காசிப கோத்திரம் கொண்ட சேதுபதிகளில்
சேதுபதி செப்பேடுகளில் பல செய்திகளில் பல செய்திகள் வரும் செய்திகள் பல முறை நாம் பார்த்திருந்தால் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வருகிறது அவை ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக உள்ளது.
சேதுபதிகளை இராமபிரான் அவதாரம் என்றே புலவர்கள் அழைத்தனர்.
"சேதுபதி தெரிசனமே இராமலிங்க தெரிசனமாய் செப்பலாமே"
"சேதுபதி என்ற நர சென்மமெடுத்தாய் கமல மாதுபதிக்கு உன் பேர் வாய்க்குமா பூதலத்தில் நீயே இரகுராமனாய் நின்னையிங்கு பெற்றடுத்த தாயே யரு கோசலை""
சேதுபகளில் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் அவர்களை சேதுங்கராய வங்கிஷன்என்ற செயதுங்கராய வங்கிஷம் என்றும் அழைக்கபட்டனர்.
சேது என்ற பெயர் அனையை குறிக்காது!!!!!!!!
நாம் பலகாலம் நினைத்தது போல் சேது என்பது பாலம் இல்லை அது "செயது" ஆதாவது வெற்றிதிருநகரம் என்ற பெயரின் அர்த்தமே "சேது" என்று திரிந்துள்ளது. இராமஸ்வரம்என்ற நகரம் "வெற்றி நகரம்" அதாவது "செயது" அல்லது "ஜெயது" என்ற "ஜெயதுங்கன்" என்ற
ஸ்ரீராமனையும் சோழனான குலோத்துங்கனையும் அழைக்கபட்ட பெயரே "சேது" என்று அழைக்க பட்டனர்.
"மூவேந்தருமற்று சங்கமும் போய்பதின் மூன்றோடெட்டுக் கோவேந்தரும் அட்டு.........தாரு வொத் தாய் ரகுநாத செயதுங்கனே".
சோழர்கள் தங்களை காசிபர்--சூரியன் வழி வந்த கோத்திரமாக சொல்கிறார்கள் அதே போல்
சேதுபதியும் தன்னை காசிப கோத்திரம் என்று கூறுகிறார்.
ஆனேயேறி செப்பேடு:
காலம்|:1658
மன்னன்:திருமலை சேதுபதி:
செய்தி:
சேதுபதி அரசர்கள் கௌடிண்ய கோத்ரம் அப்ஸ்தம்ப சூத்திரத்தை சேர்த்த
ராமய்யன் மகன் அகோபலனுக்கு கொடுத்த கொடை.
செப்பேடு:
ஸ்வஸ்திஸ்ரீ............பரராசசேகரன் பரராசசிங்கம் ரவிகுலசேகரன் ரவிவர்மன்............
பதினெட்டு பாளையக்காரர் மிண்டன்.........ஸ்ரீமன் செயதுங்கராயன் வம்சாதிபநான......
குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் இருக்கும் ஸ்ரீ திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவரர்கள்
புத்திரன் காஸ்யப கோத்திரத்து ஸ்ரீ ஹிரன்யகர்ப்பயாஜி திருமலை ரெகுநாத சேதுபதி காத்த
தேவர்கள் கௌண்டின்ய கோத்திரத்து அபஸ்தம்ப சூத்திரத்து செவிய்யராமய்யன் புத்திரன்
அஹோபலய்யனுக்கு பூமிதான தர்மம்........
விளக்கம்:
திருமலை சேதுபதி மகனாகிய காஸ்யப கோத்திரத்து ரகுநாத சேதுபதி காத்த தேவர்கள்.என கூறியுள்ளார். சோழர்களும் காஸ்யப கோத்திரத்தை சார்ந்தவர்கள்,சேதுபதியும்காசிபகோத்திரம் குலோத்துங்கன் பெயரான ஜெயதுங்கராயன் வம்சம் என கூறியுள்ளனர்.
சிலருக்கு கேள்வி எழலாம் பிராமனர்களும் கோத்திரம் சொல்கிறார்கள் மன்னர்களும் கோத்திரம்
சொல்கிறார்கள் எப்படி என கேட்கலாம். ஆனால் பிராமனர்கள் கோத்திரம் சூத்திரம் என்று
அந்தனர்குரிய இரண்டும் கூறுவார்கள். இதிலே
சேதுபதி காஸ்யப கோத்திரம் என்றும் அஹோபலய்யன் கௌண்டின்ய கோத்திரம்
அபஸ்தம்ப சூத்திரம் என வருகிறது.
மனுநீதி சோழன் வழி வந்த சேதுபதி:
திருப்பொற்கோட்டை செப்பேட்டில்...........
துட்டநிக்கரக பரிபாலன் மனுநீதி சோழன் மன்மத சொருபன்.............
செம்பிநாடுடையோன் வைகையாருடையோன்...........அசுபதி கெசபதி........
சேதுபதி பிரித்திவிராஜ்யம் பன்னியருளிய...........
சேதுபதி ஷத்திரியன் அல்ல சக்கரவர்த்தி:
==========================================================
நிறைய பிராடுகள் ஷத்திரியன் என கதைவிட்டு கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஷத்திரியன் என்பது போர்வீரன் ஆனால் மன்னர் இராஜ இராஜர்கள் மன்னர்களுக்கும் மன்னர்கள்
அதாவது சக்கரவர்த்திகள்.
சாருவூரேனந்தல் செப்பேடு:
அரசன்:குமாரமுத்து விசைய ரகுநாத சேதுபதி
காலம் : 1755
செய்தி: சாருவூரனேந்தல் பள்ளர் சமூக உலகாண்டிக்கு தந்த செப்பேடு
செப்பேடு:
அஸ்டலெட்சுமி பொருந்தியவன்.........ஞான சோழநீதி தவராத சுத்த வீரன்
நவகோடிராயன் நவகண்ட சக்கரவர்த்தி கெங்கை முதல் குமரி வரை செங்கோல்
நடத்திய தீரன்..........சேது நிலையிட்ட குமார முத்து விசைய ரகுநாத சேதுபதியவர்கள்....
.....சாணான் வயலுக்கு தெற்கு இன்னாங்கு....
மடமும் ஊரனியும் தர்ம பரிபாலினம் பன்ன சொல்லி.....பள்ள உலகனாண்டி பாரிசம்
பன்னி. தேவதாயம் ராசாக்கள் நாயக்கமாற் ராவுத்தமாற் துரைமக்கள் தேவமார்
பாளையக்காரர் ஊளியக்காரர்..........
ஷத்திரியனை விட பெரிது சக்கரவர்த்தி பட்டம். நவகண்ட சக்கரவர்த்தி என்றால் ஒன்பது
கண்டங்களுக்கும் சக்கரவர்த்தி.[நவகண்டம் எனபது வேறு நவகாண்டம் என்ற நரபலி வேறு]
இதில் இன்றை பள்ளர் சமூகம் நம் மீது எவ்வளவு வன்மம் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சேதுபதி ஒரு பள்ளருக்கு மடத்தையும் ஊரனியையும் பராமரிக்க பட்டயம் வழங்கியுள்ளார்.
சேதுபதி ஸ்ரீராமர் கோவிலுக்கு வழங்கிய கொடை:
---------------------------------------------------------------------------
ரவிகுலம் என்ற சூரியகுல சேதுபதிகளுக்கும் வைகுண்டவாசியான ரவிகுல ஸ்ரீ ராமருக்கு தந்த கொடை
இடம்:மன்னர் சலாப செப்பேடு
மன்னர்:விஜய ரகுநாத சேதுபதி
காலம்:1714
செப்பேடு:
ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாத்தம்............
வைகை வளநாடன் செம்பி வளநாடன் கந்தனமதன வெற்பினான் அரசராவண ராமன் பரராச
கேசரி பரராச கெஜ சிங்கம் ரவரிவர்மன் ரவிகுலதிலகன்...........
........ஹிரன்யகர்பயாஜி விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள்..
வைகுண்டவாசியான ரெகுவங்கிஷோதயரான ஸ்ரீ ராம ஸ்வாமிக்கு ராவண ஹத்தியா விமோசனம்..
செய்தி:
வைகுண்ட வாசியான ஸ்ரீ ராமன் ராவனனை வதம் செய்த தோசம் நீங்க விமோசனம்
தந்த ஸ்ரீ இராமநாதருக்கு ரவிகுல திலக சேதுபதி வழங்கிய கொடை.......
தாளனூர் செப்பேடு:
.........ராசகுல தீபன் வீராதிவீரன்..............தெட்சின சிங்காசனாதிபதி சேதுகாவலன்.......
ஹிரன்யகற்பயாசி ரவிகுல ரகுநாத சேதுபதி காத்த தேவர்..........
சேதுபதி தெட்சின சிங்காசனாதிபதி(தென்னகத்தின் சிங்காசன மன்னர்) என
வந்துள்ளது.
சோழநாட்டின் பல எல்லைகளை ஆண்ட சேதுபதி:
சேதுபதி வழங்கிய கொடைகளில் பல ஊர்களை தானமாக பல ஆதினங்களுக்கும்
வழங்கிய பட்டயங்களில் சோழநாட்டில் உள்ள பட்டுக்கோட்டை,திருவாரூர்,திருச்சி
போன்ற இடங்களில் பல ஊர்களை வழங்கியுள்ளனர்.
இதிலிருந்து திருமலை சேதுபதி காலத்திலிருந்து பின் கிழவன் சேதுபதி வரை
பட்டுக்கோட்டை,திருவாரூர்,திருச்சி முதல்.....கடல் வரை தெற்கே தூத்துகுடி வரை
ஆண்ட சேதுபதிகள்.கிட்ட தட்ட பாண்டிய ராச்சியத்தை விட பெரிது.........
இடம்:திருப்பெருந்துறை செப்பேடு
காலம்:1661
மன்னர்:திருமலை சேதுபதி ரகுநாத தேவர்
செய்தி:
திருவாடுதுறை ஆதினத்திற்கு பல சீமைகளில் உள்ள ஊரை வழங்கியுள்ளனர்.
செப்பேடு:
........சுப்பிரமனைய பாதாரவிந்தன் பரராச சூரியன் பரராச சேகரன் இரவிகுல சூரியன்....
.......துரைராயன்.....செயதுங்கராயன் வம்சாதிபதியான துகவூர் கூற்றத்து.குலோதுங்க
சோழநல்லூர் கீழ்பால்.விரையாத கண்டனில்.....
சேதுபதியின் பட்டங்களில் சிறந்த "ஏழைபங்காளன்" விருது:
கண்டனூர் செப்பேடு:
....செம்பி வளநாடன் சேதுகாவலன்....ஏழைபங்காளன்...ரவிகுல முத்து விசய ரெகுநாத ராமலிங்க
சேதுபதி........
சேதுபதியின் ஆளுகைக்குட்பட்ட அறந்தாங்கி தொண்டைமான்கள்:
--------------------------------------------------------------------------------------------------
சில மூதேவிகள் நாங்கள் பலகாலமாக தொண்டைமான்களாக இருக்கிறோம் என சொல்லும்
முட்டள்களுக்கு.......அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதியின் வம்சத்தை சேர்ந்தவர்
என்பதோடு அவரின் கீழ் தொண்டாற்றிவர்...
கணக்கன்வயல் செப்பேடு:
இடம்:கனக்கன்வயல் செப்பேடு:
அறந்தாங்கி அரசு தொண்டைமான் மர்பு பற்றி அவர்கள் சேதுபதி அரசர் மரபினருக்கு உட்பட்டு அரசு
புரிந்த செய்தியும்......அரசு ஏகாம்பர தொண்டைமானுக்கு உரிய பொன்னை வாங்கி தந்துள்ளனர்.
மதுரை மின்னல் பொன் சேதுபதி,தொண்டைமானார் ஆளுகை வழங்க பெற்றுள்ளது.
செப்பேடு:
சேதுபதி காத்த தேவர் காரியத்துக்கு கர்த்தரான அட்டவனை பிள்ளைமாரும் ரெகுநாத தொண்டைமானவர்களு காரியத்துக்கு சுந்தரபாண்டிய தேவனும் தன்மத்துக்கு....
புதுவைக்கோட்டை செப்பேடு:
அரசர்:சேதுபதி ரகுநாத தேவர்
காலம்:1680
சேதுபதி கட்டளைக்கு சின்னவன் கையில் அழகப்ப தொண்டைமானார் கட்டளைக்கு...
செய்தி:
......பராசசேகரன் ரவிகுலசேகரன் .....வைகை வளநாடன்.சேதுங்கராயன் வங்கிஷாதிபனான
...ரகுநாத தேவர்களுக்கு புன்னியமாக அவுடைய பரம சுவாமிக்கு.......
அழகப்ப தொண்டைமானார் கட்டளை.......
சேதுபதியின் சில விருதுகள்:
--------------------------------------
கந்தனமாதன் பிரியன்
திருவனை காவலன்
சேதுகாவலன்
இராமநாதசுவாமிகாரிய துரந்திரன்
தேவை நகராதிபன்
தனுஷ்கோடி காவலன்
சேதுமூலரட்சா துரந்திரன்.
சேதுபதி காலத்தில் நிலவி வரிகள் சிலர்.
பட்டுகோட்டை செப்பேடு:
அரசர்: கிழவன் சேதுபதி
காலம்:1706
கிழவன் சேதுபதி என்றும் இரகுநாத தேவர் பட்டுகோட்டை கசுபாவை சார்ந்த பகுதிகளில் வரும் வருவாயில் ஒரு பகுதியை திருபெருந்துறை சிவன் கோவிலுக்கு அளித்த கொடை
செப்பேடு:
..............இரவிகுலசேகரன் இரவி மார்தாண்டன்...இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன்னர்
சிங்கம்......செம்பிவளநாடன் ஸ்ரீ மது ஹிரன்யகர்பயாஜி ஸ்ரீ மது ரகுநாத திருமலை
சேதுபதி காத்ததேவர்.......சாராயகுடிகள் பனை இறக்குகளில் கால்பணமும் துவசத்து இடைகுடியானுக்கு திருவிளக்கு அரைப்படி நெய்யும்.....
சோனர்கள் பட்நூல்காரர்கள்..வள்ளுவன் பறையன் எந்த சாதியிலே தறிப்போடாலும் நெசவன்
தறி ஒன்னுக்கு ஒரு பணமும் பனையேரி சாணான் குடி ஒன்னுக்கு......
முப்பது பல கருப்பகட்டியும்...
செம்பிநாடு குருச்சிநாடு அஞ்சுகோட்டை நாடு பட்டுகோட்டை சீமை நம்மிட சீமையிலிருக்கபட குடிகள்....
களத்தூர் செப்பேடு:
காலம்:1709
மன்னர்:கிழவன் சேதுபதி
கரம்பகுடியில் கள்ளர் சமூகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும் பெரு வீரருமான ராயத் தொண்டைமானார் என்பவர்....இரகுநாதராய தொண்டைமானாரை தன் தளபதியாக்கி கொண்டார்
கிழவன் சேதுபதி..
இரகுநாத ராய தொண்டைமானாருக்கு காதலி என்ற..... காதலி என்ற மலைவளர் காதலி அம்மன் பெயரின் பெயராகும்.....
செம்பிநாட்டு மறவர்குலதிலகமான கிழவன் இரகுநாத சேதுபதி கள்ளர் குலப் பெருவீரன் இராய தொண்டைமானார் மகுளும் தொண்டைமான் சகோதரியை மனம் செய்து கொண்டார்.
செம்பி நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர்கள் சேதுபதி சிவகனை ஆட்சியாளர்களும் இவரே ஆவர்.
இவர்கள் நாடுகள் கல்வெட்டுகளில் கீழ்செம்பிநாடு என்று வடதலை செம்பி நாடு என்று
குறித்துள்ளனர்.
சேதுபதி அரசர் தம் முன்னோர் தஞ்சாவூருக்கு கிழக்கிலும் தென் கிழக்கிலும் வசித்து அங்கிருந்து
கடல்வழி தொண்டி துறை மூலம் சேது வந்தவர்கள். இன்னும் பல செய்திகளும் முத்துகுளிப்பு துறை பற்றிய குறிப்புகளும்
அவர்கள் சேதுபதி கட்டுபாட்டில் பாண்டியர்களுக்கு அடுத்து முத்துகுளிக்கும் துறைமுகங்கள் சேதுபதியிடம் இருந்துள்ளது.
நன்றி:
சேதுபதிகள் செப்பேடுகள்
உயர்திரு ஐயா எஸ் எம் கமால்
புலவர் செ.இராசு