிதரால் எசாலம் திருராமநாத ஈசுவரர் கோயில் எழுப்புவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொற்றவை, அய்யனார் வழிபாடு இவ்வூரில் இருந்துள்ளது.
இந்த கொற்றவை (துர்கை) மற்றும் அய்யனார் சிற்பம், திருராமநாத ஈசுவரர் கோயில் தெற்குத் திருச்சுற்றுச் சுவருக்கு அருகிலுள்ள கணபதியார் கோயில் முன் நிறுத்தப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருந்து வருகின்றன.
கொற்றவை எண்தோள்களுடன் மகிடன் மீது நேராக நின்ற நிலையில் காணப்படுகிறார்.
வலது மேற்கரங்களில் சக்கரமும், அம்பு, நீண்டவாள், முன்கரத்தில் கண்டாமணி, இடக்கரத்தில் நாகமும் முன் இடக்கரத்தில் மணிக்கட்டுக்கு மேலாக கிளி ஒன்றும் அமர்ந்த நிலையில் உள்ளது.
கேசங்கள் தூக்கி அள்ளி முடிந்த நிலையில் காது, கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கால்களில் சிலம்புகளுடனும் சிற்பம் அமைந்துள்ளது. இது பல்லவர்கால சிற்பக்கலைத் திறனை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன.
இச் சிற்பத்தொகுதியில் இடப்பக்கம் சிறிய அளவில் மான் உருவமும், வலது பக்கம் வீரன் உருவமும் உள்ளது.
வீரனின் கால்களில் கீழ் இரண்டு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்தின் அமைப்பைக் கண்டு,
இச்சிற்பம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குரியது என ஆய்வாளர் சி.வீரராகவன் கூறுகிறார்.
ல்வெட்டு செய்தி: அக்காலத்தில் சமூகத்தில் பெருமக்கள், இளமக்கள் என்கிற இரு பிரிவினர்கள் வாழ்ந்துள்ளனர். கி.பி. 6-ம் நூற்றாண்டில் இளமக்கள் பிரிவை சார்ந்தவர்கள் எசாலத்தில், மக்கள் ஆன்மிகத்தில் சிறக்கவே கொற்றவை சிற்பத்தை நிறுத்தியதையே இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இத்தனை வரிவடிவங்களுடன் கூடிய கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சி.வீரராகவன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.