Friday, December 20, 2013

இந்தியாவிலும், இன்காவிலும் ஒரே சூரியக் கடவுள்.

விரோசனன் என்னும் பெயர் புராணத்திலும் உபநிஷத்திலும் வருகிறது என்பதை முந்தின கட்டுரையில் பார்த்தோம். வடபுலத்தில் இந்திரனைப் போல, தென் புலத்தில் விரோசனன் (VIROCHANA) இருந்தான் என்றால், அவனை முன்னிட்டு, தென் புலத்தில் சூரியன் சாரமும், மக்கள் பெருக்கமும் ஏற்பட்ட நிலையை அது காட்டுகிறது. விரோசனன் என்னும் பெயர் உச்சரிப்பை ஒட்டியே விரகோசன் (VIRACOCHA) என்னும் கடவுள் தென் அமெரிக்க இன்கா (INCA) மக்களால் வணங்கப்பட்டான். அந்தக் கடவுளது உருவத்தைக் கீழுள்ள படங்களில் காணலாம்.

 

விரகோசனது மகன் இன்டி (INTI) எனப்படும் சூரியன். அந்த சூரியக் கடவுள்உருவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 

இரண்டு கைகளிலும் எதையோ தாங்கிக் கொண்டு இருக்கிறார். அது மலர் அல்லது மொட்டு போல இருக்கிறது. தலை சூரியன் வடிவில் இருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதே போலத்தான் வேத மரபிலும் சூரியன் உருவம் செதுக்கப்படுகிறது. கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

 


சிற்ப சாஸ்திரம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் ஒவ்வொரு தெய்வத்தையும் எப்படி வடிக்க வேண்டும் என்ற விதி முறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் படி சூரியன் இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும், நின்ற கோலத்திலும், வடக்குப் பகுதி நாகரிகத்தில் உடையும் அணிந்திருக்க வேண்டும். வடக்குப் பகுதி உடை என்று எதைச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் கிடைத்துள்ள கீழ்க்காணும் சிலையில் சூரியன் பைஜாமா (PYJAMA)   போல இடுப்புக்குக் கிழே உடையணிந்திருப்பதைக் காணலாம். மேலுள்ள படத்திலும் அவ்வாறே வித்தியாசமான உடை காணப்படுகிறது.



இப்படிப்பட்ட அமைப்பில் இன்கா நாகரிகத்தின் விரகோசனும் காணப்படுவது எவ்வாறு? இந்தியாவிலிருந்து இன்காவுக்கு எப்படிப் போயிருக்க முடியும்? அல்லது இன்காவிலிருந்து இந்தியாவுக்கு எப்படி வந்திருக்க முடியும்?



வேதம் தந்த ஆரியனின் ஆரம்ப இருப்பிடம் ஐரோப்பா என்று திராவிடவாதிகளும், சில ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்களே, வேத மரபின் முக்கியக் கடவுளான சூரியனை இதே போலத்தான் ஐரோப்பியப் பகுதிகளிலும் சித்தரித்தார்களா? 


அங்கு நிலவிய எந்த பழைய நாகரிகத்திலுமே, இப்படிப்பட்ட அமைப்புகளுடன் சூரியன் உருவம் சித்தரிக்கப்படவில்லை. அங்கு காணப்ப்டும் சூரிய உருவங்கள் வேறாக இருக்கின்றன.

கீழே உள்ளது எகிப்திய சூரியக் கடவுளான 'ரா' .

அங்கு நிலவிய எந்த பழைய நாகரிகத்திலுமே, இப்படிப்பட்ட அமைப்புகளுடன் சூரியன் உருவம் சித்தரிக்கப்படவில்லை. அங்கு காணப்ப்டும் சூரிய உருவங்கள் வேறாக இருக்கின்றன.
கீழே உள்ளது எகிப்திய சூரியக் கடவுளான 'ரா' .



இது கெல்டுகளது சூரியன்.


இது சுமேரிய சூரியன்.
 

இது அக்காடியர்களது சூரியன்.


இது ரோமானியர்களது சூரியன்.

இவை எதுவுமே பாரத நாட்டின், வேத மரபில் அமைந்த சிற்ப சாஸ்திரத்துக்கு உட்படவில்லை. ஆனால் தென் மேற்கு அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரப் பழமையான நாகரிகத்தில் மட்டும் நம் நாட்டு அமைப்பில் சூரியனது உருவம் இருக்கிறது. அதிலும், புராணங்கள், வேத உபநிஷதங்கள் சொல்லும் தைத்திய அசுரனான விரோசனனது பெயரில் இருக்கிறது என்பதால், அவரகளுக்கும் வேத மரபினருக்கும் ஆதியில் தொடர்பு இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அந்த்த் தொடர்பு ஏற்பட்டிருக்கக்கூடிய இடம் தைத்திய குடியிருப்பான பாதாளம் இருந்த இந்தோனேசியாவாகத்தான் இருக்க முடியும்.  


தைத்தியக் குடியிருப்பின் பாதாளத்தில் விரோசனன் வாழ்ந்தான். அவனுக்குப் பிறகு அவன் மகன் பலி வாழ்ந்தான். பலியின் காலத்தில் அவனை வாமனர் வென்று பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார் என்பதே நமது புராணங்களில் சொல்லப்படுகிறது. 


இதை மேற்கொண்டு ஆராய்வதற்கு முன் இங்கே மக்கள் சிதறல் எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.  கீழ்க்காணும் படத்தில் இந்தியக் கடலில் நாம் முன்பே ஆராய்ந்த 90 டிகிரி மலைத் தொடர், குமரி அல்லது மலய மலைத்தொடர், மடகாஸ்கர் அருகே 7000 ஆண்டுகளுக்கு முன் முழுகின அமைப்புகளை வட்டத்துக்குள் காணலாம். 



அது போல இந்தோனேசியப் பகுதியும், ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பல சிறு பகுதிகளும் வெளிர் நிறத்தில் காணப்படுகின்றன. பனி யுகம் இருந்த போது, அந்தப் பகுதிகள் ஆங்காங்கே நீருக்கு மேலே நிலப்பகுதிகளாக இருந்தன. 


இந்தோனேசியப் பகுதியில் தோபா போன்ற ஒரு எரிமலை வெடித்தால், அதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவர். நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி என்னும் ஆழிப் பேரலை ஏற்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும். அந்த காரணத்தினாலும் தென்னன் தேசம் இருந்த 90 டிகிரி மலைப் பகுதி படிப்படியாக நீரில் முழுகி இருக்கிறது. 


இந்தோனேசியாவில் ஒரு இயற்கைப் பிரச்சினை என்றால், அதற்கு மேற்கே உள்ள தென்ன்ன் தேசத்தினர், இந்தியாவை நோக்கி இடம் பெயர்வார்கள். இந்தோசியாவின் கிழக்கே இருந்த மக்கள் மேலும் கிழக்கு நோக்கி பசிஃபிக் கடலில் வாழ இடம் தேடுவார்கள். அப்படி அவர்கள் சென்றடைந்த இடம் தான் தென் அமெரிக்கா!


இந்தப் படத்தில் அவ்வாறு மக்கள் சிதறிச் சென்றிருக்க்கூடிய இடங்களை மஞ்சள் நிற அம்புக் குறிகளால் காட்டியுள்ளேன்.


இதில் இந்தோனேசியாவின் வடக்கு நோக்கி நில வழியாக அதிகம் போயிருக்க மாட்டார்கள். அதிக பட்சம் ஜப்பான் வரை சென்றிருக்கிறார்கள். சூரியன் நகர்வால், தென்பகுதி குளிரடைந்த காலத்தில் மட்டுமே சைபீரியா வரை சென்றிருக்கிறார்கள். மற்ற காலக் கட்டங்களில், இயற்கைப் பேரழிவின் போது, அடுத்தடுத்து இருக்க்கூடிய வாழத்தக்க இடஙகளுக்கு – பெரும்பாலும் தீவுக் கூட்டங்களில் இடப்பெயர்வு செய்திருக்கிறார்கள். 


இந்தத் தென் பகுதியிலேயே சூரியனை விரோசனன் என்று, தாமரை மலர் ஏந்தினவனாக உருவகப்படுத்தியிருந்தால்தான், இங்கிருந்து இரு புறமும் சிதறிய மக்கள் அதே விரோசனனை எடுத்துக் கொண்டு சென்றிருக்க முடியும். 


கீழ்க்காணும் படத்தைப் பாருங்கள். ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிஃபிக் கடலில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு தீவுகளை இது காட்டுகிறது.

 


கூட்டாகப் பாலினேசியா எனப்படும் இந்த்த் தீவுக் கூட்டங்களில் அடுத்தடுத்து சென்று தென் அமெரிக்காவின் சமீபம் வர செல்லலாம். இவற்றுள் கிழக்குக் கோடியில் இருப்பது ஈஸ்டர் தீவு எனப்படும். 


அதிலிருந்து தென் அமெரிக்க இன்கா நாகரிகம் இருந்த இடமான பெரு வரை உள்ள தூரத்தை இந்தப் படத்தில் காணலாம். 



ஈஸ்டர் தீவுக்கும் பெரு பகுதி இருக்கும் தென் அமெரிக்க்க் கடற்கரைக்கும் இடையே எந்த்த் தீவுகளோ அல்லது முழுகியிருக்க்கூடிய சாத்தியத்தில் ஆழ்கடல் அமைபுகளோ இல்லை. அப்படி என்றால் இத்தனை தொலைவுக்கு அவர்கள் படகில் சென்றிருக்க முடியுமா என்பது ஒரு கேள்விக் குறியே. கடலிலேயே வாழ்ந்த மக்களாதலால் இது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் தென் அமெரிக்க்க் கரையை அடைந்தவுடன் அவர்கள் அங்கு சுவர் போல இருந்த ஆண்டிஸ் மலையில் ஒரு குகைப் பாதையில் நுழைந்து சென்றிருக்கிறார்கள்.


இன்கா பகுதிகளின் பழைய கதைகளில், ஆண்டிஸ் மலையில் இருந்த ஒரு துவாரத்தின் வழியாக மக்கள் வந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மலைக்குள் செல்லும் குகைப் பாதை வழியாக எங்கிருந்தோ அந்த மக்கள் அங்கு வந்திருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட குகைப் பாதைகள் பசிஃபிக் கடலுக்குள்ளும் இருந்திருக்கலாம். ஈஸ்டர் தீவு இருக்கும் பகுதிகளில் கடலுக்கடியில் எரிமலைக் குழம்புகள் ஓடிய தடங்களில் இயற்கையாகவே சுரங்கப் பாதைகள் உண்டாகி இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆழ்கடல் வரைபடத்தைப் பார்க்கும் போது,  நாஸ்கல் ரிட்ஜ் (NAZCAL RIDGE) என்னும் பூமித் தட்டுப் பகுதி செல்கிறது. ஈஸ்டர் தீவு முதல் தென் அமெரிக்க்க் கரை வரை செல்லும் இந்த ஆழ்கடல் அமைப்பினூடே ஏதேனும் சுரங்க வழி இருந்தால், அதன் வழியாக மக்கள் சென்றிருக்கலாம். இது வரை யாரும் அவற்றை ஆராய்ந்ததில்லை.இப்படிச் செல்லும் நாஸ்கல் ரிட்ஜை இந்தப் படத்தில் காணலாம். 




இது தென் அமெரிக்க்க் கண்டத்தின் அடியில் முடிகிறது.


இங்கு ஒரு விவரத்தைச் சொல்ல வேண்டும். இந்தியப் பெருங்கடலில்லெமூரியா கண்டம் இருந்தது என்று சிலர் நம்புவது போல, பசிஃபிக் பெருங்கடலிலும் மேலே காட்டியுள்ள இடத்தில் 'மூ' (MU) என்னும் கண்டம் இருந்தது என்று ஒரு கருத்து இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

நன்றி:
திருமதி ஜெயஸ்ரீ (தமிழன் திராவிடனா?)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.